வீட்டில் செட்டிநாடு ஸ்டைலில் பால் பன் செய்முறை..!

Paal Bun Seivathu Eppadi

பால் பன் செய்வது எப்படி? Paal Bun Seivathu Eppadi?

Paal Bun Recipe in Tamil – டீக்கடை மற்றும் பேக்கிரியில் விற்கப்படும் பால் பன் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பற்றி இன்றைய சமையல் குறிப்பில் நாம் பார்க்கலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. சரி வாங்க இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி செய்ய வேண்டும், இதனை செய்ய எவ்வளவு நேரம் தேவைப்படும் போன்ற தகவலை இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு – 1/2 கப்
  • சக்கரை – 1/2 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • ஏலக்காய் – 3
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • தயிர் – 1/4 கப்
  • பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

பால் பன் செய்முறை – Paal Bun Recipe in Tamil:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் 1/2 கப் எடுத்து வைத்த சர்க்கரையில் இருந்து மூன்று ஸ்பூன் சக்கரையை மற்றும் மிக்ஸி ஜாரில் செய்துகொள்ளவும் பின் அதனுடன் 3 ஏலக்காவை சேர்த்து நன்றாக பொடித்தூக்கிள்ளுங்கள்.

பிறகு 1/4 கப் தயிரை இன்னொரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின் ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அதில் 1/2 கப் மைதா மாவு மற்றும் பொடி செய்த ஏலக்காய், நெயில் இரண்டு ஸ்பூன் மற்றும் உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

இவ்வாறு மிக்ஸ் செய்த பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தயிரை மைதா மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்துவிட வேண்டும்.

பிறகு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வடை மாவு பதத்திற்கு மாவை கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ளுங்கள். இவ்வாறு பிசைந்த மாவை 1/2 மணி நேரம் வரை மூடிபோட்டு ஊறவைக்க வேண்டும்.

அதற்குள் நாம் சர்க்கரை பாகு தயார் செய்துவிடலாம், அதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.

பாகு ஓரளவு பிசு பிசுப்பு தன்னை வரும் வரை காய்ச்சினால் போதும். ஆக பிசுபிசுப்பு தன்மை வந்ததும் அடைப்பை Off செய்து விடுங்கள்.

மாவு 1/2 மணி நேரம் ஊறியதும் பொரிப்பதற்கு தயாராகிடும், ஆக அடுப்பில் அடிகனமான ஒரு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றவும்.

எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறு சிறு உருண்டைகளாக போட்டு, பொன்னிறமாக வரும் வரை பொரிதெடுக்கவும்.

பிறகு பொரித்த பால் பன்னை சர்க்கரை பாகில் செய்து 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை ஊறவைத்து எடுத்தால் சுவையான பால் பன் தயார் உங்கள் வீட்டில் ஒரு முறை இங்கு குறியுள்ளதுபோல் செய்து பாருங்கள். நன்றி வணக்கம்..

பால் பன் செய்ய தேவைப்படும் நேரம்:

இந்த பால் பன் தயார் செய்வதற்கு குறைந்தது 1 மணி நேரம் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil