சிவகங்கையின் சிறப்பினை உணர்த்தும் அருமையான 5 சுற்றுலா தலங்கள்..!

Advertisement

 Sivagangai Tourist Places in Tamil | சிவகங்கை மாவட்டம் சுற்றுலா இடங்கள்

பொதுவாக நாம் எப்போதும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வெளியில் எங்கயாவுது சுற்றுலா சென்று வரலாம் என்று நினைப்போம். ஆனால் அப்படி சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்த பிறகு தான் எந்த ஊருக்கு செல்வது மற்றும் அந்த ஊரில் என்னென்ன சுற்றுலா தலங்கள் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இனி நீங்கள் இது மாதிரி எதையும் நினைத்து குழப்பம் அடைய வேண்டாம். உங்களுக்கு பயனளிக்கும் வகையில் நமது பொதுநலம். காம் பதிவில் தினமும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊரில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி அங்கு உள்ள சிறப்புகள் பற்றியும் தெளிவாக கூறுகின்றோம். அதனால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்

Sivagangai Tourist Places in Tamil:

சிவகங்கை மாவட்டமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984– ஆம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு 1985- ஆம் ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கியது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவகம் அமைந்துள்ள மாவட்டம் என்றால் அது சிவகங்கை மாவட்டம் தான்.

இந்த மாவட்டத்தில் கல்வி அறிவை பொறுத்தவரை தோராயமாக 95% இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள அசைவ சாப்பாட்டிற்கும் மற்றும் வீடுகளுக்கும் புகழ்பெற்ற காரைக்குடி அமைந்துள்ளது.  மேலும் சில தகவல்களை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை அரண்மனை:

சிவகங்கை அரண்மனை

சிவகங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு இடம் தான் சிவகங்கை அரண்மனை. இந்த அரண்மனை வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் மற்றும் ராணி காத்தம்ம நாச்சியார் போன்ற பல வீர தமிழ் பெண்கள் வாழ்ந்த ஒரு சிறப்பு மிக்க அரண்மனையாக இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதனால் நீங்கள் சிவகங்கைக்கு சுற்றுலா சென்றீர்கள் என்றால் கட்டாயமாக இந்த அரண்மனைக்கு சென்று வாருங்கள்.

வேலுநாச்சியார் மணிமண்டபம்:

இரண்டாவதாக நாம் பார்க்கப்போகும் இடம் வேலுநாச்சியார் மணிமண்டபம். இந்த மண்டபமானது சிவகங்கை தோண்டி ரோட்டில் உள்ள பழமலை என்னும் ஊரில் 1.09 ஏக்கர் பரப்பளவில் வேலுநாச்சியாரின் நினைவிடமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை இன்னும் சிறப்புமிக்க ஒரு அரண்மையாக திகழ்ந்து வருவதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றனர்.

ஆயிரம் ஜன்னல் வீடு காரைக்குடி:

ஆயிரம் ஜன்னல் வீடு காரைக்குடி

அடுத்து நாம் பார்க்கப்போகும் இடம் ஆயிரம் ஜன்னல் வீடு. இந்த வீடு மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பாரம்பரிய மிக்க ஒரு புகழ்பெற்ற வீடாக சிவகங்கையில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ளது. 

அதுமட்டும் இல்லாமல் இந்த வீட்டில் நிறைய சினிமா பாடல்களும் காட்சியாக எடுக்கப்பட்டுள்ளன. அதனால் நீங்கள் சிவகங்கைக்கு சென்றால் மறக்காமல் இந்த ஆயிரம் ஜன்னல் வீட்டிற்கு சென்று சுற்றிப்பாருங்கள். ஒருமுறை அங்கு சென்றால் போதும் அங்கு இருந்து வருவதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்காது.

இதையும் படியுங்கள்⇒ சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!

கண்ணதாசன் மணிமண்டபம்:

கண்ணதாசன் மணிமண்டபம்

கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊர் சிவகங்கை ஆகும். அதனால் இந்த மாவட்டத்திலேயே கண்ணதாசனின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணதாசன் மணிமண்டபமானது மிகவும் சிறப்பு மிக்க ஒரு சுற்றுலா தளமாக இருக்கிறது. ஆகையால் இதனை பார்ப்பதற்கு என்று வெளியூரில் இருந்து கூட நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதனால் நீங்கள் சிவங்கைக்கு சென்றால் இந்த கண்ணதாசன் மணிமண்டபத்திற்கு சென்று வாருங்கள்.

கானாடுகாத்தான் அரண்மனை:

கானாடுகாத்தான் அரண்மனை

கானாடுகாத்தான் அரண்மனை சிவங்கையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை கானாடுகாத்தான் அரசரால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் உள்ள தூண்கள் முதல் கதவுகள் வரை என அனைத்தும் அவ்வளவு அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனையின் கட்டிட கலைக்கு வேறு எதுவும் ஈடு இணையே இல்லை என்று கூறும் வகையில் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாகவும் மற்றும் பாரம்பரியமாகவும் கட்டப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த அரண்மைக்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை தவிர இந்த இடத்திற்கும் மறக்காமல் சென்று வாருங்கள்..!

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement