பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு கட்டுரை – Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tami

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு – Bharathidasan History in Tamil

தென்னிந்தியாவின் புதுவையில் “கனகசுப்புரத்தினமாக” பிறந்து தமிழ் இலக்கிய, இலக்கணங்களை கற்று தேர்ந்து, பின் பாரதியார் மீது கொண்ட பற்றால் “பாரதி தாசனாக” மாற்றிக்கொண்டாராம். பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார். சரி இந்த பதிவில் பாரதிதாசனின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பாரதிதாசன் குறிப்பு எழுதுக – Bharathidasan History in Tamil:

  • இயற்பெயர்: சுப்புரத்தினம் (கனகசுப்புரத்தினம்)
  • புனைப்பெயர்: பாரதிதாசன்
  • பிறப்பு: ஏப்ரல் 29, 1891
  • பிறப்பிடம்: புதுவை
  • பெற்றோர்: கனகசபை முதலியார் – இலக்குமி அம்மாள்
  • துணைவி: பழநி அம்மையார்
  • இறப்பு: ஏப்ரல் 21, 1964
  • பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
  • நாட்டுரிமை: இந்தியன்

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்:

பாவேந்தர் பாரதிதாசன் தமிழகத்தை அடுத்துள்ள புதுச்சேரியில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி கனகசபை முதலியாருக்கு – இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் “சுப்புரத்தினம்”. அவரது தந்தை பெயரின் முதல் பாதியை சேர்த்து “கனகசுப்புரத்தினம்” என்று அழைக்கப்பட்டார்.

சிறுவயது முதலே தமிழ் மொழி மீது பற்றுடையவராக இருந்த பாரதிதாசன், அப்போதய புதுவை பிரெஞ்சுக்காரர்களின் பிடியில் சிக்கி இருந்ததால் ஒரு பிரஞ்சு பள்ளியில் சேர்ந்து படித்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடக்க கல்வியை திருப்புளிசாமி ஐய்யாவிடம் கற்ற அவர் சில தமிழ் அறிஞர்களின் உதவியால் தமிழ் பள்ளியில் சேர்ந்தார். அங்கு தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்ற அவர் சைவ சித்தாந்த வேத நூல்களையும் கற்று தேர்ந்தார்.

சிறு வயது முதலே அழகான பாடல்கள் எழுதும் திறன் பெற்றிருந்த பாரதிதாசன், தன் பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார். அங்கு சீரிய முறையில் தன் தமிழறிவை விரிவுபடுத்தியவர் மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலை பட்டத்தை இரண்டே ஆண்டுகளில் கற்று தேர்ந்தார். கல்லூரி படிப்பு முடித்த உடன் 1919-இல் காரைக்காலில் உள்ள அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார்.

பாரதியார் வாழ்க்கை வரலாறு | Bharathiyar History in Tamil

பாரதியார் மற்றும் பாரதிதாசன் இடையேயான சந்திப்பு:

ஒருமுறை பாரதிதாசன் அவர்கள் அவருடைய நண்பரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது ஒரு பாடலை பாடினார். அந்த விழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தார் அந்த பாடலே பாரதிதாசனை பாரதியாருக்கு அறிமுகம் செய்ய வைத்தது. அந்த பாடல் பாரதியாருக்கு மிகவும் பிடித்து போக அந்த பாடலை தனது சுதேசமித்திரன் இதழில் அவர் வெளியிட்டார்.

இல்லற வாழ்க்கை:

பழநி அம்மையார் என்பவரை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும் சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மூன்று மகள்களும் பிறந்தனர்.

பாரதிதாசனின் அரசியல் ஈடுபாடு:

தமிழ் மொழிக்காக தனது தொண்டினை ஆற்றிய அவர் அரசியலிலும் தனது தொண்டினை ஆற்ற தவறவில்லை. ஆம் பாரதிதாசன் அவர்கள் 1954-ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு 1960-ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்று அவர் தோல்வியை தழுவினார். பெரியாரின் கொள்கைகளில் ஆர்வம் நிறைந்த அவர் தனது பாடல்கள் மூலம் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்ற பெரியாரின் கொள்கைகளை தழுவி தனது பங்கினை அவரது பாடல்கள் மூலம் வழங்கினார்.

பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள்:

  • புரட்சிக்கவி(அறிஞர் அண்ணா)
  • புரட்சிக்கவிஞர் (பெரியார்)
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்

புனைப் பெயர்கள்:

பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,

  • கண்டழுதுவோன்
  • கிறுக்கன்
  • கிண்டல்காரன்
  • பாரதிதாசன்

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்

  • இசை அமுது
  • பாண்டியன் பரிசு
  • எதிர்பாராத முத்தம்
  • சேரதாண்டவம்
  • அழகின் சிரிப்பு
  • புரட்சிக்கவி
  • குடும்ப விளக்கு
  • இருண்ட வீடு
  • குறிஞ்சித்திட்டு
  • கண்ணகி புரட்சிக்காப்பியம்
  • மணிமேகலை வெண்பா
  • காதல் நினைவுகள்
  • கழைக்கூத்தியின் காதல்
  • தமிழச்சியின் கத்தி
  • இளைஞர் இலக்கியம்
  • சுப்பிரமணியர் துதியமுது
  • சுதந்திரம்
  • தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)

உரைநடை நூல்கள்

  • திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பாரதிதாசன் நாடகங்கள்:

  • சௌமியன்
  • நல்ல தீர்ப்பு
  • பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
  • சக்திமுற்றப் புலவர்
  • அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
  • இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  • சௌமியன்
  • படித்த பெண்கள்
  • இன்பக்கடல்
  • நல்லதீர்ப்பு
  • அம்மைச்சி
  • ரஸ்புடின்
  • அமைதி

பாரதிதாசன் நடத்திய இதழ்கள்

  • குயில்
  • முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)

பாரதிதாசன் படைப்புகள்:

கடவுள் மறுப்பு , சாதி ஒழிப்பு கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட இவர் அது சார்ந்து பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். “எதிர்பாராத முத்தம்”, “குடும்ப விளக்கு”, “இசையமுது”, “தமிழ் இயக்கம்”, “அழகின் சிரிப்பு”, “தமிழச்சியின் கத்தி”, “பாண்டியன் பரிசு”, “பெண்கள் விடுதலை” போன்றவை இவரது படைப்புகளில் மிக சிறந்ததாக கருதப்படுகின்றன.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்:

பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் பெரியார் “புரட்சி கவிஞர்” என்ற பட்டத்தையும் வழங்கினார். தமிழக அரசாங்கம் அவர் பெயரில் “பாரதிதாசன் பல்கலைக்கழகம்” என்ற மாநில பல்கலைக்கழகம் ஒன்றை திருச்சியில் நிறுவியுள்ளது. மேலும் அவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் தமிழில் சிறந்து விளங்குபவர் ஒருவருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.

1970-ஆம் ஆண்டு அவரது மரணத்திற்கு பின் அவரது படைப்பான பிசிராந்தையார்’ நாடகத்திற்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. 2001-யில் சென்னை தபால் துறையின் சார்பாக பாரதிதாசன் நினைவு அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்:

தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்கு பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பாரதிதாசன் கவிதை வரிகள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil