நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில், வரலாற்று நாயகர்களில் மக்களுக்காக உழைத்தவர்கள் அதிகம், அவர்களில் ஒருவர் நெல்சன் மண்டேலா. உலகில் அதிகம் மதிக்கப்படும் ஒரு நபராகவும், தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி உலகமே நாயகனாக கொண்டாடும் ஒரு மனிதராகவும், தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியை அடியோடு மாற்ற விரும்பியவராகவும், உலக அமைதிக்கு அதிகம் போராடியவராகவும், தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவருமான நெல்சன் மண்டேலா அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18
நெல்சன் மண்டேலாவின் ஆரம்ப கால வாழ்க்கை
ரோலிஹ்லாலா மண்டேலா என்ற இயற்பெயரை கொண்ட நெல்சன் மண்டேலா 18 ஜூலை 1918-ல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டிரான்ஸ்கீயில் உள்ள மத்தாத்தாவில் பிறந்தார். நெல்சன் மண்டேலாவின் பெற்றோர் கட்லா ஹென்றி மபாகன்யிஸ்வா மற்றும் நோசெகெனி நோன்காபி ஆவார். இவர் தெம்பு அரச குடும்பத்தை சார்ந்தவர்.
அவரது ஆரம்ப பள்ளியில் அனைத்து குழந்தைகளுக்கும் கிறிஸ்துவ பெயர் வைப்பது வழக்கமாக இருந்தது, அந்த முறைப்படி அவரது ஆசிரியர், நெல்சன் என்ற பெயரை இவருக்கு சூட்டினார். தெம்பு வம்சத்தில் பள்ளிக்கு சென்ற முதல் நபர் நெல்சன் மண்டேலா ஆவர். தனது ஆரம்ப கால கல்வியை ஹீல்டவுனில் வெஸ்லியன் மேல்நிலைப் பள்ளியிலும், கிளார்க் பாரி போர்டிங் இன்ஸ்டிடியூட்டிலும் முடித்தார். இளங்கலை படிப்பை ஃபோர்ட் ஹேர் பல்கலைக்கழகக் கல்லூரியில் தொடங்கினார். ஆனால், அவர் 1941-ல் கல்லூரியில் மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்தியதால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு சுரங்க பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தார். 1941-ல் தடைப்பட்ட தனது இளங்கலை கல்வியை, தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தின் மூலம் முடித்தார்.
அடுத்தது விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் LLB படிக்க தொடங்கினர், பொருளாதார சூழல் காரணமாக அவரது கல்வி பாதியில் தடைப்பட்டது. 1989-ல் சிறையில் இருந்த கடைசி காலகட்டத்தில் தனது LLB படிப்பை முடித்தார். இதற்கிடையே லண்டன் பல்கலைக்கழகத்திலும் இவரது LLB பட்டம் தடைப்பட்டது.
அபுல் கலாம் ஆசாத் வாழ்க்கை வரலாறு
நெல்சன் மண்டேலாவின் அரசியல் நுழைவு
மண்டேலா தனது கல்லூரி காலத்திலேயே அரசியலில் ஈடுபாடுடன் காணப்பட்டாலும், 1944-ல் தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார். அவரின் முயற்சியால் தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் கழகம் ( ANCYL ) உருவானது.
தென்னாப்பிரிக்காவை நிறவெறி இல்லாத நாடாக்க விரும்பினார். ஆனால் அந்த நாட்டின் அரசாங்கம் எதிர்பாளர்களை கொல்லவும் காயப்படுத்தவும் தொடங்கியது. அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியதாகவும், தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு தூண்டியதாகவும் மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தேசத்திற்கான விசாரணையில்நெல்சன் மண்டேலா 
1962-ல் வன்முறையில் ஈடுபட்டதால் மண்டேலா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் அவர் “நான் வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகவும், கறுப்பின ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடினேன். அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சம வாய்ப்புகளுடனும் வாழும் ஜனநாயக மற்றும் சுதந்திர சமுதாயத்தின் இலட்சியத்தை நான் போற்றுகிறேன். இது ஒரு இலட்சியமாகும், அதற்காக நான் வாழ்ந்து சாதிக்க விரும்புகிறேன். ஆனால் தேவைப்பட்டால், அது ஒரு இலட்சியமாகும், அதற்காக நான் இறக்க தயாராக இருக்கிறேன். ” என்று கூறினார். விசாரணையின் முடிவில் 1962-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ராபன் தீவுக்கு அனுப்பப்பட்டார். பிறகு 1988-ல் அவரை ராபன் தீவில் இருந்து விக்டர் வெர்ஸடர் சிறைக்கு மாற்றப்பட்டார். 26 ஆண்டு 5 மாதங்களுக்கு பிறகு 1990-ல் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு..!
தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா
1994ல் தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். தென்னாப்பிரிக்க வரலாற்றில் ஜனநாயக முறைப்படிதேர்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் மண்டேலா ஆகும். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக மண்டேலா விளங்கினார். பழங்குடி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அதிகம் அக்கறை காட்டினார். மண்டேலாவின் ஜனாதிபதி பதவிக்காலம் ஜூன் 14,1999-ல் முடிந்தது. அவர் இடண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வர விரும்பவில்லை, என அறிவித்து தனது இறுதி உரையே நாட்டு மக்களுக்காக 1999 மார்ச் 29 நிகழ்த்தினார்.
1993ல் அவரது நிறவெறி எதிர்ப்பு நடவடிக்கைக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பட்டது.
76 வயதில் பல நோய்களை எதிர்கொண்டார், அவரின் $552,000 சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பகுதியை 1995ல் நிறுவிய நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மிகவும் எளிமையான முறையில் தனது வாழ்க்கையை நடத்தினார்.
ஜூன் 2004ல் மண்டேலா பொது வாழ்க்கையில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு
நெல்சன் மண்டேலாவின் இறப்பு
மார்ச் 2,2013 அன்று நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மண்டேலா, டிசம்பர் 5,2013 ல் தனது 95 வயதி சுவாசக்குழாய் தொற்றின் காரணமாக இறந்தார். அவர் இறக்கும் போது, மண்டேலா தென்னாப்பிரிக்காவில் “தேசத்தின் தந்தை” என்று பரவலாகக் கருதப்பட்டார்.
நெல்சன் மண்டேலா பெற்ற விருதுகள்
1990-இல், மண்டேலாவிற்கு, இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1992-இல் பாகிஸ்தானின் நிஷான் -இ-பாகிஸ்தான் என்னும் விருதை பெற்றது
1992-இல் துருக்கி அவருக்கு அட்டாடர்க் அமைதி விருது வழங்கியது. ஆனால், அந்த நேரத்தில் துருக்கி செய்த மனித உரிமை மீறல்களின் காரணமாக அவர் அந்த விருதை மறுத்தார். பின்னர் அவர் 1999-இல் விருதை ஏற்றுக்கொண்டார்
2009-இல், ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 18ஆம் தினத்தை சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தை உருவாக்கியது.
கனேடிய குடியுரிமை பெற்ற முதல் உயிருள்ள நபர் மண்டேலா ஆவார்.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |