Ayudha Pooja History in Tamil | ஆயுத பூஜை வரலாறு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆயுத பூஜை என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.? என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்றாலே, நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நாம் பயன்படுத்தும் ஆயுதங்களும், தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கும், கல்வியை கொடுக்கும் புத்தகத்திற்குள் பூ பொட்டு வைத்து வழிபாடு செய்வது தான்.
ஆயுத பூஜை ஆனது, செப்டம்பர் அல்லது அக்டோபர் வரக்கூடிய பண்டிகை ஆகும். இந்துக்கள் பண்டிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நம்மில் பலருக்கும் ஆயுத பூஜை என்றால் என்ன.? என்பதும், அதன் வரலாறு பற்றியும் தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
ஆயுத பூஜை என்றால் என்ன.? | What is Ayudha Pooja in Tamil:

ஆயுத பூஜை என்பது, புரட்டாசி மாதம் வரக்கூடிய வளர்பிறை நவமியில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் விழா ஆகும். இந்த நாளில், தொழிலுக்கு பயன்படும் கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் கல்வி பொருட்களுக்கு பொட்டு பூ வைத்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வார்கள்.தொழில் சிறக்க ஆயுத பூஜையை நாம் கொண்டாடி வருகிறோம். இதனை அஸ்திர பூஜை என்றும் அழைப்பார்கள்.
நவராத்திரியின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது தான் ஆயுத பூஜை. நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், இறுதியாக உள்ள மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிப்படுவார்கள். நவராத்திரியின் 9 நாட்களில் இறுதியாக வருவது தான் ஆயுத பூஜை.
ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு பல புராண கதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்போது 2024.?
Ayudha Pooja History in Tamil:

ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு இரண்டு விதமான புராண கதைகள் காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அவை பின்வருமாறு:
1. உலகை ஆட்டி படைத்த தீயவனான மகிசாசூரனை துர்கை அம்மன் அளிக்க நினைத்தாள். இதனால், துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் 8 நாட்கள் தொடர்ந்து சண்டை நடந்து வந்தது. 8 நாட்கள் சண்டைக்கு பிறகு, 9 ஆவது நாள் துர்கை மஹிஷாசுரனை வதம் செய்தாள். இந்த நாளையே நாம் துர்கா பூஜை என்று ஆயுத பூஜை என்றும் கொண்டாடி வருகிறோம்.
2. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று, அனைத்து செல்வங்களையும் இழந்த பாண்டவர்கள், யார் கண்ணிலும் படாமல் பதின்மூன்று வனவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஆயுதங்களை வன்னி மர பொந்தில் மறைத்து வைத்தார்கள். அஞ்ஞான வாசம் முடிந்த பிறகு, மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தார்கள். பாண்டவர்கள் ஆயுதங்களை வழிபட்ட அந்நாள், ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.
3. மேலும், வீடு, அலுவலகம் போன்ற இடத்தில் கொண்டாட போகிறீர்கள் என்றால் அந்த இடம் முழுவதும் மாவிலை மற்றும் வாழை தோரணங்களை கட்டவேண்டும். அடுத்ததாக சரஸ்வதியின் படத்தை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, சரஸ்வதிக்கு உகந்த வெள்ளை நிறத்தை உடைய தாமரை, மல்லி, முல்லை, நந்தியாவட்டை, சம்மங்கி போன்ற பூக்களை கொண்டு மாலையாக அலங்கரித்து சாமிக்கு சாற்றி வழிபட்டு வருகிறோம்.
ஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2024..!
| இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |














