தமிழ்நாட்டில் கூட்டம் இல்லாத குளிர்ச்சியான 10 சுற்றுலா இடங்கள்..!

Top 10 Tourist Places in Tamilnadu in Tamil

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பெயர்கள் | Top 10 Tourist Places in Tamilnadu in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க இயற்கையால் சூழப்பட்ட அழகான சுற்றுலா தலங்கள் பல உள்ளது. அவற்றில் சில இடங்கள் மிகவும் பிரபலமானதாக இருக்கும். அதேபோல் சில இடங்கள் பிரபலம் இல்லாததாக இருக்கும். நாம் பொதுவாக டூர் போகணும்ன்னு பிளான் போட்டோம்னா ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு இது போன்ற இடங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்று நினைப்போம். இது போன்ற இடங்கள் மிகவும் பிரபலமான இடம் என்பதால் இந்த இடங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஆனால் பேமஸ் ஆகாத டூரிஸ் இடங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டில் பேமஸ் ஆகாத அதேபோல் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத 10 குளிர்ச்சியான சுற்றலா இடங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

சிறுமலை:

Top 10 Tourist Places in Tamilnadu in Tamil – இந்த சிறுமலை திண்டுக்கல் மாவட்டத்தில்அமைந்துள்ளது, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடி உயரத்தில் இந்த சிறுமலை அமைந்துள்ளது. கோடை மற்றும் குளிர் ஆகிய இரண்டு காலங்களிலும் இந்த பகுதி மிதமான குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த சிறுமலை திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சிக்கு செல்ல மொத்தம் 18 கொண்டைஊசி வளைவுகளை கடக்க வேண்டியதாக இருக்கும். இந்த சிறுமலையில் சுற்றி பார்க்க சிறுமலை டேம், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், வெள்ளிமலை முருகன் கோயில் என நிறைய இடங்கள் அமைந்துள்ளது.

பன்றிமலை:

திண்டுக்கல்லை சுற்றி பார்க்க நினைப்பவர்கள் அதிகபட்சம் கொடைக்கானலுக்கு தான் செல்வார்கள். அதே வரிசையில் அமைத்திருக்கும் பன்றிமலை யாருக்கும் அவ்வளவு பெரிய அளவு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. பன்றிமலை திண்டுக்கல்லில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடமும் அதிகள் குளிர்ச்சியும் இல்லாமல் அதிக வெப்பமும் இல்லாத நடுநிலையான தட்பவெப்பத்தில் இருக்கும்.

பூம்பாறை:

பூம்பாறையும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த இடம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு காட்சியளிக்கும். கொடைக்கானலுக்கு வருபவர்கள் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இந்த பூம்பாறையை தேர்வு செய்யலாம்.

மன்னவனூர்:

இந்த மன்னவனூரும் கொடைக்கானலில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறைக்கு அடுத்து அமைந்துள்ளது. இங்கு சுற்றிப்பார்க்க மிகவும் அழகான மற்றும் அமைதியான மன்னவனூர் ஏரி, வியூபாயின், நீர்வீழ்ச்சி என கண்களை கவரும் அளவிற்கு இருக்கும்.

கூக்கால்:

இதுவும் கொடைக்கானலில் அமைத்துள்ள மிகவும் அழகான மலைக்கிராமம் ஆகும். இந்த இடமும் பூம்பாறை, மன்னவனூர் ஆகிய ஊர்களுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கூக்கால் நீர்வீழ்ச்சி, திரில்லிங்கான வியூப் பாயிண்டுகள், அமைதியான ஏரி போன்ற பலவகையான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்கள்

மசினகுடி:

இந்த மசினகுடி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லக்கூடிய நெடுஜாலியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது அழகான இடம் என்று சொல்லலாம். பொதுவாக நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் போன்ற பிரபலமான இடங்களுக்கு தான் செல்வார்கள். இந்த மசினகுடி இருப்பது பலருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதில்லை. இதுஒரு வனப்பகுதியாக. இங்கு முதுமலை பூங்கா அமைந்தியல்லாது.

டாப்சிலிப்:

இது கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைத்துள்ள ஒரு பாதுகாப்பான வனப்பகுதியாக. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு மற்ற சுற்றுலா இடங்கள் மாதிரி அதிக கூட்டங்கள் இருக்காது. அதேபோல் அதிக இயற்க்கை காட்சிகள் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

மாஞ்சோலை:

இந்த மாஞ்சோலை திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் மிகுந்த சுற்றுலா இடம் ஆகும். இங்கு தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இதுவும் ஒரு வனப்பகுதியாக. மாஞ்சோலைக்கு நாம் நமது சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் நாம் முன்கூட்டிய அதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இங்கேயும் நீர்வீழ்ச்சிகள், ஏரி, டேம் போன்றவை நிறைந்த இடமாக இருக்கும்.

வால்பாறை:

இந்த வால்பாறை கோயம்பத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் குளிர்ச்சியான மலைபிரேதேசம். இது கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வால்பாறை பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆழியார் டேம், குரங்கு அருவி மேலும் அழகான இடங்கள் அமைந்துள்ளது. இங்கும் சுற்றிபார்ப்பதற்கு பலவகையான இடங்கள் அமைந்துள்ளது.

மேகமலை:

நாம் அங்கு பார்க்க கூடிய அனைத்து இடங்களும் தேயிலை தோட்டங்கள், உயரமாக மரங்கள், பசுமையான நிலப்பரப்பு, ஏரி, ஆழமான பள்ளத்தாக்கு, உயரமான மலை சிகரங்கள், தவழும் மேகங்கள் என்று பார்க்கும் இடமெல்லாம் மிகவும் அழகாக இருக்கும். இந்த மேகமலை தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேகமலை தேனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. இந்த மேகமலையிலும் சுற்றி பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளது. அதாவது மகாராஜா மெட்டு, சுருளி அருவி, சின்ன சுருளி அருவி, மங்கலதேவி கண்ணகி கோயில், ஹிவேஷ் டேம் என்று நிறைய இடங்கள் உள்ளது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide