ஓசூரில் பார்க்க வேண்டிய இடங்கள்
ஞாயிற்றுக்கிழமை அல்லது வெளியில் சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்.! வெளியில் செல்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்வார்கள். உங்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டம் அல்லது ஒவ்வொரு ஊரில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றி தினந்தோறும் சொல்லி வருகின்றோம். அந்த வகையில் ஓசூரில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
ஓசூர் மலைக்கோட்டை கோவில்:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலே தேர் இருக்க கூடிய கோவில் என்றால் அது மலைக்கோட்டை கோவில் தான். இந்த கோவிலின் கோபுரம் 5 அடுக்குகள் கொண்டதாக இருக்கும். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் குளிர்ச்சியாக இருக்கும். இந்த கோவிலின் உள்ளே தீப தூண் இருக்கும். அதில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவார்கள். இங்கு இரவு நேரத்தில் வந்தால் மலையின் மேல் இருந்து பார்த்தால் அழகாக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ தர்மபுரி மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளதா..!
ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவில்:
மலைக்கோட்டை கோவிலிலிருந்து இது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கடவுளின் சிலை 50 அடி முதல் 60 அடிவரை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலில் நரசிம்ம கடவுளின் கதைகளை படமாக வரைந்து விவரித்துள்ளனர்.
Dakshina Tirupati:
ஓசூர் பேருந்து நிலையத்திலுருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தக்ஷிண திருப்பதி அமைந்துள்ளது. இந்த கோவில் ரொம்ப அமைதியாக இருக்கும். ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.
பெட்டமுகிலாளம்:
இது ஒரு மலைப்பகுதி, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த மலைபகுதி மேலே பார்த்தால் சுற்றிலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த மலை வளைந்து வளைந்து இருக்கும், BIKE -யில் போவதற்கு அருமையாக இருக்கும். ஒரு முறை இந்த மலைப்பகுதிக்கு சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் அழகாக இருக்கும் சுற்றுலா தளங்கள்..!
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |