விசா இல்லாமல் செல்லும் நாடுகள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்லும் நாடுகள்..! | List of visa-free Countries for Indian Passport Holders 2022

வணக்கம் நண்பர்களே.. உங்களிடம் இந்தியன் பாஸ்போர்ட் இருக்கிறதா அப்படினா விசா இல்லாமல் கிட்டத்தட்ட 50 மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வர முடியும். சர்வதேச பயணங்களை மேற்கொள்ளுபவர்களுக்கு இரண்டு வகையான பயண ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், அந்த நாட்டின் எல்லையைக் கடந்து செல்வதற்கு வழங்கப்படும் உரிமை ஆவணம் பாஸ்போர்ட். இந்த பாஸ்போர்ட் பெரும்பாலும் அந்த நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இருப்பினும் அந்த பாஸ்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு தனது சொந்த நாட்டின் எல்லையைக் கடக்கும் நபர், வேறொரு நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கு அவர் நுழைய விரும்பும் நாடு தருகிற ஒன்று தான் விசா. இந்த விசாவும் தேவைப்படும் ஒரு முக்கிய ஆவணம் தான்.

ஆனால், அனைத்து நாடுகளுக்கு நுழைவதற்கும், எல்லா நாட்டுக் குடிமக்களுக்கும் விசா என்கின்ற ஒன்று தேவைப்படாது. ஒவ்வொரு நாடும் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு விசா தேவையில்லை என்று விதிவிலக்கு அளித்திருக்கும். எடுத்துக்காட்டாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சில குறிப்பிட்ட நாடுகளில் நுழைவதற்கு விசா பெறவேண்டிய தேவை இல்லை என்று அந்த நாடுகள் விதிவிலக்கு அளித்திருக்கும். இந்த நிலையில், அப்படி பாஸ்போர்ட் மட்டும் கொண்டே ஒரு நாட்டை சேர்ந்தவர் உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதை படித்தறியலாம் வாங்க.

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லும் நாடுகள்:

passport images

விசா தேவையில்லாத நாடுகள் – ஆசிய கண்டத்தில்:

 1. பூட்டான்
 2. கம்போடியா
 3. இந்தோனீசியா
 4. லாவோஸ்
 5. மக்காவ்
 6. மாலத்தீவுகள்
 7. மியான்மர்
 8. நேபாளம்
 9. இலங்கை
 10. தாய்லாந்து
 11. திமோர்-லெஸ்ட்

இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்லும் நாடுகள் – ஐரோப்பிய கண்டத்தில்:

ஐரோப்பிய கண்டத்தை பொறுத்தவரை செர்பியா என்னும் ஒரேயொரு நாட்டுக்கு மட்டுமே இந்தியர்கள் விசா இல்லாமல்  பயணிக்கக்கூடிய நிலை உள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில்:

 1. போட்ஸ்வானா
 2. எத்தியோப்பியா
 3. கென்யா
 4. மடகாஸ்கர்
 5. மொரீஷியஸ்
 6. உகாண்டா
 7. ஜிம்பாப்வே உள்ளிட்ட 21 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் எளிதில் பயணிக்க முடியும்.

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லும் நாடுகள்:

பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் ஓசியானியாவிலுள்ள குக் தீவுகள், பிஜி, மார்ஷல் தீவுகள் உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு இந்தியர்கள் நுழைவு இசைவின்றி செல்லலாம்.

மேலும், ஜமைக்கா உள்ளிட்ட 11 கரீபியன் நாடுகளுக்கும், அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியா, எல் சல்வடோர் ஆகிய இரு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்த இரான், ஜோர்டான், கத்தார் ஆகிய மூன்று நாடுகளுக்கும் எவ்வித விசா இன்றி இந்திய பாஸ்போர்ட் மட்டும் பயன்படுத்தி பயணிக்க முடியும் என்று இந்த ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பு: இந்தியா பாஸ்போர்ட் மட்டும் வைத்துக்கொண்டு மேல் கூறப்பட்டுள்ள நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் செல்ல முடியும் என்றாலும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் நீங்கள் அந்த நாட்டில் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் அதன்பிறகு உங்களிடம் விசா கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com