திருநெல்வேலி மாவட்டம் சுற்றுலா இடங்கள்
ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றிய தகவல் தான். திருநெல்வேலி என்றாலே நாம் அனைவரின் மனதிலும் தோன்றுவது திருநெல்வேலி அல்வா தான். ஆனால் அது மட்டும் தான் திருநெல்வேலியின் சிறப்பு கிடையாது. திருநெல்வேலில் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்றாக அங்கு ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றை கூறலாம். இப்படி பல சிறப்பினை தனக்குள் கொண்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் பற்றிய தகவலை இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள்:
1. மணிமுத்தாறு அணை:
நாம் முதலாவதாக பார்க்க இருப்பது மணிமுத்தாறு அணை பற்றி தான். இந்த மணிமுத்தாறு அணையானது 1958-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்டது. இந்த அணை மேற்கு தொடர்ச்சி மழைக்கு அடியில் அமைந்துள்ளதால் மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படும்.
இந்த அணை திருநெல்வேலி மாவட்டத்தின் மிகவும் முக்கியமான சுற்றுலா ஸ்தலம் ஆகும். இங்கு படகு சவாரியும் செய்யலாம். இந்த அணை திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த மணிமுத்தாறு அணை உள்ளது.
2. மணிமுத்தாறு அருவி :
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது மணிமுத்தாறு அருவி பற்றி தான். இந்த மணிமுத்தாறு அருவி மணிமுத்தாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு பெருக்கெடுத்து மணிமுத்தாறு அணையில் கலக்கின்ற இடத்தில் தான் இந்த மணிமுத்தாறு அருவி உள்ளது.
நமது குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன் குளித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த மணிமுத்தாறு அருவி மிகவும் அருமையான இடமாக இருக்கும். இந்த மணிமுத்தாறு அருவியில் எல்லா காலகட்டத்திலும் தண்ணீர் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த மணிமுத்தாறு அருவி உள்ளது.
செப்டம்பர் to மார்ச் சுற்றி பார்க்க வேண்டிய அருமையான இடம்
3. மாஞ்சோலை:
அடுத்து நாம் பார்க்க இருப்பது மாஞ்சோலை பற்றி தான். இந்த மாஞ்சோலையே திருநெல்வேலியின் மூணாறு என்று கூறுவார்கள். நீங்கள் ஊட்டி மூணாறில் பார்த்திருக்கும் அனைத்து இயற்கை காட்சிகளுமே இந்த மாஞ்சோலையிலும் இருக்கும். அதனை விட கொஞ்சம் அதிகமாகவே இயற்கை எழிலுடன் இந்த மாஞ்சோலை காணப்படும்.
இந்த மாஞ்சோலைக்கு எப்படி செல்லவேண்டும் என்றால் மணிமுத்தாறு அருவியிலிருந்து மலைக்குமேல் செல்லும் பாதை வழியாகத்தான் இந்த மாஞ்சோலைக்கு செல்ல வேண்டும்.
மாஞ்சோலை ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றாலும் இங்கு அவ்வப்போது வனவிலங்குகள் வரும் என்பதாலும், இங்கு செல்வதற்கு வனத்துறையினர் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
மாஞ்சோலையில் எப்பொழுதும் குளிர்ச்சியான சூழலே நிலவும். மேலும் இங்கு ஏற்படும் காலநிலை மாற்றங்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த மாஞ்சோலை உள்ளது.
4. திருக்குறுங்குடி :
அடுத்து நாம் பார்க்க இருப்பது திருக்குறுங்குடி என்னும் மலைக்கிராமம் பற்றி தான். மலை அடிவாரத்தில் உள்ள இந்த திருக்குறுங்குடியில் உள்ள பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இங்கு மலைமேல் மலைநம்பி என்ற ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது. அங்கு நம்பியாறு என்னும் அருவியும் உள்ளது.
இந்த திருக்குறுங்குடி திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும் நாங்குநேரியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது. நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த திருக்குறுங்குடியும் உள்ளது.
கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்கள்
5. களக்காடு :
அடுத்து நாம் பார்க்க இருப்பது களக்காடு பற்றி தான். இந்த களக்காட்டில் பழமை வாய்ந்த ஒரு சிவன் கோவிலும், வனப்பகுதியில் தலையணை என்னும் தடுப்பு அணையும் உள்ளது. மேலும் இங்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமும் உள்ளது.
இந்த களக்காடு திருநெல்வேலியிலிருந்து இருந்து 45 கி.மீ தொலைவிலும் நாங்குநேரியில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது.
6. அத்ரி மலை :
நாம் அடுத்து பார்க்க இருப்பது அத்ரி மலை பற்றி தான். இந்த அத்ரி மலை மேற்கு தொடர்ச்சி மலையில் தான் உள்ளது. இந்த அத்ரி மலைக்கு செல்லுவதற்கு கடனா நதி அணையை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த அத்ரி மலையில் உள்ள அத்ரி முனிவரின் ஆலயத்திற்கு நிறைய சிவ பக்தர்கள் வருவார்கள்.
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த ஆலயத்திற்கு அனைத்து காலங்களிலும் அனுமதி அளிக்கப்படாது. பௌர்ணமி,அமாவாசை போன்ற நாட்களில் தான் அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அத்ரி மழைக்கு எப்படி செல்ல வேண்டும் என்றால் திருநெல்வேலியிலிருந்து ஆழ்வார் குறிச்சி என்னும் ஊரிற்கு வந்து அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கடனா நதி அணையை கடந்து தான் இந்த அத்ரிமலைக்கு செல்ல வேண்டும்.
7. தோரணமலை:
நாம் அடுத்து பார்க்க இருப்பது தோரணமலை பற்றி தான். இந்த தோரணமலைக்கு மேலே உள்ள முருகன் கோவில் 2000-ம் ஆண்டு பழமையானது. இந்த தோரணமலை திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் குற்றாலத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது. அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த தோரணமலை உள்ளது.
8. பாபநாசம் :
அடுத்து நாம் பார்க்க இருப்பது பாபநாசம் பற்றி தான். இந்த பாபநாசம் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் ஊராகும். இங்கு உள்ள பாபநாசநாதர் கோயில் பழமை வாய்ந்த திருக்கோவில் உள்ளது. மேலும் இந்த பாபநாசத்தில் சிறப்பு மிக்க ஒரு அணைக்கட்டும் உள்ளது. இந்த பாபநாசம் திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவிலும் அம்பாசமுத்திரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது.
அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த பாபநாசம் உள்ளது.
9. குற்றாலம் :
அடுத்து பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரிந்த குற்றாலம் பற்றி தான். இந்த குற்றாலம் தான் திருநெல்வேலிக்கு மிகவும் பெருமை சேர்க்கும் இடமாக உள்ளது. மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
இந்த குற்றாலம் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த குற்றாலம் உள்ளது.
10. நெல்லையப்பர் கோவில்:
இறுதியாக நாம் பார்க்க இருப்பது திருநெல்வேலியின் அடையாளமான நெல்லையப்பர் கோவிலை பற்றி தான். இந்த நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இந்த கோவிலும் மிகவும் பெருமையும், பழமையும் வாய்ந்த கோவில் என்பதால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த நெல்லையப்பர் கோவிலும் உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டம் இல்லாத குளிர்ச்சியான 10 சுற்றுலா இடங்கள்
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |