திருவையாறு அருகில் உள்ள கோயில்கள்.!

Advertisement

திருவையாறு அருகில் உள்ள கோயில்கள் | Temples Near Thiruvaiyaru in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருவையாறு அருகில் உள்ள கோயில்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே இருந்து 11 கிலோமீட்டர் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் திருவிழாக்களில் முதலிடம்  திருவையாறுக்கே அளிக்கப்படும். இவ்வூரில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமான கோவில்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

வட குரங்காடுதுறை ஸ்ரீ தயாநிதீஸ்வரர் சுவாமி கோவில்:

வட குரங்காடுதுறை ஸ்ரீ தயாநிதீஸ்வரர் சுவாமி கோவில்

இக்கோவில் ஆனது, கும்பக்கோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருவையாற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோவில் கிழக்கு நோக்கியவாறு இருக்கும். இதன் கோபுரம் 5 அடுக்குகளை கொண்டுள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ தயாநிதீஸ்வரர், ஸ்ரீ வாலிநாதர், ஸ்ரீ குலை வணங்கு நாதர், ஸ்ரீ சிட்டி லிங்கேஸ்வரர், ஸ்ரீ அழகு சடை முடி நாதர் மூலவர் உள்ளார்கள். அம்பாள் ஆக ஸ்ரீ அழகு சடை முடி அம்மை, ஸ்ரீ ஜடாமகுடேஸ்வரி உள்ளார்கள்.

இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ள கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய சிறப்பு மிகுந்த இடங்கள்..!

திரு கண்டியூரில் உள்ள ஸ்ரீ பிரம்மா சீரகண்டீஸ்வரர் கோவில்:

திரு கண்டியூரில் உள்ள ஸ்ரீ பிரம்மா சீரகண்டீஸ்வரர் கோவில்

இக்கோவில் ஆனது, திருவையாறில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ள திருக்கண்டியூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மூலவராக ஸ்ரீ பிரம்மா சீர கண்டீஸ்வரர், ஸ்ரீ பிரம்மா சீர கண்டீஸ்வரர், ஸ்ரீ ஆதி வில்வவன நாதர் உள்ளார்கள். அம்பிகையாக ஸ்ரீ மங்களாம்பிகை உள்ளார். இக்கோவில் மேற்கு நோக்கியவாறு இருக்கும். இதன் கோபுரம் 5 அடுக்களை கொண்டுள்ளது.

திருவேதிக்குடி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில்:

திருவேதிக்குடி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில்

திருவேதிக்குடி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில் ஆனது, திரு கண்டியூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கண்டியூர், திருவையாற்றில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மூலவராக ஸ்ரீ வேதபுரீஸ்வரர், ஸ்ரீ ஆராவமுத்து நாதர், ஸ்ரீ வாழைமாடுநாதர் உள்ளார்கள். அம்பாள் ஸ்ரீ மங்கையர்க்கரசி உள்ளார். இக்கோவில் கிழக்கு நோக்கியவாறு இருக்கும். இதன் கோபுரம் 3 அடுக்குகளில் இருக்கும்.

திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலின் விவரங்கள்..! திங்களூர் கோவில் வரலாறு..!

திருச்சோற்றுத்துறை ஸ்ரீ ஓதனவனேஸ்வரர் ஆலயம்:

திருச்சோற்றுத்துறை ஸ்ரீ ஓதனவனேஸ்வரர் ஆலயம்

இந்த கோவில் தஞ்சையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கண்டியூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மூலவராக ஸ்ரீ ஓதனவனேஸ்வரர், ஸ்ரீ தோளையச் செல்வர், ஸ்ரீ சோற்றுத்துறை நாதர், ஸ்ரீ சோருடையான், ஸ்ரீ ஒப்பிலச் செல்வர் உள்ளார்கள். அம்பாள் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ ஒப்பிலா அம்பிகை உள்ளார்கள். இக்கோவில் கிழக்கு நோக்கியவாறு அமைந்திருக்கும்.

திருப்பழனம் ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரர் கோவில்:

திருப்பழனம் ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரர் கோவில்

இக்கோவில் ஆனது, திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து  30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திங்களூர் சந்திரன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மூலவராக ஸ்ரீ ஆபத் சஹாயேஸ்வரர், ஸ்ரீ அமுதலிங்கேஸ்வரர், ஸ்ரீ பழநபிரான், ஸ்ரீ பிறைய புரீசர், ஸ்ரீ பரமேஸ்வரர் உள்ளார்கள். அம்பாள் ஸ்ரீ பெரிய நாயகி அம்மன், ஸ்ரீ சிவசுந்தர கல்யாணி, ஸ்ரீ போகசக்தி அம்மன் உள்ளார்கள். இக்கோவில் கிழக்கு நோக்கியவாறு இருக்கும். அதன் கோபுரம் 5 அடுக்குளில் இருக்கும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement