நாமக்கல் மாவட்டம் சுற்றுலாத் தலங்கள்
இதுநாள் வரையிலும் நாம் எத்தனையோ இடத்திற்கு சுற்றுலா சென்று இருப்போம். அத்தகைய சுற்றுலா தலங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. நீங்கள் பலமுறை நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று இருக்கலாம். ஆனால் அங்கு இருக்கும் சுற்றுலா தலங்களில் நமக்கு தெரியாத நிறைய இடங்களும் இருக்கிறது. எப்போது நாம் சுற்றுலா செல்லும் போது அங்கு நமக்கு தெரிந்த இடத்திற்கு மட்டும் செல்வோம் தெரியாத இடத்திற்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவோம். ஏனென்றால் தெரியாத ஊருக்கு வந்து இருக்கிறோம் அதனால் வலி தவறி சென்று விட கூடாது என்று அழகான இடத்தையும் சுற்றி பார்க்கலாம் வந்து விடுவது நிறைய நபர்களின் பழக்கம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பொதுநலம். காம் பதிவில் நிறைய சுற்றுலா தலங்கள் பற்றி கூறிவருகிறோம். அந்த வரிசையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வியக்க வைக்கும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!
Namakkal Tourist Places in Tamil:
நாமக்கல் என்று கூறியவுடன் முதலில் நியாபகம் வருவது என்றால் அது நாமக்கல் முட்டை மற்றும் கொல்லிமலை இவை இரண்டும் தான். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் இவை இரண்டையும் போட்டி போடும் அளவிற்கு கண்ணை கவரும் அழகான சுற்றுலா தலங்கள் இருக்கிறது.
நாமக்கல் மலைக்கோட்டை:
முதலில் நாம் பார்க்கப்போகும் இடம் என்னவென்றால் அது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற மலைக்கோட்டை பற்றி தான். இந்த மலைக்கோட்டை நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் 1 1/2 ஏக்கர் பரப்பளவில் 246 அடி உயரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிறப்புமிக்க மலைக்கோட்டை ஆகும்.
நாமக்கல் மலை கோட்டையை நாயக்கர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோட்டையின் மேல் பகுதியில் ஒரு கோவிலும் இருக்கிறது. இவ்வளவு அழகாக உள்ள இந்த இடத்தை நாமாக்களுக்கு செல்லும் போது பார்ப்பதற்கு மறக்காதீர்கள்.
தத்தகிரி மலை:
நாமக்கலில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் தத்தகிரி மலை அமைந்துள்ளது. இந்த தத்தகிரி மலையின் உச்சியில் முருகப்பெருமான் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
இத்தகைய மலைக்கு மேலே சென்று கீழே பார்க்கும்போது மிகவும் அழகான இயற்கை காட்சிகள் இருக்கிறது. அதனால் இந்த இடத்தை சுற்றி பார்ப்பதற்காக நிறைய சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றன. நீங்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றால் மறக்கலாம் இந்த தத்தகிரி மலைக்கு சென்று வாருங்கள்.
ஜேடர்பாளையம் அணை:
மூன்றாவதாக பார்க்கப்போகும் இந்த ஜேடர்பாளையம் அணை நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு பக்கம் அமைந்துள்ளது.
இந்த அணைக்கு அருகில் உள்ள ஒரு குளத்தில் படகு சவாரி செய்யும் வசதியும் மற்றும் ஒரு பூங்காவும் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த அணையில் தண்ணீரின் அளவு மிக குறைவாக இருக்கும் போது அங்கு வரும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். ஒரு முறை இந்த அணைக்கு நீங்கள் சென்று படகு சவாரி செய்தால் போதும் திரும்பி வரவே பிடிக்காது.
திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்..! |
கொல்லி பாவை கோவில்:
கொல்லிமலை என்று பெயர் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த கொல்லி பாவை கோவில் தான். இந்த கோவில் நாமக்கல் மாவட்டத்தின் காட்டு பகுதியில் கூரையினால் அமைக்கப்பட்ட கோவிலாகும்.
இத்தகைய கோவிலில் அமைந்துள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நான்காவது இடத்தில் உள்ள இந்த இடத்திற்கு ஒரு சென்று சுற்றி பாருங்கள்.
மாசிலா அருவி:
கடைசியாக நாம் பார்க்கப்போகும் இடம் மாசிலா அருவி தான். இந்த அருவியின் பெயரிலையே இதனுடைய அர்த்தம் இருக்கிறது. அதாவது இந்த மாசிலா அருவில் எந்த விதமான மாசும் இல்லாமல் சுத்தமான அருவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த அருவி 4,000 அடி உயரத்தில் காணப்படுகிறது. அதனால் இந்த இடத்திற்கு எப்போதும் கூட்டமாக சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இந்த அருவி இடம் பெற்றுருக்கிறது.
நீங்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றால் மறக்காமல் நமது பதிவில் சொல்லப்பட்டுள்ள சுற்றுலா தலத்திற்கு சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ கடலூர் மாவட்டத்தில் நமக்கு தெரியாத மிகவும் அழகான சுற்றுலா தலங்கள்..!
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |