வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோளறு பதிகம் வரலாறு | Kolaru Pathigam History in Tamil

Updated On: April 20, 2024 1:24 PM
Follow Us:
Kolaru Pathigam History in Tamil
---Advertisement---
Advertisement

Kolaru Pathigam History in Tamil

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் கோளறு பதிகத்தின் வரலாறு என்ன மற்றும் கோளறு பதிகத்தின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக கோளறு பதிகம் என்பது நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் பெருகவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையால் நாம் கோளறு பதிகத்தின் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க. மேலும் நீங்கள் கோளறு பதிகத்தின் பாடல் வரிகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கோளறு பதிகம் பாடல் வரிகள்

கோளறு பதிகத்தின் ஆசிரியர் யார்:

பொதுவாக பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று தான் கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் என்பவர் யார் என்று நம் அனைவருக்குமே தெரியும். தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் தான் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சிவபாதவிருதயர். தாயார் பெயர் பகவதி அம்மையார் ஆகும்.

கோளறு பதிகம் வினா விடை

கோளறு பதிகம் வரலாறு: 

ஒரு நாள் திருஞான சம்பந்தர் மதுரை செல்ல போகிறேன் என்று திருநாவுக்கரசரிடம் விடைபெற போகிறேன் என்று சொல்வதற்காக சென்றார். அப்போது திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

ஆனால் திருஞானசம்பந்தர் “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்..? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார். அந்த பத்து பாடல்களின் தொகுப்பான பதிகமே கோளறு பதிகம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். எனவே இது கோளறு பதிகம் என்று பெயர் பெற்றது. இந்த பத்து பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

கோளறு பதிகம் எதனால் இயற்றப்பட்டது: 

பொதுவாக கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தங்களை இழக்கும் மக்கள், இந்தப் கோளறு பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி ஆகும்.

இன்றைய சூழலிலும், ஏதாவது முக்கிய காரியமாக வெளியில் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ அல்லது முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் இங்கு பலரிடம் உண்டு.

ஆகவே எந்தவொரு கிரக தோஷத்தில் இருந்து தப்பிக்கவும் இந்த கோளறு பதிகத்தை கூறலாம்.

கோளறு பதிகம் நன்மைகள் மற்றும் பாடல் விளக்கம்

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now