தூத்துக்குடியில் பார்க்க வேண்டிய இடங்கள்
பொதுவாக சுற்றுலா செல்லும் அனைவரும் எப்போதும் வெளி ஊறுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் அங்கு சென்றால் தான் புது புது இடங்களை பார்க்க முடியும் என்று அவர்களுக்குள் ஒரு ஆசை. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டிலேயே கண்ணை கவரும் விதமாக நிறைய ஊர்கள் இருக்கிறது. அந்த ஊறுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். தூத்துக்குடி என்று சொன்ன உடனே நியாபகம் வருவது உப்பு. ஆனால் உப்பு மட்டும் தெரிந்த நமக்கு தெரியாத பல விஷயங்களும் சுற்றுலா தளமாக தூத்துக்குடியில் இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலா இடங்களை பற்றி தெரிந்துக்கொண்டு இந்த முறை தூத்துக்குடிக்கு சென்று வரலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!
Thoothukudi Tourist Place in Tamil:
தூத்துக்குடியில் உப்பிற்கு அடுத்து துறைமுகங்கள் பிரபமாக இருக்கிறது. அந்த துறைமுகத்தில் நிறைய பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய படுகின்றன. இந்த இரண்டு இல்லாமல் மற்ற சுற்றுலா தளங்கல் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Ettayapuram Aranmanai:
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் வழியில் 54-வது கிலோ மீட்டரில் எட்டையபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை 500 வருடதிற்கு முன்பாக கட்டப்பட்டுள்ளது. இப்போது மிகவும் பழமையான ஒரு அரண்மனையாக இருக்கிறது.
எட்டயபுரம் பாரதியார் வீடு:
இரண்டாவதாக நாம் பார்க்கப்போகும் இடம் தமிழில் பெரும் புலமை பெற்றிருந்த பாரதியார் அவர்களின் வீடு. நீங்கள் இந்த வீட்டிற்கு சென்றால் போதும் உங்களுக்கு ஒரு மன அமைதி கிடைக்கும். பாரதியாரின் நினைவாக அந்த வீடு இப்போதும் அங்கு இடம் பெற்றிருக்கிறது. நீங்கள் தூத்துக்குடி சென்றால் மறக்காமல் பாரதியார் இல்லத்திற்கு சென்று வாருங்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில்:
அடுத்து நாம் பார்க்கப்போகும் இடம் திருச்செந்தூர் முருகன் கோவில். முருகனின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் கோவிலும் ஒன்று. இந்த கோவில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு வழிபட செல்லும் ஆண்கள் அனைவரும் உடம்பில் சட்டை அணியாமல் வழிபட வேண்டும் என்பது வழிமுறை.
இந்த கோவிலுக்கு மிக அருகில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. நீங்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றால் முதலில் நாழிக்கிணற்றில் குளித்து விட்டு அதன் பின்பு கடற்கரையில் குளித்த பிறகு கடைசியாக முருகனை வழிபட வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக இருக்கிறது.
மணப்பாடு கடற்கரை:
நான்காவதாக பார்க்கப்போகும் இடம் மணப்பாடு கடற்கரை மற்றும் ஹாலிகார்க் சர்ச். இது திருச்செந்தூரில் இருந்து 10 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது. இந்த இடம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இது தூத்துக்குடியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இங்கு நிறைய சினிமா படங்களும் எடுக்கப்படுகிறது. ஒரு தடவை இந்த இடத்திற்கு நீங்கள் சென்றால் போதும் மறக்க முடியாத அளவிற்கு உங்கள் மனதில் இருக்கும்.
தேரிக்காடு:
அடுத்ததாக நாம் பார்க்கப்போகும் இடம் தேரிக்காடு. இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் அங்குள்ள மணல்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் மட்டும் காணப்படும். இங்குள்ள மணல்கள் மற்ற மணல்களை போலவே இருக்கும் ஆனால் நிறம் முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இந்த இடம் இப்போதும் மிகவும் பிரபலமான இடமாக இருக்கிறது. அதனால் இந்த இடத்திலும் நிறைய சினிமா படங்கள் எடுக்கப்படுகிறது. மறக்காமல் தூத்துக்குடி செல்லும் போது தேரிக்காட்டிற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.
வனத்திருப்பதி:
வனத்திருப்பதி தேரிக்காட்டில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கோவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. அங்கு சென்று நீங்கள் மனதார பிராத்தனை செய்தால் நல்லது. அதுமட்டும் இல்லாமல் அந்த கோவிலின் அமைப்பு பார்த்தவுடன் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
கழுகு மலை கோவில்:
கடைசியாக பார்க்க போகும் இடம் கழுகு மலை முருகன் கோவில். இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குடைவரை கோவிலாகும். இந்த கோவில் இருக்கும் மலை மேலே வெட்டுவராயன் என்ற மற்றொரு கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அதனால் இந்த கோவிலுக்கு எப்போதும் மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பினால் தூத்துக்குடிக்கு சென்று மகிழ்ச்சியாக அனைத்து இடங்களையும் பார்த்து வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |