Tenkasi District Tourist Places in Tamil
பொதுவாக சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே நாம் அனைவரின் மனத்திலேயும் முதலில் நினைவிற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு தான் நாம் அனைவரின் நினைவிருக்கும் வரும். ஆனால் இந்த இடங்கள் எல்லாவற்றையும் திரும்ப திரும்ப சுற்றி பார்த்து எனக்கு சலித்து போய்விட்டது. வேறு ஏதாவது புதிய இடம் உள்ளதா..? என்று தேடிக் கொண்டிருப்பவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான்.
ஆம் நண்பர்களே இன்றைய பதிவின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகான மற்றும் கண் கவரும் சுற்றுலா தலங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண் கவரும் சுற்றுலா தலங்கள்..!
Tenkasi District Tourist Places in Tamil:
தென்காசி மாவட்டம் நவம்பர் 12, 2019-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கபட்டது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும்.
எனவே இந்த மாவட்டம் இயற்கை விரும்பும் நபர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு மாவட்டமாக உள்ளது. அதனால் இங்குள்ள சிறப்பான மற்றும் அழகான சுற்றுலா தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. காசிவிஸ்வநாதர் கோவில்:
நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் காசி விஸ்வநாதர் கோவில் தான். இந்த கோவில் தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.
மேலும் இது ஒரு தென்காசி சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றும் ஆகும். அதனால் அடுத்த முறை நீங்கள் தென்காசிக்கு சென்றால் இந்த காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஊட்டியை தவிர நீலகிரி மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..?
2. குண்டாறு அணை:
நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் குண்டாறு அணை தான். இந்த அணை குற்றாலத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த அணை குடும்பத்தினருடன் சுற்றிப்பார்க்க மிகவும் ஏற்ற சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் தென்காசிக்கு சென்றால் இந்த குண்டாறு அணைக்கு சென்று வாருங்கள்.
3. கண்ணுபுளி மெட்டு அருவி:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் கண்ணுபுளி மெட்டு அருவி தான். இந்த கண் கவரும் அருவி குண்டாறு அணைக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவி மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் அருவியாக உள்ளது.
இந்த அருவி குடும்பத்தினருடன் சுற்றிப்பார்க்க மற்றும் குளித்து மகிழ மிகவும் ஏற்ற சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் தென்காசிக்கு சென்றால் இந்த கண்ணுபுளி மெட்டு அருவிக்கு சென்று வாருங்கள்.
4. கருப்பாநதி அணை:
நாம் அடுத்து காண இருக்கும் சுற்றுலா தலம் கருப்பாநதி அணை தான். இந்த அணை கடையநல்லூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இது ஒரு அருமையான சுற்றுலா தலமாக உள்ளது.
அதனால் அடுத்த முறை நீங்கள் தென்காசிக்கு சென்றால் இந்த கருப்பாநதி அணைக்கு சென்று வாருங்கள்.
5. அடவிநயினார் அணை:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் அடவிநயினார் அணை தான். இந்த அணை செங்கோட்டையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேக்கரையில் அமைந்துள்ளது.
இந்த அணை குடும்பத்தினருடன் சுற்றிப்பார்க்க மிகவும் ஏற்ற சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் தென்காசிக்கு சென்றால் இந்த அடவிநயினார் அணைக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..!
6. குஷி நீர் பூங்கா:
நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் குஷி நீர் பூங்கா தான். இது தென்காசியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பல நீர் விளையாட்டுகள் உள்ளதால் இது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க மிகவும் ஏற்ற சுற்றுலா தலமாக அமைந்துள்ளது.
அதனால் அடுத்த முறை நீங்கள் தென்காசிக்கு சென்றால் இந்த குஷி நீர் பூங்காவுக்கு சென்று வாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |