Karur District Tourist Places
மனிதனாக பிறந்த அனைவருமே இந்த உலகில் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இந்த உலகில் பார்ப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று கரூர் மாவட்டத்தில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சுற்றுலா தலங்களில் கெத்து காண்பிக்கும் விருதுநகர் மாவட்டம் சுற்றுலா தலங்கள்..! |
Karur District Tourist Places in Tamil:
இது ஏறத்தாழ 2000 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு கொண்ட நகரம். கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. கரூர் மாவட்டம் குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. கரூர் மாவட்டம் ஒரு கனிமவளம் நிறைந்த மாவட்டமாக விளங்குகின்றது. வாங்க நண்பர்களே கரூர் மாவட்டத்தில் இருக்கும் அழகிய இடங்களை பற்றி இங்கு காணலாம்.
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்:
இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவில் தமிழ் நாட்டின் பழம்பெரும் சிவன் கோயிலாகவும் கொங்கு நாட்டின் 7 சிவன் கோவில்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகின்றது. இக்கோவில் அமராவதி ஆற்றங்கரையில் கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கரூர் சென்றால் இக்கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்..!
மாயனூர் கதவணை:
இது அணை கரூரில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் கட்டப்பட்டு இருக்கிறது. மாயனூர் தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ளது. சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பின் எல்லையாக மாயனூர் விளங்குகிறது. மாயனூர் அணை ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகின்றது.
செல்லாண்டியம்மன் திருக்கோயில்:
இக்கோவில் மாயனூரின் பக்கத்தில் அமைத்துள்ள ஒரு புகழ்பெற்ற புனித தலமாகும். இந்த கோவில் கரூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்திற்கு சென்றால் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.
அம்மா பூங்கா திருக்காம்புலியூர்:
இந்த பூங்காவும் மாயனூர் பக்கத்தில் காவிரி ஆற்றங்கரைக்கு அருகில் தான் அமைந்துள்ளது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக விளங்குகின்றது.
இதையும் படித்துப்பாருங்கள்⇒ தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!
திருமுக்கூடலூர்:
காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் என்று சொல்லப்படுகிறது. இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகஸ்த்தீசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கரூர் மாவட்டத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பொன்னணியார் அணை:
இந்த அணை கரூர் மாவட்டத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி மாவட்ட எல்லையில் எடையப்பட்டி என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இந்த பொன்னணியார் அணை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த அணையை காண பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதையும் படியுங்கள்⇒ இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |