டெல்லியில் சுற்றி பார்க்க வேண்டிய 5 இடங்கள்..!

Advertisement

Delhi Tourist Places

எப்போதும் சுற்றுலா என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று அனைவரும் செல்லகூடிய இடமாக மட்டுமே இருக்கும். சற்று தூரமாகவும், புதியதாக பார்க்க கூடிய இடமாகவும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் சுற்றி பார்த்துவிட்டு மற்றவர்களிடம் சொல்லி பகிர்ந்துகொள்ள முடியும். ஆகவே இன்றைய பதிவில் டெல்லியில் சுற்றி பார்க்க வேண்டிய இடத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்..!

Delhi Tourist Places in Tamil:

செங்கோட்டை:

 delhi tourist places in tamil

டெல்லியின் பிரபலமான நினைவு சின்னமாக உள்ளது செங்கோட்டை. இது முகலாய காலத்தில் இந்தியாவின் சக்தியூட்ட நினைவூட்டலாக மட்டும் இல்லாமல் இந்தியாவின்  சுதந்திரதிற்கு ஒரு அடையாளமாகவும் இந்த செங்கோட்டை உள்ளது. இதனுடைய கதையை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மாலை நேரத்தில் இதனுடைய படங்களை போட்டு காட்டுகிறார்கள். நீங்கள் செங்கோட்டையை பார்க்க சென்றால் அங்கு திங்கட்கிழமை யாருக்கும் அனுமதி கிடையாது. ஆகவே மற்ற நாட்களில் சுற்றி பார்க்க செல்லலாம்.

ஜமா மஸ்ஜித்:

 jama masjid

ஜமா மஸ்ஜித் டெல்லினுடைய ஒரு அற்புதமான புதையல் என்று சொல்லலாம். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று. இந்த மசூதியை 1656 ஆம் ஆண்டு கட்டி முடித்தார்கள். இதனை கட்டுவதற்கு 12 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆகவே முஸ்லிம்கள் டெல்லிக்கு சென்றால் இந்த மசூதிக்கு செல்லாமல் வாராதீர்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉  இராமநாதபுரம் மாவட்டத்தில் இப்படியெல்லாம் கூட சுற்றுலா தலங்கள் இருக்கிறதா..?

அக்ஷர்தாம் கோயில்:

 delhi best places to visit with friends in tamil

இந்த கோவில் 2005 -ல் தான் திறக்கப்பட்டது. இந்த கோவில் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக உருவாக்கப்பட்டது என்றும் சொல்லபடுகிறது. இந்த கோவிலின் கட்டிடக்கலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த கோவிலுக்குள் தோட்டம் உள்ளது அதுவே பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இங்கு படகு கூட உள்ளது அதில் சவாரி செய்யலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!

குதுப் மினார்:

 delhi best places to visit with friends in tamil

உலகத்தில் உள்ள செங்கல் மினார்களில் இதுவும் ஒன்று. இந்த குதுப் மினார் ஆரம்ப கால இஸ்லாமியர் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஏனென்றால் அந்தளவிற்கு அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள். இது 1993 ஆம் ஆண்டு தான்  கட்டப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் வெற்றியையும் முஸ்லிம் ஆட்சியின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்திற்கு 5 தனித்துவமான கதைகளையும் வைத்துள்ளார்கள். குதுப்மினார்க்குள் வந்தால் பல வரலாற்று சின்னங்களை பார்க்க முடியும். ஆகவே டெல்லியில் பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று.

தாமரை கோவில்:

lotus temple

இதனுடைய உண்மையான பெயர் பஹாய் கோவில் என்பார்கள். ஏன் தாமரை கோவில் என்ற பெயர் வந்தது என்றால் இதனை தாமரை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதால். இரவு நேரங்களில் இதை பார்ப்பதற்கு லைட் வெளிச்சத்தில் சூப்பராக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் அப்போது நீங்கள் பக்கத்தில் நின்று பார்க்க அனுமதி இல்லை. இதனை பஹாய் -க்கு சொந்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் இது இந்த மதத்திற்கும் சொந்தமானது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. உள் செல்வதற்கு எந்த ஒரு பணமும் இல்லை முற்றிலும் இலவசம் தான்.

இதையும் பார்த்து வாருங்கள் 👉👉 திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்..!

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement