Thiruvallur District Tourist Places in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் சுற்றுலா செல்வது என்றால் மிகவும் பிடித்த செயலாக இருக்கும். அப்படி சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளவர்களுக்காகத் தான் நமது பதிவின் மூலம் தினமும் அருமையான சுற்றுலா தலங்கள் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான மற்றும் சுவாரசியமான சுற்றுலா தலங்கள் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன இடங்கள் என்று அறிந்து கொண்டு அடுத்த முறை நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் இந்த பதிவில் கூறியுள்ள சுற்றுலா தலங்களுக்கெல்லாம் சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்
Thiruvallur District Tourist Places in Tamil:
தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் ஜனவரி 01- ஆம் தேதி 1997-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது.
இங்கு பாய்கின்ற ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் நாடார் ஆறு ஆகிய ஆறுகள் இந்த மாவட்டத்தை நன்கு செழிப்பாக மாற்றுகிறது. மேலும் பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி பார்க்கலாம்.
1. திருத்தணி முருகன் கோவில்:
நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் திருத்தணி முருகன் கோவில் தான். இந்த கோவில் திருவள்ளுரிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தணி மலையின் மீது அமைந்துள்ளது.
இந்த கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. மேலும் இங்குதான் முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்துக் கொண்டார். மேலும் பல சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோவிலுக்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அதனால் அடுத்தமுறை நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக இந்த திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்
2. பூண்டி அணை:
நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் பூண்டி அணை தான். இந்த அணை திருவள்ளுரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை சென்னை மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இந்த அணை திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. அதனால் அடுத்தமுறை நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக இந்த பூண்டி அணைக்கு சென்று வாருங்கள்.
3. குடியம் குகைகள்:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் குடியம் குகைகள் தான். இந்த குகைகள் திருவள்ளூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிக்குன்றம் காப்பு காட்டில் அமைந்துள்ளது.
இங்கு சென்றால் கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாற்று சின்னங்களை காணலாம். அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அதனால் அடுத்தமுறை நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக இந்த குடியம் குகைகளுக்கு சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா
4. Queensland Amusement Park:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் Queensland Amusement Park தான். இந்த Park திருவள்ளூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விளையாடி மகிழும் வகையில் பல விளையாட்டுகள் அமைந்துள்ளது. அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அதனால் அடுத்தமுறை நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக இந்த Queensland Amusement Park-க்கு சென்று வாருங்கள்.
5. செம்பரம்பாக்கம் ஏரி:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் செம்பரம்பாக்கம் ஏரி தான். இந்த ஏரி சென்னையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சோழர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான ஏரி ஆகும்.
இது சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.
அதனால் அடுத்தமுறை நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக இந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |