இராமநாதபுரம் மாவட்டத்தில் இப்படியெல்லாம் கூட சுற்றுலா தலங்கள் இருக்கிறதா..?

Ramanathapuram District Tourist Places

மனிதனாக பிறந்த அனைவருமே இந்த உலகில் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த உலகில் நாம் பார்ப்பதற்கு எத்தனையோ அழகான இடங்கள் இருக்கின்றன. அனைவருமே அழகான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் தினமும் ஒரு சுற்றுலா தலங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!

Ramanathapuram Tourist Places in Tamil: 

தென் தமிழகத்தில் அமைத்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் தான் இராமநாதபுரம். இந்த  இராமநாதபுரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மதுரை மாவட்டமும், வடக்கே சிவகங்கை மாவட்டமும், கிழக்கே பாக் நீரினையும், தெற்கு பகுதியில் மன்னார் வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.  

மாநிலத்திலேயே அதிகளவு தீவுகளை கொண்ட மாவட்டம் இராமநாதபுர மாவட்டம் என்று சொல்லப்படுகிறது. இந்துக்களின் புனித தலமாக இருக்க கூடிய இராமேஸ்வரமும் இந்த மாவட்டத்தில் தான் அமைந்திருக்கிறது.

இராமநாதசுவாமி திருக்கோவில்: 

இராமநாதசுவாமி திருக்கோவில்

இந்த கோவில் இராமேஸ்வரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் மொத்தம் 23 தீர்த்தங்கள் இருக்கிறது. இந்த தீர்த்தங்கள் அனைத்தும் பாவங்களை போக்கக்கூடிய தீர்த்தமாக இருக்கிறது.

இந்த கோவில் தான் உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்களை கொண்ட கோவில் என்று கூறப்படுகிறது. இராமநாதசுவாமி திருக்கோவில் வெளிப் பிரகாரங்களில் 1200 தூண்கள் அமைந்துள்ளன. அதனால் தினமும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். நீங்களும் இராமநாதபுர மாவட்டத்திற்கு சென்றால் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Top 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

வில்லூண்டி தீர்த்தம்: 

வில்லூண்டி தீர்த்தம்

இந்த வில்லூண்டி தீர்த்தம் என்னும் ஊர் இராமேஸ்வரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தங்கச்சிமடம் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்திருக்க கூடிய ஒரு புனித தீர்த்த கிணறு ஆகும்.

இராமர் சீதையுடன் இராமேஸ்வரத்திற்கு செல்லும் போதும் சீதைக்கு தாகம் எடுத்தலால் தன் வில்லை பூமியில் செலுத்தி தண்ணீர் வர வைத்ததால் இந்த இடத்திற்கு வில்லூண்டி தீர்த்தம் என்ற பெயர் வந்தது. இராமநாதபுர மாவட்டத்திற்கு சென்றால் இந்த இடத்திற்கும் சென்று வாருங்கள்.

பாம்பன் பாலம்: 

பாம்பன் பாலம்

இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு செல்லக்கூடிய கடல்வழி பாலமாக இந்த பாம்பன் பாலம் அமைந்துள்ளது. இங்கு பாம்பன் சாலைவழி பாலம் மற்றும் பாம்பன் கடல்வழி பாலம் இரண்டையும் நாம் பார்க்க முடியும். இது மிகவும் நீளமான பாலமாகும். அதனால் தினமும் பல சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்=> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!

குந்துகால் கடற்கரை: 

குந்துகால் கடற்கரை

இது பாம்பன் பாலத்தில் அமைந்திருக்க கூடிய ஒரு அழகிய கடற்கரை ஆகும். இந்த கடற்கரையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த கடற்கரை பாம்பன் என்னும் ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அரியமான் கடற்கரை: 

 

அரியமான் கடற்கரை

இந்த கடற்கரை இராமநாதபுரத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ்பெற்ற அழகிய கடற்கரை ஆகும். இந்த கடற்கரையில் குழந்தைகள் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி போன்றவை இருக்கிறது. அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

அதனால் நீங்கள் இராமநாதபுர மாவட்டத்திற்கு சென்றால் இந்த இடங்களுக்கு கட்டாயம் சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா..!

 

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide