செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிகளின் வீட்டில் பண மழை

Advertisement

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி 2025

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வரைக்கும் இருக்க கூடியவர். தற்போது சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் ஜூன் 30-ம் தேதி பெயர்ச்சி அடைய இருக்கிறார். செவ்வாய் பகவான் பூர நடச்த்திரத்திக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இந்த பெயர்ச்சி ஆனது 12 ராசிகளிலும் பழங்கள் இருந்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

மேஷம்:

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி 2025

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி ஆனது எல்லா விதத்திலும் சாதகமான பலனை கொடுக்கும். பணியிடத்தில் பணிகளில் முன்னேற்றம் காணப்படும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் புதிதாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு தொடங்கலாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கல் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வும் மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

சிம்மம்:

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி 2025

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி ஆனது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் வருமானம் ஆனது அதிகரிக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்து வைத்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆனது அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள்.திருமண வரன் அமையவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த நேரத்தில் வரன்கள் அமையும்.

மகரம்:

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நடச்த்திர பெயர்ச்சியானது சிறப்பாக காணப்படும். இந்த நேரத்தில் உங்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் ஆனது அதிகமாக காணப்படும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதை வைத்து வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொள்வீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசையை பபூர்த்தி செய்து கொள்வீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement