Erode District Tourist Places in Tamil
பொதுவாக சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே நாம் அனைவரின் மனத்திலேயும் முதலில் நினைவிற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு தான். ஆனால் இந்த இடங்கள் எல்லாவற்றையும் திரும்ப திரும்ப சுற்றி பார்த்து எனக்கு சலித்துவிட்டது. வேறு ஏதாவது புதிய இடம் உள்ளதா..? என்று தேடிக் கொண்டிருப்பவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அழகான மற்றும் கண் கவரும் சுற்றுலா தலங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஊட்டியை தவிர நீலகிரி மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா
Erode District Tourist Places in Tamil:
ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் கர்நாடகா மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் காடுகளே அதிக அளவு நிறைந்து காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள வனக்கோட்டங்களிலேயே ஈரோடு மாவட்ட வனக்கோட்டம் மிக பெரியது. இப்படி பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண் கவரும் சுற்றுலா தலங்கள் பற்றி விரிவாக காணலாம்.
1. பவானிசாகர் அணை:
நாம் முதலாவது பார்க்க போகும் சுற்றுலா தலம் பவானிசாகர் அணை தான். இந்த அணை சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்த அணை மண்ணால் கட்டப்பட்ட அணை ஆகும்.
இது தமிழ் நாட்டிலேயே இரண்டாவது பெரிய அணையாகவும் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மண் அணையாகவும் விளங்குகிறது. மேலும் இது ஈரோட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலம் ஆகும்.
எனவே அடுத்த முறை நீங்கள் ஈரோட்டுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த பவானிசாகர் அணைக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
2. திண்டல் முருகன் கோவில்:
இரண்டாவதாக நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் திண்டல் முருகன் கோவில் தான். இந்த கோவில் 8 கிலோ மீட்டர் தொலைவில் பெருந்துறை செல்லக்கூடிய வழியில் உள்ள திண்டல் மலையின் மீது அமைந்துள்ளது.
இந்த கோவிலும் ஈரோட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். அதனால் அடுத்த முறை நீங்கள் ஈரோட்டுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த திண்டல் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
3. பவானி கூடுதுறை (முக்கூடல்):
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் பவானி கூடுதுறை (முக்கூடல்) தான். இது ஈரோட்டில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு தெரியாத அமிர்த நதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. கூடுதுறையின் கரையில் சங்கமேசுவரர் கோயில் அமைந்துள்ளது.
இது ஒரு பாவம் போக்கும் புண்ணிய தலம் என்பதால் இங்கு பல்லாயிர கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் ஈரோட்டுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த பவானி கூடுதுறைக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்
4. கொடிவேரி அணை:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் கொடிவேரி அணை தான். இது கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு தடுப்பணையாகும். இந்த அணை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகின்றது. எனவே அடுத்த முறை நீங்கள் ஈரோட்டுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த கொடிவேரி அணைக்கு சென்று வாருங்கள்.
5. சென்னிமலை முருகன் கோவில்:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் சென்னிமலை முருகன் கோவில் தான். இது ஈரோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னிமலை என்னும் ஊரில் மலையின் மீது அமைந்துள்ளது.
இது இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலாக விளங்குகின்றது. அதனால் இங்கு பல்லாயிர கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத் தமுறை நீங்கள் ஈரோட்டுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா
6. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்:
நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தான். இது ஈரோட்டில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெள்ளோடு என்னும் ஊரில் 192 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும்.
மேலும் இது ஒரு சிறந்த சுற்றுலா தலம் ஆகும். அடுத்த முறை நீங்கள் ஈரோட்டுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு சென்று வாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |