வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்..!

Updated On: January 24, 2023 8:45 AM
Follow Us:
tirupati tourist places in tamil
---Advertisement---
Advertisement

கீழ் திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்

சுற்றுலா என்றால் அனைவருமே ஊட்டி கொடைக்கானல் செல்வார்கள், அல்லது வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இது போல் நிறைய பிரபலமான இடத்திற்கு செல்வார்கள். சிலருக்கு ஆன்மீக ரீதியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சில இடங்களுக்கு சென்று வந்தால் மன நிறைவாக இருக்கும். ஆன்மீக பயணம் செய்த மாதிரியும் இருக்கும், சுற்றுலா சென்று வந்த மாதிரியும் இருக்கும். சிலர் வருடா வருடம் திருப்பதி செல்வார்கள். அங்கு அவர்கள் 2 இடத்திற்கு மட்டும் சென்று விட்டு மற்ற இடங்களுக்கு செல்லாமல் வந்து விடுவார்கள். இனி திருப்பதிக்கு சென்றால் இந்த இடங்களுக்கு சென்று பார்த்து வாருங்கள்..!

திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்:

கபில தீர்த்த அருவி:

கபில தீர்த்த அருவி

திருப்பதிக்கு பல தடவை சென்றவர்கள் கூட இந்த கபில தீர்த்த அருவிக்கு செல்லாமல் இருப்பார்கள். இந்த இடமானது கீழ் திருப்பதியில் தான் உள்ளது. அது மட்டுமில்லாமல் இங்கு கபிலேஸ்வரர் கோவில் உள்ளது. அது பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும். திருப்பதி போனால் பார்த்துவிட்டு வாருங்கள்..!

நகரவனம் ஜங்கிள் புக்:

நகரவனம் ஜங்கிள் புக்

கண்டிப்பாக திருப்பத்தில் இப்படி ஒரு இடம் இருப்பது தெரிய வாய்ப்பு இல்லை. திருப்பதி மலையை சுற்றி பார்க்கவேண்டும் என்று ஆசை படுபவர்களுக்கு இந்த இடம் தகுந்த இடமாக இருக்கும். இந்த இடத்தில் இன்னொரு அருமையான விஷயம் என்னவென்றால், இங்கு அருவி ஒன்று உள்ளது. இந்த இடத்தில மிகவும் பாதுகாப்பாக இயற்கை அழகை பார்க்க முடியும். பெரிய அணில், குரங்கு என நிறைய விலங்குகளை பார்த்து ரசிக்க முடியும்.

மால்வாடி குண்டம்:

மால்வாடி குண்டம்

இது அருமையான அருவி தாங்க இது வேறு எங்கையும் இல்லை ஜங்கிள் புக் உள்ள பக்கம் தான் உள்ளது. இதுவும் கீழ் திருப்பதியில் தான் உள்ளது. இந்த இடத்திற்கு கீழ் பக்கம் பள்ளம் மாதிரி ஒரு இடம் உள்ளது. அதனால் தான் இதற்கு மால்வாடி குண்டம் என்று பெயர் பெற்றது.

ஆகாச கங்கை:

ஆகாச கங்கை

இந்த இடம் மேல் திருப்பதியில் தான் உள்ளது. அதுவும் எழுமையான் கோவிலிருந்து சரியாய் 7 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. இந்த இடத்திற்கு செல்ல நிறைய அரசு பேருந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் நிறைய ஆட்டோக்கள், ஜீப் உள்ளது. இந்த அருவியிலிருந்து பாட்டிலில் தீர்த்தம் பிடித்தும் செல்வார்கள். இங்கு குளிக்கவும் முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!

பாப விநாசம் திருப்பதி:

இந்த இடமானது திருப்பதிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு ஒரு Tam உள்ளது. இப்பொது குளிக்க முடியாது. அந்த தண்ணீரை தான் குடிக்க பயன்படுத்துகிறார்கள். அங்கு குளித்துவிட்டு அங்கு உள்ள கங்காதேவி கோயிலில் குளித்தால் நாம் செய்த பாவம் அனைத்தும் கழிந்துவிடும் என்பார்கள்.

ஜாபாலி திருப்பதி:

ஜாபாலி திருப்பதி

இந்த இடம் ஆகாச கங்கைக்கு செல்வதற்கு 1 கிலோ மீட்டருக்கு முன்னாடியே இருக்கும். அதுவும் மலையில் ஏறிசென்று அங்குள்ள ஆஞ்சிநேயரை வணங்கி வரவேண்டும். சூப்பரான இயற்கையான இடம். இங்கு மர அணில்கள் இருக்கும்.

சிலா தோரணம்:

சிலாதோரணம்

இந்த இடம் ஒரு பாறை அமைப்பு, இது 450 கோடி ஆண்டு பழமையானது என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு பார்க் உள்ளது, குடும்பத்துடன் சென்று சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.

சக்கர தீர்த்தம்:

சக்கர தீர்த்தம்

இந்த இடம் எங்கு உள்ளது என்றால் சிலாதோரணத்திலிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால் இந்த இடத்திற்கு செல்லலாம். இங்கு குளிக்க சரியான இடமாக இருக்கும். ஆனால் இங்கு யாருக்கும் குளிக்கமாட்டார்கள், ஏனென்றால் இது ஒரு புண்ணிய தீர்த்தம் என்பதால்.

ஸ்ரீ வாரி பாதம்:

ஸ்ரீ வாரி பாதம்

இந்த இடத்தில் பெருமாளுடைய பாதம் இருக்கும். அதனை சென்று பார்க்கமுடியும். முன்பு இதனை தொட்டு பார்க்க முடியும், ஆனால் இப்போது கண்ணாடி பெட்டிக்குள் உள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉  இராமநாதபுரம் மாவட்டத்தில் இப்படியெல்லாம் கூட சுற்றுலா தலங்கள் இருக்கிறதா..?

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now