பரணி தீபம் வரலாறு In Tamil | Barani Deepam History In Tamil
பரணி தீபம் என்பது கார்த்திகை தீபத்திற்கு முந்தய நாள் கொண்டாடப்படுகிறது. பரணி தீபம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று பல பேருக்கு தெரிவதில்லை. இந்த வருடம் பரணி தீபம் டிசம்பர் 12-ஆம் தேதி மற்றும் கார்த்திகை தீபம் டிசம்பர் 13-ஆம் தேதி வருகிறது. பரணி தீபம் என்பது நம் வீடுகளில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடும் நாளை தான் பரணி தீபம் என்று கூறுவார்கள்.
பரணி தீபம் என்பது நம் வீடுகளில் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். முதலில் வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்ற வேண்டும் அதன் பிறகு தான் வீட்டிற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பரணி தீபத்தின் முறையாகும். எதற்காக இந்த பரணி தீபம் ஏற்றுகிறோம் என்று நம் யாருக்கும் தெரியவில்லை. பரணி தீபத்தின் வரலாறு என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
பரணி தீபம் வரலாறு:
- நம் முன்னோர்கள் பரணி தீபத்தை எம தீபம் என்றும் கூறுகிறார்கள். சிவனுக்காக நீங்கள் இந்த பரணி தீபத்தை ஏற்றி வழிபடும் பொழுது எம வாதனையில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் என்று எம தர்மனே சொன்னதாக கூறப்படுகிறது.
- நசிகேதன் உயிரோடு இருக்கு பொழுது எம தர்மனை சந்திக்கிறார் அப்போது அவர் எமதர்மனிடம் நிறைய கேள்வி கேட்கிறார். எம தருமனும் அவர் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பொறுமையாக பதில் சொல்கிறார்.
- நசிகேதன் கேட்ட ஒரு கேள்வி தான் மனிதர்கள் பூலோகத்திலேயே அவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் இங்க எமலோகம் வந்தும் உங்களோட தண்டனைகளில் கஷ்டப்படணுமா என்று கேட்கிறார்.
- அதற்கு எம தர்மன் பூலோகத்தில் மனிதர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் அவர்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவ கர்மாவிற்கு கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவத்திற்குத்தான் கஷ்ட படுகிறோம் என்று தெரியாமல் இந்த ஜென்மத்திலும் பிறரை கொடுமை செய்து, நயவஞ்சகம் செய்து, பலரை ஏமாற்றி, பலருக்கும் துரோகம் செய்து மறுபடியும் நிறைய பாவத்தை சேர்க்கிறார்கள் அந்த பாவத்துக்கான தண்டனையை தான் இங்க எமலோகம் வந்து அனுபவிக்கிறார்கள் என்று எம தர்மன் கூறுகிறார்.
- திரும்பவும் நசிகேதன் ஒரு கேள்வி கேட்கிறார் இந்த கொடுமையில் இருந்து மனிதன் தப்பிக்கணும் அப்டினா அவர்கள் பூலோகத்தில் இருக்கும் பொழுதே என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்று எம தர்மனிடம் கேட்கிறார்.
- அதற்கு எம தர்மன் அந்த தானம் செய்யுங்கள் இந்த தானம் செய்யுங்கள் என்று எம தர்மன் பெரிய பட்டியல் விடுகிறார். அதற்கு நசிகேதன் நீங்கள் கூறும் பரிகாரங்களை எள்ளோராலயும் செய்ய முடியாது எளிமையா இந்த பரிகாரம் செய்தால் எம வாதனையில் இருந்து தப்பிக்கலாம் என்று இருக்க கூடிய ஒரு பரிகாரம் மட்டும் கூறுங்கள் என்று கேட்கிறார்.
- அப்போ எம தர்மன் கூறியதுதான் இந்த பரணி தீபம். பரணி தீபத்தன்று சிவனுக்காக விளக்கேற்றி உள்ளன்போடு யார் ஒருவர் சிவனை வழிபடுகிறார்களோ. மேலும், அன்று இரவு விரதம் இருந்து மறுநாள் திருக்கார்த்திகை அன்றும் விரதம் இருந்து சிவனை மனதார நினைத்து வழிபடுகிறார்களோ அந்த ஆன்மாவிற்கு கண்டிப்பாக எம வாதனை இருக்காது என்று எம தர்மனே சொன்னதுதான் இந்த பரணி தீபம்.
- நாம் அமாவாசை அன்று எப்படி நம் முன்னோர்களை நினைத்து வழிபடுகிறோமோ அதேபோல் இந்த பரணி தீபம் அன்று நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய அடுத்த சந்ததியினர் நம்முடைய கர்மாவை கழித்து எமனிடம் செல்லும் பொழுது எந்த எம வாதனையிலும் பிடிபடாமல் சென்றடையனும் என்பதற்காக தான் இந்த பரணி தீபம் ஏற்ற படுகிறது.
- நம் சிவ பெருமானுக்காக வழிபடக்கூடிய திருநாள் தான் இந்த பரணி தீபா திருநாள்.
கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |