கடலூர் மாவட்டத்தில் நமக்கு தெரியாத மிகவும் அழகான சுற்றுலா தலங்கள்..!

cuddalore district tourist places in tamil

கடலூர் மாவட்டம் சுற்றுலாத் தலங்கள்

இதுநாள் வரையிலும் நாம் நிறைய இடத்திற்கு சுற்றுலா சென்று வந்திருப்போம். அப்படி இல்லை என்றால் இனிமேல் நிறைய புது புது இடத்திற்கு சுற்றுலா சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற நினைத்து இருக்கும். நீங்கள் சுற்றுலா என்று நினைத்தவுடன் பெரிய பெரிய அளவிலான ஊர் மற்றும் மாவட்டம் பற்றி தான் கற்பனை செய்து இருப்பீர்கள். ஆனால் நமக்கு தெரியாத பல சுற்றுலா தலங்கள் கண்ணை கவரும் வகையில் நமது நாட்டிலேயே இருக்கிறது. அதனால் இன்று கடலூர் மாவட்டத்தில் இருக்கின்றன மிகவும் அழகான மற்றும் இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுலா தலங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!

Cuddalore Tourist Places:

கடலூர் மாவட்டம் செப்டம்பர் மாதம் 1993– ஆம் ஆண்டு தனி மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் கிழக்கே வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. நீங்கள் இந்த மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய எண்ணற்ற இடங்கள் இருக்கிறது.

பிச்சாவரம் மாங்குரோவ் காடு:

பிச்சாவரம் மாங்குரோவ் காடு

கடலூரில் இருந்து தோராயமாக 1 மணிநேரம் தூரம் செல்லக்கூடிய தூரத்தில் இந்த பிச்சாவரம் மாங்குரோவ் காடு அமைந்துள்ளது. இந்த இடத்தில் போட்டிங் செல்லும் வசதி இருப்பதால் இங்கு இயற்கை காட்சியுடன் போட்டிங் செல்வதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த இடத்திற்கு நீங்கள் சென்றால் போதும் திரும்பி வருவதற்கு விருப்பம் இருக்காது. அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக காணப்படும்.

தேவநாத சுவாமி கோயில்:

தேவநாத சுவாமி கோயில்

அடுத்து நாம் பார்க்கப்போகும் இடம் தேவநாத சுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலை திருவந்திரபுரம் கோவில் என்றும் கூறுகிறார்கள். தேவநாத சுவாமி கோவில் விஸ்ணுவின் கோவிலாகும். திவ்ய பிரபந்தத்தில் இந்த கோவிலை பற்றி சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது.

ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், விக்ரம சோழன் மற்றும் சமவர்மா சுந்தர பாண்டியன் போன்ற அரசர்கள் இந்த கோவிலில் ஆட்சி செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் இந்த கோவில் 108 தேவஸ்தானத்தில் ஒன்றாகவும் மற்றும் 60 அடி உயரத்தில் ராஜா கோபுரத்தை கொண்டுள்ள சிறப்பு மிக்க கோவிலாக கருதப்படுகிறது.

திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்..!

பாடலீஸ்வரர் கோவில்:

பாடலீஸ்வரர் கோவில்

மூன்றாவதாக நாம் பார்க்கப்போகும் இடம் பாடலீஸ்வரர் கோவில் ஆகும். இந்த கோவில் பல்லவர் காலத்தில் பாதியும் மற்றும் சோழர்கள் காலத்தில் பாதியும் கட்டப்பட்டுள்ளதாகும்.

இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் அப்பர் இந்த கோவிலில் தவம் புரிந்துள்ளதாகும். இத்தகைய பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவனை வழிபட்டால் காசியில் உள்ள சிவனை 16 முறை வழிபடத்திற்கு ஈடாகும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்:

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்

இந்த கோவிலில் 10 கைகளுடன் கூடிய நரசிம்மர் காட்சி அளிக்கிறார். இந்த கோவில் கிபி 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இதனுடைய சிறப்பு என்னவென்றால் இந்து மற்றும் முஸ்லீம் இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெள்ளி கடற்கரை:

வெள்ளி கடற்கரை

கடலூரிற்கு அருகில் இந்த வெள்ளி கடற்கரை அமைந்துள்ளது. உலகில் மிகவும் நீளமான கடற்கரையில் இந்த வெள்ளி கடற்கரையும் ஒன்று ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு இடமாகவும் இந்த வெள்ளி கடற்கரை இருக்கிறது.

வெள்ளி கடற்கரைக்கு அருகில் Light House ஒன்றும் இருக்கிறது. அதனால் நீங்கள் மறக்கலாம் கடலூரில் உள்ள இந்த வெள்ளி கடற்கரைக்கு சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide