Droupadi Murmu History in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பெண்கள் என்றாலே வலிமை என்பதற்கு உதாரணமாக நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள். அப்படி நம் அனைவருக்கும் உதாரணமாக இருக்கும் ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். சரி உங்களுக்கு நம் நாட்டின் குடியரசு தலைவர் யார் என்று தெரியுமா..? அட இது கூடவா தெரியாமல் இருப்போம் என்று சொல்வீர்கள். உண்மை தான். சரி நம் நாட்டின் குடியரசு தலைவர், திரௌபதி முர்மு என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர்களுடைய வரலாறு என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா
திரௌபதி முர்மு வரலாறு:
பிறப்பு: 20 ஜூன் 1958
பெயர்: திரௌபதி முர்மு
தந்தை பெயர்: பிராஞ்சி நாராயண் துடு.
பிறந்த இடம்: பைடாபோசி கிராமம், மயூர்பஞ்ச், ஒடிசா
கல்வி: பட்டதாரி (இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்).
தொழில்: ஆசிரியர், சமூக சேவகர், அரசியல்வாதி
கணவர் பெயர்: திரௌபதி முர்மு ஷ்யாம் சரண் முர்முவை மணந்தார். வங்கியாளராக இருந்த அவர், 2014 -ல் காலமானார்.
குழந்தைகள்: 2 மகன்கள், 1 மகள்.
கட்சியின் பெயர்: பாரதிய ஜனதா கட்சி.
திரௌபதி முர்மு பற்றிய தகவல்:
திரௌபதி முர்மு ஜூன் 20, 1958 அன்று ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் பிரஞ்சி நாராயண் மற்றும் துடு ஆகியோரின் மகள். இவர் ஒடிசாவின் ரமாதேவி மகளிர் பல்கலைக்கழகத்தில் படித்து பல உயர் அமைச்சுப் பதவிகளில் பணியாற்றினார்.
அரசியல் பணியாளராகப் பணிபுரியும் முன், அரசுப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பயிற்றுவித்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ராய்ராங்பூர். மேலும், ஒடிசா அரசின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக இருந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் ஜார்கண்ட் மாநில கவர்னராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் மீன்வளம் மற்றும் விலங்குகள் துறை இணை அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும், ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.
திரௌபதி முர்மு ஆசிரியர் பணி:
திரௌபதி முர்மு மாநில அரசியலில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராகத் இருந்தார். பின் முர்மு ராய்ராங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும், ஒடிசா அரசின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.
திரௌபதி முர்மு அரசியல் வாழ்க்கை:
திரௌபதி முர்மு 1997 இல் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேர்ந்தார். மற்றும் ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில், அவர் ராய்ராங்பூர் நகர் பஞ்சாயத்தின் தலைவரானார். பாஜக பட்டியல் பழங்குடியினர் மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
அதன் பின் திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் ஆளுநராக மே 18, 2015 அன்று பதவியேற்று, ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநரானார். ஒடிசாவிலிருந்து இந்திய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் பழங்குடித் தலைவர் இவரே.
இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவர் யார்..?
திரௌபதி முர்மு ஜூலை 25, 2022 அன்று இந்தியாவின் 15 -வது குடியரசு தலைவராக பதவியேற்று உள்ளார். இவர் தான் இந்தியாவின் முதல் பழங்குடியின் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவர் குடியரசு தலைவர் ஆனபோது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறையில் “சுதந்திர இந்தியாவில் பிறந்த, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் நான். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய நமது முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். சுதந்திர இந்தியாவின் குடிமக்கள்.” என்று கூறியுள்ளார்.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |