சுற்றுலாவிற்க்கு செல்பவர்கள் இந்த கோட்டைகளை பார்க்க மறந்துடாதீங்க

Advertisement

நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கோட்டைகள்

நண்பர்களே வணக்கம். அனைவருக்கும் மே மாதம் என்பது குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று அப்போது அவர்கள் விடுமுறையில் இருப்பார்கள் அப்போது அவர்கள் சுற்றுலா செல்ல ஆசை படுவார்கள். ஆனால் அவர்களுக்கு எப்போது அனைவரும் செல்ல கூடிய இடங்களாக இல்லாமல் அவர்கள் தெரிந்துகொள்ள கூடிய இடமாக இருந்தால் அது அவர்களுக்கு பிர்காலத்தில் உதவியாக இருக்கும். அதேபோல் புதிதாக சுற்றி பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்தியாவில் உள்ள இந்த 5 கோட்டைகளுகளுக்கு சென்று வாருங்கள். அது உங்களுக்கு புது புது அனுபவங்களை தரும். வாங்க அந்த கோட்டைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

உமைத் பவன் அரண்மனை:

உமைத் அரண்மனை

இந்த அரண்மனையானது இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையானது உலகில் மிகபெரிய அரண்மனைகளில் ஒன்றாக இருக்கிறது. மகாராஜா உமைத் சிங்கிற்கு சொந்தமான அரண்மனை ஆகும். இந்த மாளிகையில் 347 அறைகள் கொண்டுள்ளது. இந்த அரண்மனையில் ஒரு பாதி மட்டும் தாஜ் ஹோட்டலின் மூலம் நட்சத்திர விடுதியாக நிறுவகிக்கப்பட்டுள்ளது. அரண்மையின் இன்னொரு பகுதி அருங்காட்சியகமாக உள்ளது.

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டை

இந்த கோட்டையானது ஐதராபாத்தில் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோட்டை. முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும். இந்த கோட்டையானது ராணி ருத்ரமானதேவி ஆட்சிபுரிந்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. இது இந்திய தொல்லியல் துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை உள்ளே இருக்கின்றன. இது போல் ஏராளமான விஷயங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இடத்திற்கெல்லாம் சென்றால் ஆர்வமானகாவும் இருக்கும் ஆச்சரியமாகவும் இருக்கும்.

பத்மநாபபுரம் அரண்மனை:

பத்மநாபபுரம் அரண்மனை

இந்த அரண்மனையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பத்மநாபபுரத்திற்கு முந்தைய பெயர் கல்குளம் ஆகும். அதனால் கல்குளம் அரண்மனை என்று இன்னொரு பெயரும் உள்ளது. இந்த அரண்மனை 400 வருடத்திற்கு பழமையான அரணமனை என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய மரத்தால் செய்யப்பட்ட அரண்மை என்ற பெருமை இந்த அரண்மனைக்கு உண்டு. இந்த அரண்மனையின் பரப்பளவு சுமார் 6.5 ஏக்கர் என்று சொல்லலாம். அதேபோல் இந்த அரண்மனையில் 15 மாளிகைகள் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த அரண்மையை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள இந்த அரண்மையை உடனே சென்று தெரிந்துகொள்ளாம்.

லக்ஷ்மி விலாஸ் பேலஸ்:

லக்ஷ்மி விலாஸ் பேலஸ்

இந்த அரண்மனையானது குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்தோ-சராசெனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. 1889-லில் கட்டப்பட்ட அரண்மனையின் ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று வரையில் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். கட்டிட கலைக்களில் சிறந்து விளங்கும் இந்த அரண்மனை சுற்றுலாத்தலமாக உள்ளது.

செங்கோட்டை:

இந்த செங்கோட்டையை சுற்றுலா தளம் என்று சொல்வதை விட இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இடமாக செங்கோட்டை விளங்குகிறது. செங்கோட்டையானது டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. அதிகளவு மக்கள் இந்த இடத்தை பார்க்க படையெடுத்து சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஆகவே சுற்றுலா செல்ல விரும்பும் இங்கு பார்வையிடலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement