அன்னையர் தினம் தோன்றிய வரலாறு..!

Advertisement

அன்னையர் தினம் வரலாறு | Mother’s Day History in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, அன்னையர் தினம் மே மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் ஒவ்வொருவரையும் வாழ வைக்கும் அன்னையரை நாம் என்றும் மறவாத வண்ணம் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தகவல் மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அன்னையர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.? அதற்கான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Mother’s Day History in Tamil பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.

அன்னையர் தினம் எப்போது 2024

அன்னையர் தினம் தோன்றிய வரலாறு:

அன்னையர் தினம் வரலாறு

அகிலமே போற்றக்கூடிய ஒரு தெய்வம் அனைவரும் வணங்கக்கூடிய தெய்வம் உண்டெனில் அது நம் அம்மா தான். உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஆனது, மற்ற தினங்களை போல ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்படுவதில்லை.

பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய உட்பட பெரும்பாலான நாடுகளில் மே மாதத்தில் வரும் இரண்டவாது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 உலகமே கொண்டாடடும் அன்னையர் தினம் அமெரிக்காவில் தான் உருவானது. அதாவது அமெரிக்க சமூக ஆர்வலர் ஆன அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தின் கிராஃப்டன் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது ஆண்டு நடந்த யுத்த கலத்தில் பல வீரர்கள் உயிர் இழந்தார்கள். அவர்களின் குடும்பமும் சிதைந்து சீரழிந்து. அப்படி சீரழிந்த குடும்பங்கள் ஓன்று சேரவும், சமாதானத்திற்கு வரவும் கடுமையாக போராடினார் அன்னா ஜார்விஸ். இவருக்கு ஒரு பார்வையற்ற மகள் ஒருவர் உள்ளார்.

தன் மகளுடன்  இறுதி மூச்சு வரைக்கும் சமூக ஆர்வலராக இருந்து 1904 ஆம் ஆண்டில் இறந்தார்.  அவருடைய பார்வையற்ற மகள் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் தன் தாயின் நினைவாக உள்ளூரில் உள்ள சர்ச் ஒன்றில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தன் தாயின் பெருமையை போற்றி வழிபடுவது போல், இன்றைய தினத்தில் அனைவரும் அவரவர்களின் தாயை வணங்க வேண்டும். எல்லோருடைய வீட்டிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் தோன்றியது.  

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2024

இந்நிலையில், 1913 ஆம் ஆண்டு தன் வேலைநிறுத்தம் காரணமாக அவரது மாநிலத்தில் உள்ள வேறு ஊரில் குடியேறினார். தன் தயார் செய்து விட்டு சென்ற சமூக பணியை ஒரு கடமையாகவே தொடர்ந்தார். பின் ஒடுக்கப்பட்டவர்களின் அமைப்பில் அவரை இணைத்தும் கொண்டார். அதன் பிறகு,  நீண்ட நாட்களாக தன் மனதில் உறுத்தி வந்த அன்னையர் தினத்தை மணிலா அரசிற்கு தெரிவித்தார். மாநில அரசும் அவரது கருத்தை ஏற்று 1913 ஆம்ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்தது. அன்னையர் தின நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வருடந்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவை அடுத்து கனடா அரசும் இதனை அங்கீகரித்தது. அதனை தொடர்ந்து 48 நாடுகள் வருடந்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.  

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement