ஆடி பெருக்கு என்றால் என்ன.? | Aadi Perukku Endral Enna | ஆடி பெருக்கு வரலாறு
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி பெருக்கு என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.? என்பதை (Aadi Perukku Endral Enna, Aadi Perukku History in Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆடி பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின் (ஜூலை நடுப்பகுதியில்) 18 வது நாளில் கொண்டாடப்படும் விழா ஆகும்.
ஆடி மாதம் ஆன்மீக மாதம். ஆடி மாதம் அம்மன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிப்பெருக்கு. இந்நாளில் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று ஆடி 18 அன்று காவிரித்தாய் அனைத்து நீர்நிலைகளிலும் வியாபித்திருப்பாள். அதனால் தான் ஆடிப்பெருக்கு அன்று நாம் நீர் நிலைகளுக்கு பூஜை செய்து வழிபடுகிறோம்.
Aadi Perukku Meaning in Tamil | ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் என்ன.?
ஆடிபெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18 ஆம் நாள் ஆகும். ஆதாவது,ஆடி 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். ஆடிப்பெருக்கு தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் பண்டிகை ஆகும். பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள்படும். இந்நாளில் தொடங்கும் செயல்கள்/ வாங்கும் பொருட்கள் பலமடங்கு பெருகும் என்பதால் இந்நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுவர்.
ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் கூறுவார்கள். ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
ஆடிப் பட்டம் தேடி விதை – விளை நிலங்களில் முதல் மழையை கொண்டு வரும் மாதம் ஆடி. கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.
ஆடிப்பெருக்கு நாளில், விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர்களின் வழக்கம் ஆகும். எனவே, விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆறு, ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளை போற்றும் விதமாக தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் விழா தான் ஆடிப்பெருக்கு.
போதும் போதும் என்கின்ற அளவு பணம் சேர ஆடிப்பெருக்கு அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!
Aadi Perukku History in Tamil:
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு என்று கூறுவார்கள். ஆடிப்பெருக்கு கொண்டாடுவதர்க்கு பல்வேறு வரலாற்று காரணங்கள் உள்ளது.
பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கிறது. மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் போன்றவை இதன் அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக் கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நம் முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி முதலான நதிகளுக்கு நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்.
பாண்டவர்கள் போரில் இறந்த தங்களது உறவினர்களுக்குத் திதி கொடுத்த தினமே ஆடி பதினெட்டு விழா. நோன்பு மகாபாரதப் போர் ஆடி 01 அன்று துவங்கி ஆடி 18 வரை பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்று அரசுரிமை பெற்றனர். பாண்டவர்கள் போரில் இறந்த தங்களது உறவினர்களுக்குத் திதி கொடுத்த தினமே ஆடி பதினெட்டு விழா.
ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |