Theni District Tourist Places in Tamil
தமிழ்நாட்டின் மிகவும் அழகான மாவட்டம் என்றால் தேனி மாவட்டத்தை கூறலாம். வானுயர்ந்த மலைகள் சூழ்ந்த பசுமையான அழகுடன் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைத்துள்ளது இந்த தேனி மாவட்டம். இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. எனவே இன்றைய பதிவில் தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து தேனி மாவட்டத்தில் மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி அறிந்துகொண்டு. அடுத்தமுறை நீங்கள் தேனிக்கு சென்றால் இந்த பதிவில் கூறியுள்ள சுற்றுலா தலங்களுக்கெல்லாம் கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Top 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Theni Tourist Places in Tamil:
அல்லிநகரம் என்று அழைக்கப்படும் தேனி மாவட்டம் மதுரையில் இருந்து 1996-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இது பல இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கிறது.
எனவே இந்த மாவட்டத்தை பூலோக சொர்க்கம் என்றும் கூறுவார்கள். இந்த மாவட்டம் இயற்கையை விரும்பக்கூடிய நபர்கள் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய ஒரு இடம் ஆகும். இங்குள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி பார்க்கலாம்.
1. வைகை அணை:
நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் வைகை அணை தான். இந்த அணை தேனிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வைகை ஆற்றிற்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த அணை தேனி மாவட்டத்தின் மிகவும் அழகான மற்றும் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று ஆகும். எனவே அடுத்தமுறை நீங்கள் தேனிக்கு சென்றால் இந்த வைகை அணைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்
2. மேகமலை:
நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் மேகமலை தான். இது தேனிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து இருக்கிறது.
நாம் இங்கு சென்றால் தவழும் மேகங்களை பார்க்கலாம் என்று கூறுவார்கள். மேலும் இங்கு பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலென்று இயற்கை எழிலுடன் காட்சி அளிப்பதால். இதனை சுற்றி பார்க்க பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே அடுத்தமுறை நீங்கள் தேனிக்கு சென்றால் இந்த மேகமலைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
3. சுருளி அருவி:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் சுருளி அருவி தான். இது தேனிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் கம்பத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
சுமார் 40 அடி உயரத்திலிருந்து தண்ணீர் விழக்கூடிய இந்த அருவியில் ஜூன் – அக்டோபர் மாதங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இங்கு சுற்றி பார்க்க பல இடங்கள் இருக்கிறது.
அதனால் இங்கு சுற்றி பார்க்க பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே அடுத்தமுறை நீங்கள் தேனிக்கு சென்றால் இந்த சுருளி அருவிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
4. மகாராஜா மெட்டு:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் மகாராஜா மெட்டு தான். இது மேகமலை பகுதியில் அமைந்துள்ள மிகவும் அழகான ஒரு இடமாகும். இந்த இடம் மேகமலை பேருந்து நிறுத்தத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கிருந்து மேகமலையின் பசுமையான தேயிலை தோட்டங்களையும், கம்பம் பள்ளத்தாக்கினையும் முழுதாக பார்க்கலாம். அதனால் இங்கு சுற்றி பார்க்க பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
எனவே அடுத்தமுறை நீங்கள் தேனிக்கு சென்றால் இந்த மகாராஜா மெட்டுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
5. தேக்கடி:
நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா ஸ்தலம் எதுவென்றால் தேக்கடி தான். இது தேனிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் தமிழக கேரளா எல்லையில் உள்ள குமிழில் அமைந்துள்ள மிகவும் அழகான ஒரு சுற்றுலா தலமாகும்.
இங்கு அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செல்வதற்கு என்று பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே அடுத்தமுறை நீங்கள் தேனிக்கு சென்றால் இந்த தேக்கடிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |