மேகங்களை தாலாட்டும் மேகமலை சுற்றுலா தளம்!

Advertisement

Megamalai Tourist Places in Tamil!

வணக்கம்! குறைவான செலவில் நிறைவான சுற்றுலாவினை அனுபவிக்க விரும்புகிறீர்களா? அப்போ நீங்கள் மேகமலை சுற்றுத்தளத்தினை தேர்ந்தெடுக்கலாம்!  தென்தமிழக மக்களுக்கு இது ஒரு அருமையான சுற்றுலா இடமாகும். இப்பதிவில் பார்க்க இருப்பது தேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலை சுற்றுலா தளத்தினை பற்றித்தான்!  பசுமையும், இயற்கை அழகும், முத்தமிட்டு வருடி செல்லும் மேகங்களும் சூழ்ந்து  அற்புத சுற்றுலா தளமாக காட்சி அளிக்கின்றது. இச்சுற்றுலா தளத்தினை பற்றிய முழு விவரங்கள் வரும் பக்கங்களில் தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது. மேகமலை சுற்றுத்தளத்தினை பற்றி நீங்களும் தெரிந்துகொண்டு சென்று வாருங்கள்!

மேக மலையின் வரலாறு:

இந்த மலைத்தொடரை ஆங்கிலேயர்கள்தான் முதலில் கண்டுபிடித்தார்களாம் என்று வரலாறு சொல்கிறது. 1920 ஆம் ஆண்டு இப்பகுதியில் தேயிலை தொழிலை தொடங்கி உள்ளனர். தற்போது 3 ஏக்கருக்கு மேலாக தேயிலை தொழிலை செய்து வருகின்றனர். 3000 மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

 megamalai tourist places in tamil

மேலும் ஒரு பயனுள்ள தகவல் –>  ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்

சிறப்பு அம்சங்கள்:

 megamalai tourist places list in tamil

மேக மலையானது பெயருக்கு ஏற்ப மேகங்கள் சூழப்பட்டு காண்போரை பிரமிக்கும் வகையில் காட்டியளிக்கின்றது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. பல உயிரினங்கள் இப்பகுதியில் சுற்றி திரிகின்றன. இந்த மலைப்பகுதியில் அதிக வெயிலும் இருக்காது அதிக குளிரும் இருக்காது அனைவரையும் கவரும் வகையில்  இதமான சூழலுடன் நிலவுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ரிசார்ட் வசதிகளும் இருக்கின்றன.

 megamalai tourist places in tamil

மேலும் ஒரு பயனுள்ள தகவல் –> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!

சுற்றி பார்க்க வேண்டிய சிறப்பு இடங்கள்:

 

 megamalai tourist places list in tamil

 • அணைகள்
 • அழகுடன் கொட்டும் அருவிகள்
 • மலை சிகரங்கள் நடுவே அழகுற அமைந்துள்ள பள்ளத்தாக்குகள்
 • இயற்கை அழகை வெளிப்படுத்தும் அற்புத மலை காட்சிகள்
  போன்ற பல வித்தியாச இடங்களை கொண்டுள்ளது.

 megamalai tourist places list in tamil

ஐந்து அணைகள் உள்ளன:

 • மேலணை
 • கீழணை
 • தூவானம்  அணை
 • மணலாறு அணை
 • வெள்ளியாறு அணை
 • இரவங்கலாறு அணை
  மேக மலையினை சுற்றி இந்த ஐந்து அணைகள் சூழ்ந்துள்ளன.

மேக மலை அமைந்துள்ள இடம்:

மாவட்டம் தேனி 
இடம் சின்னமனூர் 
முகவரி  சின்னமனூர், தேனி

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சின்னமனூர் நகர் மலைப்பாதை வழியாக சென்றால் நீங்கள் மேகமலையினை அடையலாம். மேக மலைக்கு நீங்கள் பேருந்துகள் மூலமாகவும் செல்லலாம். சின்னமனூரில் இருந்து காலை,மாலை என இருவேளைகளும் பேருந்து வசதிகள் உள்ளன.

 megamalai which district

அனுமதி நேரம்:

 மேக மலையானது முற்றிலும் மலை பகுதி என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை  மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. 

 

மேலும் ஒரு பயனுள்ள தகவல் –> சிவகங்கையின் சிறப்பினை உணர்த்தும் அருமையான 5 சுற்றுலா தலங்கள்..!

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement