Anjalai Ammal History in Tamil | அஞ்சலை அம்மாள் வரலாறு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அஞ்சலை அம்மாள் வாழ்க்கை வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். அஞ்சலை அம்மாள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, விடுதலை போராட்ட வீரர். காந்தியின் கோஷங்களை பின்பற்றி அதன்படி நடந்தார். சமூக சேவையிலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
பல்வேறு கிராமப்புறங்களில் கல்விக்கூடங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்படுத்தினார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்றும், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இப்படி இவர் ஆற்றிய தொண்டுகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அஞ்சலை அம்மாள் வரலாறு தமிழில்:
குறிப்பு சட்டகம்: |
|
பிறப்பு:
அஞ்சலை அம்மாள் அவர்கள், 1890 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் அம்மாக்கண்ணு – முத்துமணி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். இவர் திண்ணை பள்ளிக்கூடத்தில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றார். அதன் பிறகு, அரசியல், மற்றும் பிரித்தானியரின் அடக்குமுறை போன்றவை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டு, அதனை பற்றி அறிந்துகொண்டார்.
திருமண வாழ்க்கை:
1908 ஆம் ஆண்டில், அஞ்சலை அம்மாள் அவர்கள், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகில் உள்ள சின்ன நெற்குணம் என்னும் ஊரில், விவசாயம் பற்றும் நெசவு தொழில் செய்து வந்த முருகப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சலை அம்மாளின் விடுதலை போராட்டத்திற்கு இருந்து, அஞ்சலை அம்மாளுடன் பல விடுதலை போராட்டங்களில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு, சென்னை சைதாப்பேட்டையில் தங்கி, நெசவு தொழில் செய்துகொண்டு காங்கிரசு காட்சிப்பணியும் செய்தார்கள். மேலும், பெரியார் அவர்களுடன் இணைந்து பல சிற்றூர்களில் நெசவு செய்த துணிகளை விற்பனை செய்தார்கள். அஞ்சலை அம்மாள், முருகப்பாவிற்க்கு அம்மாக்கண்ணு, காந்தி, ஜெயவீரன், கல்யாணி உள்ளிட்ட ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு
சமூக சீர்திருத்தி:
அஞ்சலை அம்மாள் தமிழ்நாட்டின் சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் காந்தியவாதி ஆவார். இவர், காந்தியுடன் இணைந்து, அவரது கருத்துக்களை அனுசரித்து நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். சமூகநீதியை நிலைநாட்டுவதில் அவர் ஆற்றிய பணி ஆனது, தமிழ்நாட்டின் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அஞ்சலை அம்மாள், பல்வேறு முறைகளில் பங்களித்தார். அதுமட்டுமில்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனையும் அனுபவித்தார். சிறைக்கு சென்ற பின்னும், இவர் தனது சமூக சேவையையும், போராட்டத்தையும் கைவிடாமல் கடைசி வரை தொடர்ந்தார். இதனால், மக்கள் மத்தியில், ஒரு சிறப்புமிக்கவராக மதிக்கப்பட்டார்.
காந்தியுடன் சேர்ந்து, ஒத்துழையாமை இயக்கம், நீல் சிலை சத்தியாகிரகம், உப்புச் சத்தியாகிரகம் போன்றவற்றில் கலந்து கொண்டு பெரும்பங்காற்றினார். 1921 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்ட முதல் தென்னிந்திய பெண்மணி என்ற பெருமையும் இவருக்குண்டு. இந்திய விடுதலை போராட்டத்திற்காக, தனது குடும்ப சொத்துக்களை (நிலம் மற்றும் வீடு) விற்றார்.
உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் போது, அஞ்சலை அம்மாள் பெரிதும் காயமடைந்தார். அதன் பிறகு, ஆறு மாதசிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்றார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். அதன் பிறகு, நிறை மாதத்தில் சிறை விடுப்பில் (பரோல்) வெளிவந்த பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 15 ஆம் நாள் கைக்குழந்தையுடன் சிறைச்சாலைக்கு சென்றார். எஞ்சிய இரண்டு மாத தண்டையனை கைக்குழந்தையுடன் சிறையில் இருந்து கழித்து அதன் பிறகு, வெளியில் வந்தார்.
சட்டமன்ற உறுப்பினர்:
அஞ்சலை அம்மாள் அவர்கள் 1937, 1946 ஆம் ஆண்டு மற்றும் 1952 ஆம் ஆண்டு என மூன்று ஆண்டுகள் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியில் தெரிந்தெடுக்கப்பட்டார். அவர், பதவிக்காலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சத்தினை சந்தித்த தீர்த்தாம்பாளைய கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தினை தீர்த்து வைத்தார்.
இறப்பு:
அஞ்சலை அம்மாள் அவர்கள், 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். தனது 71 வயதில் இருந்துள்ளார். அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை, தன்னலமற்ற சமூக சேவையின் விளிம்பாக பார்க்கப்படும். அவரது பாரம்பரியச் சேவைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அவர் இன்றளவும் மக்கள் மனதில் சீர்திருத்தியாளராக நிலைத்து நிற்கிறார்.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |