விருதுநகர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் | Virudhunagar Tourist Places
பொதுவாக சுற்றுலா என்றால் அதில் இரண்டு வகையான நபர்கள் மட்டுமே இருப்பார்கள். ஒன்று நிறைய ஊர்களுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் மற்றொன்று எந்த ஊருக்கும் சுற்றுலாவே செல்லாதவர்கள். இப்படி இரண்டு வகையில் நபர்கள் இருந்தாலும் கூட சுற்றுலா என்பது நாம் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் கண்டு களிக்க வேண்டிய ஒரு இடம் ஆகும். அந்த வகையில் நாம் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் அங்க என்னென்ன இடங்கள் இருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. அப்படி தெரியாத பட்சத்தில் சுற்றுலாவின் போது நிறைய இடங்களுக்கு செல்லாமல் தெரிந்த இடங்களுக்கு மட்டும் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிவிடுகின்றனர். ஆகவே நீங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல போகிறீர்கள் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அங்க என்னென்ன சுற்றுலா தலங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு மகிழ்ச்சியாக சுற்றி பாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்..!
Virudhunagar Tourist Places in Tamil:
கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராசர் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்கள் பிறந்த மாவட்டம் தான் விருதுநகர். இந்த விருதுநகர் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மார்ச் மாதம் 8-ம் தேதி 1985- ஆம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
பால்கோவாவிற்கு சிறப்பு வாய்ந்த ஊர் என்றால் அது விருதுநகர் தான். இத்தகைய ஊரில் கண்ணை கவரும் அழகான மாவட்டம் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம் வாருங்கள்.
காமராஜர் நினைவு இல்லம்:
விருதுநகர் மாவட்டத்தின் மைய பகுதியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் நினைவு இல்லம் அமைந்திருக்கிறது. இந்த நினைவு இல்லம் விருதுநகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய நினைவு இல்லத்தை பார்ப்பதற்கு என்று இன்று வரையிலும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில்:
இரண்டாவதாக நாம் பார்க்கப்போகும் இடம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
இத்தகைய இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் நமது உடலில் உள்ள அனைத்து நோய்களும் சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த கோவில் தென்மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலாக உள்ளது. அதனால் நீங்கள் விருதுநகருக்கு சென்றால் மறக்காமல் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்⇒தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்:
ஆயிரம் ஆண்டுகள் பலமை வாய்ந்த கோவிலாக இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த திருத்தலமாக காணப்படுகிறது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது
அதுமட்டும் இல்லாமல் இது மிகவும் சிறப்புமிக்க கோயிலாகவும் இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பால்கோவா என்பது இதனுடைய மற்றொரு சிறப்பாக உள்ளது. அதனால் இங்கு நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அரசு அருங்காட்சியகம்:
நான்காவதாக நாம் பார்க்கப்போகும் இடம் விருதுநகர் அரசு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியத்தில் நிறைய சிறப்புமிக்க பொருட்கள் காணப்படுகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் பார்ப்பதற்கு புதிதாகவும் மற்றும் வெவ்வேறு வகையாகவும் இருப்பதனால் இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நீங்கள் ஒரு முறை இந்த இடத்திற்கு சென்றால் போதும் அந்த இடத்தை பார்த்து வியந்து போவீர்கள்.
வைத்தியநாதன் கோவில்:
விருதுநகர் மாவட்டத்தில் நாம் ஐந்தாவதாக பார்க்கப்போகும் இடம் வைத்தியநாதன் கோவில் ஆகும். இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் மிகப்பெரிய சிவ தலமாக அமைந்துள்ளது.
இத்தகைய கோவிலில் காட்சி அளிக்கும் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் ஒரு கடவுகளாக இருக்கிறார் என்று மக்கள் அனைவராலும் கூறப்படுகிறது.
செண்பக தோப்பு:
ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த செண்பக தோப்பு அமைந்துள்ளது. இந்த தோப்பு அழகிய இயற்கை எழிலுடன் காணப்படும் ஒரு இடமாக இருக்கிறது.
இத்தகைய இடத்தில் ஓடை, அருவி என இயற்கையினை அவ்வளவு அழகாக வருணிக்கும் வகையில் இந்த இடம் அமைத்துள்ளது. நீங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றால் மறக்காமல் இந்த செண்பக தோப்பிற்கு சென்று வாருங்கள்.
நமது பதிவில் சொல்லப்பட்டுள்ள இடத்தை மறக்காமல் நீங்கள் விருதுநகர் மாவட்டம் சுற்றுலா செல்லும் போது கண்டு களித்து வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |