Salem Tourist Places in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் மாம்பழத்திற்கு புகழ் பெற்ற சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். சுற்றுலா செல்லவேண்டும் என்று ஆசை நாம் அனைவரின் மனதிலையும் இருக்கும். ஆனால் எங்கு செல்வது என்பது தான் மிக பெரிய குழப்பமாக இருக்கும்.
அப்படி உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா பரவாயில்லை இந்த பதிவில் சேலம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சில சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அங்கு உங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று மகிழுங்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Unique Places to Visit in Salem in Tamil:
சேலம் மாவட்டம் நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாக உள்ளது. அதனால் இங்கு சுற்றுலா ஸ்தலங்கள் அதிகம் உள்ளது. அதில் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
1. ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றான ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒருபகுதியாக அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் மிகவும் குளிர்ச்சியான மலை பிரதேசம்மாக அமைந்துள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று கூறப்படக்கூடிய ஏற்காடு சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளது. அதனால் நீங்கள் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த ஏற்காட்டினை முக்கியமாக சுற்றி பாருங்கள்.
2. மேட்டூர் அணை:
அடுத்து சேலம் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மேட்டூர் அணை. காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணைதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாக விளங்குகிறது.
சேலத்திலிருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மேட்டூர் அணைக்கு அருகில் மேட்டூர் பூங்கா என்ற ஒரு பூங்கா அமைந்துள்ளது. அதனால் இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நீங்களும் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த மேட்டூர் அணையினை முக்கியமாக சுற்றி பாருங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா
3. 1008 லிங்கம் கோவில்:
அடுத்து நாம் பார்க்க இருப்பது 1008 லிங்கம் கோவில் பற்றி தான். இந்த கோவில் சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அரியனூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள குன்று முழுவதும் 1008 லிங்கங்களும் அந்த லிங்கங்களுக்கு எதிரில் புனித பசுவான நந்தின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கும்.
அதனால் இந்த 1008 லிங்கம் கோவிலை சுற்றி பார்க்க பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நீங்களும் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த 1008 லிங்கம் கோவிலை முக்கியமாக சுற்றி பாருங்கள்.
4. குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா:
அடுத்து நாம் பார்க்க இருப்பது குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா பற்றி தான். ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில் பல விலங்குகளை பார்க்கலாம்.
சேலத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா தமிழ்நாட்டில் வண்டலூருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய பெரிய விலங்கியல் பூங்கா ஆகும். அதனால் நீங்கள் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த குரும்பப்பட்டி விலங்கியல் பூங்காவை முக்கியமாக சுற்றி பாருங்கள்.
5. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்:
அடுத்து நாம் பார்க்க இருப்பது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் பற்றி தான். இது சேலத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தாரமங்கலத்தில் அமைந்துள்ள இந்த கோவில் சிற்ப கலைகள் மிகவும் புகழ் பெற்றது.
அதனால் இந்த கோவிலின் சிற்ப கலையை பார்க்கவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நீங்களும் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலை முக்கியமாக சுற்றி பாருங்கள்.
இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
6. சங்ககிரி மலைக்கோட்டை:
அடுத்து நாம் பார்க்க இருப்பது சங்ககிரி மலைக்கோட்டை பற்றி தான். இது சேலத்திலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் சங்கரி துர்க்கம் என்ற மலையின் மேல் அமைந்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டை விஜயநகர அரசர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ ஆகும். சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும்.
அதனால் இதனை சுற்றி பார்க்க இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நீங்களும் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த சங்ககிரி மலைக்கோட்டையை கண்டிப்பாக சுற்றி பாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |