ரமலான் பண்டிகை வரலாறு | Ramadan History in Tamil
பொதுநலம் நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக ரமலான் பண்டிகையின் வரலாறு என்ன..? ரம்ஜான் பண்டிகை எப்படி உருவானது என்பது பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றை பற்றி தான் பார்க்கபோகின்றோம். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது இஸ்லாமியர்களின் பண்டிகையாக இருக்கிறது. ஆனால் ரம்ஜான் பண்டிகையை நாம் தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், நமக்கு ஒரு முஸ்லீம் நண்பன் இருந்தால் போதும்.
ரம்ஜான் பண்டிகையின் போது அவனிடம் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று நாம் தான் அதிகம் எதிர்பார்க்கின்றோம். சரி வாங்க நண்பர்களே, ரம்ஜான் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்..!
ரமலான் நோன்புவின் 27 -வது நாள் சிறப்பு என்ன தெரியுமா..
ரமலான் பண்டிகை வரலாறு:
பொதுவாக இந்த 2024 ஆம் ஆண்டில் ரம்ஜான் பண்டிகையானது ஏப்ரல் 11 ஆம் தேதி வருகின்றது. ரமலான் என்பது இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் 9 ஆவது மாதமாகும்.
இஸ்லாமியர்களுக்கு இம்மாதம் ரம்ஜான் மற்றும் ரமலான் என்றும் அழைக்கப்படுகிறது. இப்படி இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.
பொதுவாக ரமலான் நோன்பு இஸ்லாமிய மதத்தில் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு எடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..
இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளின் படி, முஹம்மது சாஹேப் (இஸ்லாமிய தீர்க்கதரிசி) கி.பி. 610 -இல் இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆன் ஷெரீப்பைப் பற்றி அறிந்தபோது, அதிலிருந்து ரமலான் மாதமானது இஸ்லாமிய மதத்தின் மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஒரு புனிதமான மாதமாக கருதப்படுகிறது.
இஸ்லாமிய மதத்திற்கு இந்த மாதம் மிகவும் புனித மாதமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், குர்ஆனின் படி, நபியை அல்லாஹ் தனது தூதராக தேர்ந்தெடுத்தார். இதனால் தான் இது புனித மாதமாக இருக்கிறது.
மேலும் இந்த நோன்பு இருக்கும் காலத்தில் அவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அது என்னென்ன விதிமுறைகள் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் இந்த விதிமுறைகளை Follow பண்ணுங்க..
ரம்ஜான் பண்டிகை கொண்டாட காரணம் என்ன..?
இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி, ரம்ஜான் மாதமானது சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. மேலும் முஸ்லீம்கள் இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதற்கு முக்கிய காரணம் ஏழைகளின் வலிகளையும், வேதனைகளையும் புரிந்து கொள்வதற்கு என்று சொலல்ப்படுகிறது.
அதாவது, ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம், உலகில் வாழும் ஏழைகளின் வலி மற்றும் துன்பங்கள் உணரப்படுகின்றன. நோன்பு இருக்கும் நேரத்தில், கண், மூக்கு, காது மற்றும் நாக்கு போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதாவது நோன்பு இருக்கும் நேரத்தில், கெட்டதைக் கேட்கவோ, கெட்டதைப் பார்க்கவோ, கெட்டதாகப் பேசவோ மற்றும் கெட்டதாக உணரவோ கூடாது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அவர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை கைவிடவும் வழிசெய்கிறது.
மேலும் இந்த புனிதமான மாதத்தில் விரதம் இருப்பவர்களின் பாவங்கள் தூப தீயில் எரிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மனம் தூய்மையாகி, விரதத்தின் போது அனைத்து கெட்ட எண்ணங்களும் மனதில் இருந்து நீங்கிவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
ரமலான் நோன்பு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..
ரம்ஜானின் 5 தூண்கள் என்ன..?
ரமலான் ஆனது இஸ்லாத்தின் 5 தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இது தொண்டு, நல்ல செயல்கள் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றைக் காட்டும் கொள்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் இஸ்லாத்தின் 5 தூண்கள் என்று செல்லக்கூடியவை மதத்தில் உண்மையான நம்பிக்கை, நமாஸ் வழங்குதல், ஜகாத் அதாவது தர்மம் மற்றும் ஹஜ் செய்தல் ஆகியவை அடங்குகிறது.
ரமலான் நோன்பின் சிறப்புகள்:
- பொதுவாக ரம்ஜான் மாதமானது சிறப்பு பெற்ற மாதமாக தான் இருக்கிறது.
- ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்களுக்கு நன்மைகள் செய்யும் மாதமாக இருக்கிறது.
- அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பை பெறும் மாதமாக இந்த மதம் இருக்கிறது.
- நோன்பு இருக்கும் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன.
- ரம்ஜான் நோன்பு இருக்கும் காலத்தில் சிகரெட், புகையிலை போன்ற கெட்ட பழக்கங்களை உட்கொள்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
- இஸ்லாமியர்களுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதமாக இம்மாதம் இருக்கிறது.
ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை..
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |