கொடைக்கானலில் இவ்வளவு இடம் இருக்கா பாக்கமாக வரக்கூடாது..!

கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்

சுற்றுலா என்றால் முதலில் நியாபகத்திற்கு வருவது கொடைக்கானல் தான். சிலருக்கு ஊட்டி செல்வது மிகவும் பிடிக்கும். சிலருக்கு கொடைக்கானல் செல்வது மிகவும் பிடிக்கும். சிலர் கொடைக்கானல் சென்று விட்டு அங்கு உள்ள சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு திருப்பிடுவார்கள். அங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது. அந்த இடங்களை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போகிறோம். வாங்க அது என்ன இடம் என்பதை பார்ப்போம் வாங்க..!

கொடைக்கானல் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்:

மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. இதனால் அந்த இடம் குளிர்ந்த காலநிலையில் உள்ளது.

Coakers Walk:

coakers walk

இதனுடைய நடைபாதை ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இது மனிதர்களால் கட்டப்பட்டுள்ளது. இது மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது அதனால் அதில் நடந்து சென்றால் அழகான மலைத்தொடர்களை பார்க்க முடியும். இதில் சைக்கிள் சவாரி செய்யலாம் ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்கள் சென்றால் அதற்கு 30 ரூபாய், குழந்தைகள் என்றால் 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

தூண் பாறைகள்:

pillar rocks

இந்த மலையில் உள்ள தூண்கள் 400 அடி உயரத்தை எட்டும். பார்ப்பதற்கு செங்குதாக உள்ளது போல் இருக்கும். அது பாறைகளை கொண்டிருப்பதால் அதற்கு தூண் பாறைகள் என்று பெயர் பெற்றது. அந்த பாறைகளை பனிகள் மூடுவதை பார்க்க முடியும் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தூண்களை பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும், உயரமாகவும் பார்ப்பதற்கு இருக்கும்.

இதையும் படியுங்கள்=> கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பூம்பாறை:

poombarai

பூம்பாறை பூம்பை பூண்டு உற்பத்திக்கு சிறப்பு பெற்றது. இது ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமம் பசுமை வயல்களுக்கு இடையில் அமைத்துள்ளது. இது பழனி மலையில் 1,920 கிலோ மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. அங்கு இருக்கும் வீடுகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். மேலும் அமைதியாக இருக்கும். ஆகவே இந்த இடத்தை பார்க்காமல் வந்துவிடாதீர்கள். இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது அது குழந்தை வேலப்பர் கோயில் தான் இந்த கோவிலை சுற்றி பார்க்காமல் யாரும் போகமாட்டார்களாம். மேலும் பூம்பாறையின் வரலாறு  3,000 ஆண்டுகளுக்கு மேலானது.

Bryant Park:

bryant park

இந்த பூங்காவில் பல்வேறு வகையான செடிகளை, புதர்களையும், பூக்களையும்  கொண்டுள்ளது. அவை அனைத்துமே வெவ்வேறு வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கோரஸ் வாக்கில் நடந்து வந்தால் அந்த பாதை உங்களை இந்த பூங்காவிற்கு கொண்டு செல்லும். இங்கு குடும்பத்துடன் வந்து சுற்றி பார்க்க அழகாக இருக்கும். அங்கு ரோஜா தோட்டங்கள் அதிகமாக இருக்கும். ஆகவே கொடைக்கானல் போனால் சுற்றி பார்க்க தவறாதீர்கள்.

இதையும் படியுங்கள்=>உலகின் மிகவும் அழகான 5 ஊர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

வெள்ளி நீர்வீழ்ச்சி | Silver Falls:

silver falls

கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில் வரவேற்க முதலில் உள்ளது தான் சில்வர் நீர்விழ்ச்சி. இந்த நீர்விழுச்சி கடல் மட்டத்திலிருந்து 5,900 அடி உயரத்தில் அமைத்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு வெள்ளி போல் காட்சி தரும். கொடைக்கானலில் தொடக்கத்தில் உங்களை குளிர்ச்சியாக வரவேற்பது வெள்ளி நீர்விழ்ச்சியாகத்தான் இருக்கும்.

பேரிஜம் ஏரி:

பேரிஜம் ஏரி

இது ஒரு விசித்திரமான நீர் தேக்கமாகவும். இந்த ஏரி கொடைக்கானலிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. இந்த ஏரியில் காட்டெருமை, யானை, மான், என கம்பீரமான விலங்குகளுக்கு வாழ்விடமாகவும் இது உள்ளது. மேலும் நீங்கள் செல்லும் நேரம் அங்கு அனைத்து விலங்குகளையும் பார்க்கும் வாய்ப்பு இருந்தால் இன்னும் மகிழ்ச்சி தான்.

இந்த ஏரியில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்திற்காக படகு சவாரியை தடை செய்துள்ளார்கள். இது 59 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி ஆகும். இந்த ஏரி பள்ளத்தாக்கில்  உள்ள பெரியகுளத்தில் குடி நீர் ஆதாரமாக விளங்கும் அளவிற்கு தூய்மையானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Top 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide