அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு | Ambedkar History in Tamil

Advertisement

அம்பேத்கர் வரலாறு | Dr Br Ambedkar History in Tamil

நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியம் என உணர வைத்த முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பல தலைவர்களில் அம்பேத்கர் மிகவும் முக்கிய தலைவர். தீண்டாமை என்ற கொடிய நோயை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நினைத்த அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Dr Br Ambedkar:

பி.ஆர்.அம்பேத்கர் ஒரு முன்னணி ஆர்வலர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார், அவர் இந்தியாவின் தலித்துகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரின் மேம்பாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான தூதராக இருந்த அவர், இந்திய சமூகத்தை துண்டு துண்டாகச் சிதைத்து, முடங்கிய சாதிய பாகுபாட்டை ஒழிப்பதற்காக தொடர்ந்து போராடினார் .

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1947 ஆகஸ்ட் 29 அன்று, அரசியலமைப்புச் சபை ஒரு வரைவுக் குழுவை அமைத்தது. இந்த வரைவுக் குழு அம்பேத்கர் தலைமையில் இருந்தது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் சட்ட வல்லுநர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் நிறைய போராடினார், அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டங்களை சுட்டிக்காட்டினார் மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஒரே தலைமை சிற்பி ஆவார் . இன்றுவரை, அவர் தனது நல்ல செயல்களுக்காகவும் நலனுக்காகவும் நினைவுகூரப்படுகிறார்.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

பிறப்பு – Ambedkar History in Tamil

  • இவர் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 1891-ம் ஆண்டு இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி சக்பால், தாயின் பெயர் பீமாபாய் ஆகும். இவருடைய இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி ஆகும். இவர் ஒரு மராத்திய குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
  • இவர் சாத்தாரா என்ற பள்ளியில் தனது கல்வியை தொடங்கினார். பள்ளியில் படிக்கும் போது தாழ்த்தப்பட்ட பிரிவினை சார்ந்தவர் என்ற காரணத்திற்காக பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களோடு ஒன்றாக அமரக்கூடாது, விளையாடக்கூடாது, அனைவரும் நீர் அருந்தும் பாத்திரத்தில் நீர் குடிக்கக்கூடாது தனி மண்பானையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என பல இன்னல்களை சந்தித்து தனது ஆரம்ப கல்வியினை முடித்தார்.

பெயர்க்காரணம் – அம்பேத்கர் வரலாறு:

இவர் பள்ளி படிக்கும் போது மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவருக்கு உதவியாக இருந்தார். பின் அந்த ஆசிரியரின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் காரணமாக பெற்றோர் வைத்த பீமாராவ் ராம்ஜி என்ற பெயருக்கு பின்னால் அவருடைய ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை இணைத்து கொண்டார். அன்று முதல்தான் இவருக்கு பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்ற பெயர் கிடைக்கப்பெற்றது.

இதையும் கிளிக் செய்யுங்கள்–> அம்பேத்கர் தத்துவம் | Ambedkar Thathuvam in Tamil

இளங்கலை படிப்பு – Dr Ambedkar History in Tamil:

  • 1904-ம் ஆண்டு தந்தையின் வேலை காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். மும்பையில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். பின் மும்பையில் பரோடா மன்னரின் உதவியால் 1912ல் அறிவியல், பொருளாதாரத் துறை மற்றும் அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

படைத்தலைவர் – அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு:

  • தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பரோடா மன்னரின் அரசவையில் சிறிது காலம் படைத்தலைவராக இருந்தார். அந்த அரசவையிலும் பல இன்னல்களை சந்தித்தார். அதனால் அம்பேத்கார் அவர்கள் படைத்தலைவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மும்பை திரும்பினார். பின்னர் பரோடா மன்னர் அம்பேத்கரை சந்தித்து அவருடைய இன்னல்களை அறிந்து அவருடைய கல்வியை மேம்படுத்துவதற்காக வெளிநாடு அனுப்பி படிப்பதற்கு உதவி செய்தார்.

முதுகலை படிப்பு – Ambedkar History in Tamil:

  • பின்னர் முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்று அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளை படித்து தனது முதுகலை படிப்பை முடித்தார்.

சமூகப்பணி – அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு:

  • முதுகலை படிப்பை முடித்து நாடு திரும்பிய அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் உள்ள நிலைமை மாற வேண்டும் என்று போராட்டங்களை மேற்கொண்டார். தீண்டாமை மற்றும் சாதி வன்கொடுமை போன்றவற்றை ஒழிப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை தனது பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
அம்பேத்கர் பொன்மொழிகள்
  • இரட்டை வாக்குரிமை என்ற சட்டத்தினை பெறுவதற்காக லண்டன் சென்று இரண்டாம் உலக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு அந்த சட்டத்தினையும் பெற்றார். ஆனால் இந்த இரட்டை வாக்குரிமை சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை. அதனால் இரட்டை வாக்குரிமை சட்டம் கைவிடப்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

சட்ட அமைச்சர் – Dr Br Ambedkar History in Tamil:

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு இவர் சட்ட அமைச்சராக பதவியேற்றார். இந்த பதவியின் மூலம் குடிமக்களின் உரிமைகள், பாதுகாப்பிற்காக அரசியலில் பல சட்ட பிரிவுகளை தொகுத்தார். இது மிகச்சிறந்த சமூக ஆவணமாக கருதப்படுகிறது.

பெளத்த சமயம் – டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு:

இந்து மதத்தினை சார்ந்தவர் என்ற காரணத்தால் தான் பல துன்பங்களை மேற்கொள்கிறோம் என்று கருதிய அம்பேத்கார் அவர்கள் புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டு பௌத்த மதத்திற்கு மாற முடிவு செய்தார்.

Dr Br Ambedkar பெயரில் விருதுகள்:

  • டாக்டர் அம்பேத்கர் சர்வதேச விருது
  • டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது
  • டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நூற்றாண்டு விருது
  • டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் தேசிய தகுதி விருது திட்டம்

இறப்பு – History Of Ambedkar in Tamil

பௌத்த மதத்திற்கு மாறும் முன்னரே சர்க்கரை நோயால் 1955-ம் ஆண்டு பாதிக்கப்பட்டார். நோய் தீவிரம் அடைந்து தன் பார்வையை இழந்து பின் படுக்கையில் இருந்தார். பின் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறங்கி  கொண்டிருக்கும் போதே டெல்லியில் அவருடைய உயிரை நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் நல் வாழ்வுக்காக போராடிய மாமனிதர் அம்பேத்கர் அவர்கள் ஆவார்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement