குறைந்த பட்ஜெட்டில் விசா இல்லாமல் செல்ல அசத்தலான சுற்றுலா நாடுகள் | Without Visa Low Budget Tourist Places in Tamil
சம்மர் சீசன் ஆரம்பித்தவுடன் எல்லோருக்கும் சம்மர் Vacation ஆரம்பமாகிவிடும். எந்த ஊருக்கு போகலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சிலர் உள்ளூரில் உள்ள இடங்களை சுற்றி பார்ப்பார்கள், ஒரு சில பேர் வேறு நாட்டிற்கு செல்ல விரும்புவார்கள். வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் விசா வேண்டும், ஆனால் ஒரு சில நாடுகளுக்கு விசா இல்லாமலே நம்மால் குறிப்பிட்ட காலத்திற்கு பயணிக்க முடியும். அப்படி பயணிக்கும் ஒரு சில நாடுகள் பற்றியும், அதற்கு தேவைப்படும் செலவு பற்றிய முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம், விசா இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் ஊர் சுற்ற விரும்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு செல்லலாம் என்று தெரிந்து கொள்வோம்.
கத்தார் (Qatar):
- விசா இல்லாமல் இந்தியன் பாஸ்போர்ட் வைத்து கத்தார் செல்லலாம். சுற்றி பார்ப்பதற்கு ஒரு சிறந்த இடம் கத்தார், இங்கு நீங்கள் Al Jassasiya Carvings, Doha Desert, The National Museum of Qatar, Barzan Towers etc போன்ற இடங்களை சுற்றி பார்க்கலாம்.
- இங்கு நீங்கள் 30 நாட்கள் வரை தங்கலாம், சுற்றி பார்ப்பதற்கு சிறந்த மாதம் நவம்பர் – ஏப்ரல். சென்னையிலிருந்து கத்தாருக்கு செல்வதற்கு நேரடி விமானம் உள்ளது.
- விமான கட்டணம் Rs.40,000 – Rs.50,000/- வரை தேவைப்படும்.
- Qatar currency – 1 Qatari Rial equals 21.07 Indian Rupee. கத்தாருக்கு 1 நபருக்கான பட்ஜெட் Rs.35,000/- வரை தேவைப்படும்.
இந்தோனேசியா (Indonesia):
- பாலி தீவு சுற்றிபார்ப்பதற்கு சிறந்த இடம், இங்கு நீங்கள் பதுர்மலை, உலுவாட்டு கோயில், வாட்டர் ஸ்போர்ட்ஸ், புரா டனா லாட் கோயில் போன்றவை சுற்றுலா சென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
- இங்கு நீங்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணிக்க முடியும். பாலி செல்வதற்கு சிறந்த விமானம் இதற்கு கட்டணம் Rs.25,000 – Rs.30,000 வரை தேவைப்படும், Travel Time 10 மணி நேரம் ஆகும்.
- இங்கு நீங்கள் ஏப்ரல் – அக்டோபர் மாதம் அல்லது ஜூன் -ஆகஸ்ட் சென்றால் சூப்பராக இருக்கும்.
- இந்தோனேசியாவிற்கு 1 நபருக்கான பட்ஜெட் Rs.35,000/- வரை தேவைப்படும். மூன்று நபருக்கு 1,05,000/- தேவைப்படும்.
நேபால் (Nepal):
- நேபாலுக்கு செல்வதற்கு உங்களிடம் விசா இருக்க வேண்டிய அவசியமில்லை. காத்மாண்டு சுற்றி பார்ப்பதற்கு சிறந்த இடம். இங்கு நீங்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம்.
- செப்டம்பர் – டிசம்பர் மாதம் இங்கு செல்வதற்கு உகந்த மாதம். Driving License இருந்தால் By Road மூலமாகவும் செல்லலாம், மேலும் இங்கு நீங்கள் தொழில் கூட தொடங்கலாம்.
- சென்னையில் இருந்து நேபால் செல்வதற்கு Travel Time – 7 மணி நேரம், ஏனெனில் இதற்கு நேரடி விமானம் கிடையாது. Flight Time 5 மணி நேரம் தான் ஆனால் 2 மணி நேரம் டெல்லியில் Wait பண்ண வேண்டி வரும். விமான கட்டணம் Rs.15,000/- to Rs.20,000/- வரை தேவைப்படும்.
- 1 Nepalese Rupee equals 0.62 Indian Rupee. நேபால் செல்வதற்கு 1 நபருக்கான பட்ஜெட் Rs.25,000/- வரை தேவைப்படும். இரண்டு நபருக்கு 50,000/- தேவைப்படும்.
மாலத்தீவு (Maldives):
- வெறும் பாஸ்போர்ட் வைத்து விசா இல்லாமல் மாலத்தீவில் 30 நாட்கள் வரை தங்க முடியும். Atoll Transfer, National Museum, Artificial Beach, Grand Friday Mosque போன்றவை கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்.
- இங்கு செல்வதற்கு சிறந்த மாதம் நவம்பர் – ஏப்ரல். ஆனால் மே மற்றும் ஜூன் மாதம் மழை அதிகம் என்பதால் அந்த இரண்டு மாதங்கள் மட்டும் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது.
- மாலதீவிற்கான Travel Time – 4-1/2 மணி நேரம், விமான கட்டணம் Rs.15,000/- to Rs.20,000/- வரை தேவைப்படும்.
- 1 Maldivian Rufiyaa equals 4.96 Indian Rupee. மாலத்தீவு செல்வதற்கு 1 நபருக்கான பட்ஜெட் Rs.25,000/- வரை தேவைப்படும். இரண்டு நபருக்கு 50,000/- தேவைப்படும்.
செர்பியா (Serbia):
- ஐரோப்பாவில் உள்ள இடங்களில் இந்தியன் பாஸ்போர்ட் வைத்து விசா இல்லாமல் பயணிக்கும் இடம் செர்பியா. இங்கு சுற்றிபார்ப்பதற்கு என்று இயற்கை சார்ந்த இடங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளது.
- இங்கு வருவதற்கு சூப்பரான மாதம் என்றால் மார்ச் – மே, செப்டம்பர் – அக்டொபர் போன்ற மாதங்கள் தான்.
- இங்கு நீங்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் இருக்க முடியும் ஒரு டிரிப்பிற்கு Rs.60,000 – Rs.70,000 வரை தேவைப்படும்.
- சேர்பியாவிற்கு ஒரு நபருக்கு Rs.75,000/- வரை தேவைப்படும்.
குறிப்பு: விமான கட்டணம் சந்தை விலை நிலவரத்தை பொறுத்து மாறுபடும். இந்தியா பாஸ்போர்ட் மட்டும் வைத்துக்கொண்டு மேல் கூறப்பட்டுள்ள நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.
விசா இல்லாமல் செல்லும் நாடுகள் என்னென்ன தெரியுமா? |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |