வேலூர் மாவட்டத்தில் இவ்ளோ அழகான சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளதா..? இது தெரியாம போச்சே..!

Advertisement

Vellore District Tourist Places in Tamil 

நாம் அனைவருக்கும் நமது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அப்படி சுற்றுலா செல்வதற்கு சரியான இடம் பற்றி தான் நமக்கு தெரியாது. அதற்காக தான் நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு மாவட்டத்தில் அல்லது ஊரில் உள்ள சிறப்புமிக்க சுற்றுலா ஸ்தலங்களை பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் பல வரலாற்று சிறப்புகளை தனக்குள்ளே கொண்டுள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க 6 சுற்றுலா ஸ்தலங்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அடுத்தமுறை நீங்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்று திட்டமிடும் பொழுது இதில் கூறியுள்ள 6 சுற்றுலா ஸ்தலங்களுக்கும் கண்டிப்பாக சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா

Vellore District Tourist Places in Tamil:

1. ஸ்ரீபுரம் பொற்கோயில்:

Famous temples in vellore district in tamil

நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் இடம் ஸ்ரீபுரம் பொற்கோயில் தான். இந்த பொற்கோயில் வேலூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இக்கோவில் முழுவதும் 1,500 கிலோ தங்க தகடுகளினால் ஆனது. இக்கோவில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பூஞ்சோலைக்கு நடுவில் அமைந்துள்ளது. அதனால் இந்த ஸ்ரீபுரம் பொற்கோயில் ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது.

அதனால் நீங்கள் அடுத்தமுறை வேலூருக்கு சென்றீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு சென்று வாருங்கள்.

2. வேலூர் கோட்டை: 

Vellore famous places in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இடம் என்னவென்றால் வேலூர் கோட்டை தான். வேலூர் மாவட்டத்தின் முக்கிய வரலாற்று சின்னமாக உள்ள இந்த கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் 133 ஏக்கர் பரப்பளவில் ஒரே ஒரு நுழைவாயிலுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோட்டை கருங்கற்கலால் கட்டப்பட்ட உறுதியான கட்டுமானத்திற்கு புகழ்பெற்றது. அதனால் இந்த வேலூர் கோட்டை ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது.

அதனால் நீங்கள் அடுத்தமுறை வேலூருக்கு சென்றீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வேலூர் கோட்டைக்கு சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Top 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

3. ஜலகண்டேஸ்வரர் கோவில்:

Vellore tourist places top 5 in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இடம் ஜலகண்டேஸ்வரர் கோவில் தான். வேலூர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள இந்த கோவில் விஜயநகர பேரரசின் கட்டிட கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

அதனால் இந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூரின் ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது. நீங்கள் அடுத்தமுறை வேலூருக்கு சென்றீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

4. அரசு அருங்காட்சியகம் வேலூர்: 

Hill stations near vellore in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இடம் அரசு அருங்காட்சியகம் வேலூர் பற்றி தான். இந்த அருங்காட்சியகமும் ஏப்ரல் 1 1999- ஆம் ஆண்டில் இருந்து வேலூர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது.

இது ஒரு பல்நோக்கு அருங்காட்சியகம் ஆகும். இதன் மொத்த பரப்பளவு 9,000 சதுர அடிகள் ஆகும். அதனால் இந்த அரசு அருங்காட்சியகத்திற்கு பல சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

அதனால் நீங்கள் அடுத்தமுறை வேலூருக்கு சென்றீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த அரசு அருங்காட்சியத்திற்கு சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்

5. அமிர்தி உயிரியல் பூங்கா:

Tourist places near vellore within 50 kms in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது அமிர்தி உயிரியல் பூங்கா பற்றி தான். இந்த பூங்கா வேலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்கா சுமார் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த உயிரியல் பூங்காவில் பல வனவிலங்குகள் உள்ளன. அவற்றை காண்பதற்கே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

அதனால் நீங்கள் அடுத்தமுறை வேலூருக்கு சென்றீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த அமிர்தி உயிரியல் பூங்காவிற்கு சென்று வாருங்கள்.

6. வள்ளிமலை முருகன் கோவில்:

Vellore hill temple in tamil

நாம் இறுதியாக பார்க்க இருக்கும் இடம் என்னவென்றால் வள்ளிமலை முருகன் கோவில் பற்றி தான். இந்த கோவில் வேலூரில் இருந்து 27 கி.மீ தொலைவில் காட்பாடியில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் என்றால் 4,000-த்திற்கும் மேலான படிகளை கண்டந்துதான் செல்லவேண்டும். மேலும் மலைமேல் நின்று பல இயற்கை காட்சிகளை காணமுடியும்.

அதனால் இந்த வள்ளிமலை முருகன் கோவிலுக்கு பல சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகிறார்கள். நீங்கள் அடுத்தமுறை வேலூருக்கு சென்றீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வள்ளிமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement