Arunagirinathar History in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அருணகிரிநாதர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். அருணகிரிநாதர் பற்றி நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் அருணகிரிநாதர் என்பவர் யார்.? அவர் வாழ்க்கை வரலாறு என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
அருணகிரிநாதர் பல நூல்களை இயற்றியுள்ளார். முருக பெருமான் கடவுள் பற்றி பாடல்கள் எழுதி புகழ்பெற்ற அருளாளர் ஆவார். அருணகிரிநாதர் அவர்கள் தென்னிந்தியா முழுவதும் உள்ள கோவிலுக்கு சென்று கிட்டத்தட்ட 16 ஆயிரம் பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் 2 ஆயிரம் பாடல்கள் மட்டுமே இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. இதுபோன்று அவரை பற்றி தெரியாத பல விஷயங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Arunagirinathar Life History in Tamil:
- அருணகிரிநாதர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். இவர் தந்தையார் பெயர் திருவெங்கட்டார், தாயார் பெயர் முத்தம்மை. இவருடைய தாயார் பரத்தை.
- இவர் பிறந்த சில தினங்களிலேயே அவரது தந்தை இறந்து விட்டார். அருணகிரிநாதருக்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார். அருணகிரிநாதரின் மூத்த சகோதரி, அருணகிரிநாதருக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து கொடுத்து வளர்த்து விட்டார்.
- அருணகிரிநாதர் இளமையிலேயே நல்ல கல்வி கற்று இலக்கிய, இலக்கணங்களைக் கற்று கொண்டார். இவருக்கு சரியான வயதில் திருமணமும் நடந்தது. ஆனால், அருணகிரிநாதருக்கு ஒரு சில கெட்ட பழக்கங்களும் இருந்து வந்தது.
- சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தமையால் வீட்டில் அழகிய மனைவி இருந்தும், பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. எந்நேரமும் காமத்திலே மூழ்கி இருந்தமையால் சொத்தை இழந்ததும் மட்டுமில்லாமல், பெரும் நோயும் வந்தது.
- இவரது மனைவி இவரை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டார். அவரது, சகோதரியும் இவரை கோபத்துடன் பேச வீட்டில் இருந்து வெளியேறி கால் போன போக்கில் சென்றார்.
- அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும் சொல்லி, சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் கோரி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.
- இருந்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல், குழப்பத்தில் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி கீழே குத்தி உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது, இரு கரங்கள் அவரை தாங்கி, அருணகிரி நில் என்று சத்தம் எழும்பியது.
- அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான்.
- முருகர், “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார்.
- சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், அருணகிரிநாதரின் தொழுநோயைக் குணப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல், பக்தியின் பாதையையும் அவருக்கு காட்டினார்.
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்..
உருவ அமைப்பு:
அருணகிரிநாதர் கையில் ஆறு விரல்கள் இருக்கும். அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.
பாடல்கள்:
அருணகிரிநாதர் அவர்கள் தென்னிந்தியா முழுவதும் உள்ள கோவிலுக்கு சென்று கிட்டத்தட்ட 16 ஆயிரம் பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் 2 ஆயிரம் பாடல்கள் மட்டுமே இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. இவரது பாடல்கள் அனைத்தும், நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கை முறையை வாழ்வதற்கான வழியை எடுத்துரைக்கின்றன.
இவர் எழுதிய “திருப்புகழ்” தேவாரத்திற்கு இணையாகவும், “கந்தர் அலங்காரம்” திருவாசகத்திற்கு இணையாகவும், “கந்தர் அனுபூதி” திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.
அருணகிரிநாதரின் நூல்கள்:
- கந்தர் அந்தாதி – 102 பாடல்கள்
- கந்தர் அலங்காரம் – 108 பாடல்கள்
- கந்தரனுபூதி – 52 பாடல்கள்
- திருப்புகழ் – 1307 பாடல்கள்
- திருவகுப்பு – 25 பாடல்கள்
- சேவல் விருத்தம் -11 பாடல்கள்
- மயில் விருத்தம் – 11 பாடல்கள்
- வேல் விருத்தம் – 11 பாடல்கள்
சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |