2 days trip plan from bangalore in tamil
பெங்களூரு வரலாற்று சிறப்புமிக்க இடம் மட்டுமல்ல. இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் இடமும் கூட. அந்த வகையில் நீங்கள் பெங்களூருக்கு பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், கட்டாயம் அனைத்து முக்கியமான இடங்களுக்கு சென்று விட வேண்டும். ஏனெனில் பெங்களூரு ஒரு பெரிய நகரம். ஆகையால் எந்த இடத்திற்கு செல்லலாம் என்ற சந்தேகம் நிச்சயம் வரும். ஆகையால் இரண்டு நாட்கள் பயணத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்களைப் மற்றும் செலவு போன்றவற்றை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
2 நாட்களுக்கான பயண திட்டம்
நாள் | நேரம் | இடம் |
முதல் நாள் | காலை 10.00 – 11.30 வரை | திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை |
பிற்பகல் 12.00 – மாலை 4.00 வரை | மத்திய பெங்களூரில் உள்ள அருங்காட்சியகங்கள் | |
மாலை 4.15 முதல் 6.00 மணி வரை | கப்பன் பூங்கா | |
மாலை 6:15 – இரவு 8.30 வரை | எம்ஜி சாலை, பிரிகேட் சாலை மற்றும் சர்ச் தெரு | |
இரவு 8.30 மணி 10 மணி வரை | எம்ஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறந்த பப்கள் மற்றும் ஹோட்டலில் ஓய்வெடுக்கவும் | |
இரண்டாவது நாள் | காலை 10.00 – மதியம் 12.30 வரை | லால் பாக் தாவரவியல் பூங்கா |
மதியம் 12.30 – 1.30 மணி வரை | லால் பாக் | |
பிற்பகல் 2.00 – மாலை 4.00 வரை | பெங்களூர் அரண்மனை | |
மாலை 4.30 – மாலை 6.00 வரை | அல்சூர் ஏரி | |
மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை | கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் ஷாப்பிங் செய்து உங்கள் மனதுக்கு திருப்தியாக சாப்பிடுங்கள் |
முதல் நாள்:
திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை
⇒ நேரம்: தினமும் காலை 8:30 முதல் மாலை 5:30 வரை திறந்திருக்கும்.
⇒நுழைவுக் கட்டணம்: இந்தியர்களுக்கு ₹ 15, வெளிநாட்டினருக்கு ₹ 200 வசூலிக்கப்படுகிறது.
⇒ புகைப்படம்: ₹ 25
அரண்மனையைசுற்றி பார்த்த பிறகு , பல வரலாற்று கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைக் கொண்ட பெங்களூரின் மையப் பகுதிக்குச் சென்று பார்வையிடவும்.
கப்பன் பூங்க
⇒ கப்பன் பூங்கா வழியாக நடந்து செல்லுங்கள் அல்லது புல்வெளிகளில் ஓய்வெடுக்கவும்
⇒ பெங்களூர் மீன்வளத்தைப் பார்வையிடவும்
⇒ பூங்கா வழியாக பொம்மை ரயிலில் பயணம் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பெயர்கள்..!
எம்ஜி சாலை, பிரிகேட் சாலை மற்றும் சர்ச் தெரு:
⇒ ப்ளாசம் புக் ஹவுஸில் உங்களில் உள்ள நூலகத்தை பார்க்கலாம்.
⇒ காவேரி எம்போரியத்தில் நினைவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விருப்பப்பட்டால் வாங்கலாம்.
⇒ ரங்கோலி மெட்ரோ கலை மையத்தைப் சுற்றி பார்க்கலாம்.
நாள் 2:
லால் பாக் தாவரவியல் பூங்கா:
⇒ நேரம்: தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சுற்றி பார்க்கலாம்.
⇒ நுழைவு கட்டணம்: ஒரு நபருக்கு ₹ 10 வசூலிக்கப்படுகிறது
பெங்களூரு அரண்மனை:
⇒ நேரம்: தினமும் காலை 10:00 முதல் மாலை 5:30 வரை திறந்திருக்கும்.
⇒ நுழைவுக் கட்டணம்: இந்தியர்களுக்கு ஒரு நபருக்கு ₹ 230; வெளிநாட்டினருக்கு ஒரு நபருக்கு ₹ 460 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
⇒ புகைப்படம்: ஸ்டில் கேமராவுக்கு ₹ 685 , வீடியோ கேமராவுக்கு ₹ 1,485, மொபைல் கேமராவுக்கு ₹ 285 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
அல்சூர் ஏரி
⇒ நேரம்: தினமும் காலை 6:00 முதல் இரவு 8:00 வரை சுற்றி பார்க்கலாம், ஆனால் புதன்கிழமைகளில் மூடப்ட்டிருக்கும்.
⇒ நுழைவு கட்டணம்: இலவசம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel |