கோவை மாவட்டத்தில் உள்ள அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள்..!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் கோவை மாவட்டத்தில் உள்ள 12 சுற்றுலா ஸ்தலங்கள்..! பற்றிய தகவல் தான். ஒரு மாவட்டத்தில் உள்ள அழகான இடம் எதுவென்று கேட்டால் மிகவும் எளிமையாக கூறிவிடலாம். ஆனால் ஒரு மாவட்டம் முழுவதுமே அழகான இடங்களாக இருந்தால் அதில் எதை பற்றி கூறுவது. அப்படிப்பட்ட சிறப்புடைய மாவட்டம் தான் நமது கோவை மாவட்டம். இந்த கோவை மாவட்டத்தில் உள்ள சிறப்பான மற்றும் முக்கியமான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றிய தகவலை இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.
செப்டம்பர் to மார்ச் சுற்றி பார்க்க வேண்டிய அருமையான இடம்
கோவை மாவட்டத்தில் உள்ள 12 அருமையான சுற்றுலா ஸ்தலங்கள்:
பொதுவாக பயணம் அதிகம் செய்யப் பிடித்தவர்களுக்காகவே கடவுளால் பூமியில் அமைக்கப்பட்ட சொர்க்கம் என்றே இந்த கோவை மாவட்டத்தை கூறலாம். அந்த மாவட்டத்தில் உள்ள 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. வெள்ளையங்கிரி மலை:
நாம் முதலாவதாக பார்க்கப்போவது வெள்ளையங்கிரி மலை பற்றித்தான். இந்தியாவில் எவ்வளவு இடம் இருந்தாலும் இந்த இடத்திற்கு ஈடாகாது என்றே கூறலாம். அப்படி மிகவும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடமாக இந்த வெள்ளையங்கிரி மலை உள்ளது.
நீங்கள் கோவை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த வெள்ளையங்கிரி மலை உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பூண்டி என்னும் ஊரில் தான் இந்த வெள்ளையங்கிரி மலை உள்ளது.
2. மருதமலை முருகன் கோவில்:
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது மருதமலை முருகன் கோவில் பற்றித் தான். தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான முருகன் கோவில்களில் இந்த மருதமலை முருகன் கோவிலும் ஒன்று.
இந்த மருதமலை கோவில் கோயம்புத்தூரில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. நீங்கள் கோவை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த மருதமலை முருகன் கோவில் உள்ளது.
3. வைதேகி அருவி :
நாம் அடுத்து பார்க்க இருப்பது வைதேகி அருவி பற்றித்தான். இந்த அருவி கோயம்புத்தூரில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. மிகவும் அடர்ந்த வனப்பகுதியில் மிகவும் அருமையான இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும் இந்த அருவி. நீங்கள் கோவை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த வைதேகி அருவியும் ஒன்று.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்
4. பரளிக்காடு:
நாம் அடுத்து பார்க்க இருப்பது பரளிக்காடு பற்றித் தான். இந்த பரளிக்காடு கோயம்புத்தூரில் இருந்து 70 கி.மீ-யும் காரமடைலிருந்து 42 கி.மீ தொலைவிலும் உள்ளது. மிகவும் அருமையான இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும் இடம் தான் இந்த பரளிக்காடு. நீங்கள் கோவை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த பரளிக்காடும் ஒன்று.
5. கோவை குற்றாலம்:
நாம் அடுத்து பார்க்க இருப்பது கோவை குற்றாலம் பற்றித் தான். இந்த அருவி கோவை மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அடர்ந்த வனப்பகுதியில் மிகவும் அருமையான இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும். இந்த அருவி கோயம்புத்தூரில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. நீங்கள் கோவை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த கோவை குற்றாலமும் ஒன்று.
6. ஆணைகட்டி மலை:
நாம் அடுத்து பார்க்க இருப்பது ஆணைகட்டி மலை பற்றித் தான். ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் உங்களுக்கு சலித்து போய் விட்டது என்றால் நீங்கள் இந்த ஆணைகட்டி மலையை சுற்றிப் பார்க்கலாம். இது கோவை மாவட்டத்தில் உள்ள சிறிய மலை பிரதேசம் ஆகும். இந்த ஆணைகட்டி மலை கோயம்புத்தூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. நீங்கள் கோவை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த ஆணைகட்டி மலையும் ஒன்று.
Rs.50,000/- செலவில் விசா இல்லாமல் சுற்றி பார்க்க செல்லக்கூடிய சிறந்த நாடுகள்
7. G.D கார் மியூசியம்:
நாம் அடுத்து பார்க்க இருப்பது கோயம்புத்தூர் நகருக்குளே உள்ள G.D கார் மியூசியம் பற்றித் தான். இங்கு நாம் வேறு எங்கும் பார்க்க முடியாத பழமையான கார் வகைகளை பார்க்கலாம். இந்த மியூசியம் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலுருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அதனால் நீங்கள் கோவையில் சுற்றி பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் இந்த G.D கார் மியூசியமும் ஒன்று.
8. பூச்சிகள் மியூசியம்:
நாம் அடுத்து பார்க்க இருப்பது கோயம்புத்தூர் நகருக்குள்ளே உள்ள பூச்சிகள் மியூசியம் பற்றித் தான். பூச்சிகளுக்கு என்று தனியாக மியூசியம் தமிழ்நாட்டிலேயே இங்கு தான் உள்ளது. இந்த மியூசியம் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலுருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. அதனால் நீங்கள் கோவையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த பூச்சிகள் மியூசியமும் ஒன்று.
9. ஆழியாறு அணை:
நாம் அடுத்து பார்க்க இருப்பது பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லுகின்ற வழியில் உள்ள ஆழியாறு அணை பற்றித் தான். இந்த ஆழியாறு அணை கோயம்புத்தூரில் இருந்து 70 கி.மீ-யும் பொள்ளாச்சியில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது. அதனால் நீங்கள் கோவையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த ஆழியாறு அணையும் ஒன்று.
10. ஆத்துப்பாறை அணை:
நாம் அடுத்து பார்க்க இருப்பது ஆத்துப்பாறை என்னும் சிறிய அளவிலான அணைக்கட்டு பற்றித்தான். மிகவும் அருமையான இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும் இந்த ஆத்துப்பாறை அணைக்கட்டு. அதனால் நீங்கள் கோவையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த ஆத்துப்பாறை அணைக்கட்டும் ஒன்று.
11. குரங்கு அருவி:
அடுத்து நாம் பார்க்க இருப்பது குரங்கு அருவி பற்றித் தான். இந்த அருவி ஆழியாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. வறட்சியான கோடை காலத்திலும் இங்கு தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். அதனால் நீங்கள் கோவையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த குரங்கு அருவியும் ஒன்று.
12. வால்பாறை:
அடுத்து நாம் பார்க்க இருப்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொர்க்க பூமி வால்பாறை பற்றித் தான். ஊட்டி , கொடைக்கானல் போன்ற இடங்களையே மிஞ்சுகின்ற இயற்கை அழகுடன் உள்ள ஒரு அருமையான இடமாகவே இந்த வால்பாறை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ தொலைவில் மலைமேல் இந்த வால்பாறை உள்ளது. அதனால் நீங்கள் கோவையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த வால்பாறையும் ஒன்று.
வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய தோட்டங்கள்
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |