காந்தி அடிகள் பொன்மொழி
நமது இந்திய நாடானது ஆங்கிலேயர்களிடம் 200 வருடங்களாக அடிமைப்பட்டு இருந்தது. அப்பொழுது நமது இந்திய நாட்டிற்கு விடுதலை வாங்கி தருவதற்கு பல சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுபட்டார்கள். அப்படி பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் தான் மகாத்மா காந்தி. இன்னும் சொல்ல போகணும் என்றால் நமக்கு சுதந்திரம் இவரால் தான் கிட்டியது என்றே கூற வேண்டும். இவர் தனது வாழ்க்கையை நமது நாட்டிற்காக பணயம் வைத்து நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார். இவர் அதிரடியாக செயல்படாமல் அகிம்சை முறையில் நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார். இப்படிப்பட்ட நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்ததால் இவரை தேச தந்தை என்றும் கூறுவார்கள். நமது தேச தந்தை காந்தி கூறிய சில பொன்மொழிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் பதிவிட்டுள்ள எந்த பொன்மொழி உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றதோ அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
மகத்துமா காந்தி பொன்மொழி:
கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
உங்களிடம் நகைசுவை உணர்வு இல்லையென்றால் நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
அகிம்சையிலும் சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |