வளைகாப்பு கனவில் வந்தால் என்ன பலன்..! | Valaikappu Kanavil Vanthal

Advertisement

வளைகாப்பு கனவில் வந்தால் என்ன பலன்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வளைகாப்பு கனவில் வந்தால் என்ன பலன் (Valaikappu Kanavu Palangal in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, நமக்கு வரும் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். கனவு என்பது நமக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை கனவு மூலம் உணர்த்துகிறது. ஆனால், நாம் காணும் கனவிற்கு என்ன பலன் என்பது நம்மில் பலபேருக்கும் தெரியாது.

இதனால், நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்பதை பெரியவர்களிடம் கேட்டு தெறிந்து கொள்ள விரும்புவோம். எனவே, அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வகையான கனவுகளுக்கான கனவு பலன்களை கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்.  அதேபோல், இன்றைய பதிவில் வளைகாப்பு கனவில் வந்தால் என்ன பலன் என்பதை விவரித்துள்ளோம். எனவே, உங்களுக்கு வளைகாப்பு கனவில் வந்தால் அதற்கான பலன் என்ன என்பதை இப்பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வளைகாப்பு செய்ய தேவையான பொருட்கள்..!

Valaikappu Kanavu Palangal in Tamil:

வளைகாப்பு கனவில் வந்தால் என்ன பலன்

பொதுவாக வளைகாப்பு என்பது, வாழ்வில் வரவிற்கும் புதிய தொடக்கம் பற்றியும், புதிய பொறுப்புகள் வர இருப்பதையும், பிறருக்கு ஆதரவாக இருப்பதையும் மற்றும் சில தகுதி இல்லாதவர்களுக்கு ஆதரவாக இருந்து விட்டோமே என வருந்துவதையும் குறிக்கிறது.

வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால்:

கனவு காண்பவருக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதை குறிக்கிறது. மேலும், சுபசெய்திகள் கிடைக்கும் என்பதையும் உணர்த்துகிறது.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால்:

வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல் வந்தால், நீங்கள் வாழ்க்கையில் நடந்த எதிர்மறையான ஏமாற்றமான எண்ணங்களை தவிர்த்து புதிய முன்னேற்றமான பாதையில் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கர்ப்பிணி பெண் கனவில் வருவது நல்லதா..? கெட்டதா..?

வளைகாப்பை பார்ப்பது போல் கனவு வந்தால்:

வளைகாப்பு நடத்துவதை பார்ப்பது போல் கனவு வந்தால் ஏதோவொரு எண்ணத்தை எண்ணி கவலை பட இருப்பதையும், தூக்கத்தை கெடுக்கக்கூடிய தொழிலை செய்யவிருப்பதையும், பழைய தொழிலை விட்டு விட்டு முன்னேற்றமான தொழிலிலை செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பரிசு வாங்குவது போல் கனவு கண்டால்:

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பரிசு வாங்குவது போல் கனவு கண்டால், வாழ்க்கையில் வரும் எந்தவொரு கஷ்டங்கள் இருந்தாலும், அதனை உங்கள் புத்தியால் திறமையாக கையாள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

வளைகாப்பு அழைப்பிதழ் கொடுப்பதை போல் கனவு கண்டால்:

வளைகாப்பிறகு வாருங்கள் என அழைப்பிதழ் கொடுப்பதை போல் கனவு கண்டால், வாழ்க்கையில் வரும் புதிய தொடக்கத்தை ஏற்க அறிவுறுத்தியும், புதிய தொழில் தொடங்கி இருந்தால் தொழிலை மேம்படுத்தி கொள்ள வேண்டியும், பிறருக்கு உதவி செய்ய வேண்டியும் மற்றும் பிரரை ஊக்குவிக்கவும் அறிவுறுத்துகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும். 

Advertisement