பகத்சிங் வாழ்க்கை வரலாறு | Bhagat Singh History In Tamil

Advertisement

மாவீரன் பகத்சிங் வாழ்க்கை வரலாறு | Bhagat Singh History in Tamil

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக மிகவும் பாடுபட்டவர்களுள் பகத்சிங்ம் ஒருவர். புரட்சியாளராகவும் உண்மையான வீரனாகவும் வாழ்ந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு மடிந்து போனவர் பகத்சிங். சாஹீது என்ற இவர் பெயரை மாவீரன் பகத்சிங் என்று அழைக்கப்பட்டார். இவர் ஆங்கில ஆட்சியை வெளியேற்ற, இந்தியாவை சுதந்திர நாடாக மாற்ற ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் பகத்சிங் ஆவார். தீவிர போராளி, கடுமையான எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு மிகமுக்கியாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை தெளிவாக காண்போம்.

பகத்சிங் பற்றிய குறிப்பு:

  • பிறப்பு: 27.09.1907
  • பிறந்த ஊர்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா
  • பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
  • இறப்பு: 23.03.1931 அன்று உயிர் பிரிந்தது
  • முக்கிய அமைப்புகள்: நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு.

இளைஞர்கள் போராட வழிவகுத்தது:

பகத்சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பாங்க என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங் மற்றும் வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் விடுதலை போராட்ட வீரர்களை கொண்ட குடுப்பதில் பிறந்ததால் இளம் வயதிலேயே நாட்டு பற்று மிக்கவராக வளந்தார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள் லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். பகத்சிங் இவர் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்ககளை படிக்க ஆரம்பித்தார் பொதுவுடைமை கொள்கையில் ஈடுபட்டார் பல புரட்சி கொள்கைகளை ஏற்படுத்தி கொண்டார். வெகு சீக்கிரமாக இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவராக பகத்சிங் ஆவார். 63 நாட்கள் சிறையில் இருந்தபோது இந்திய கைதிகளுக்கு ஏனைய கைதிகளுடன் சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தார். இதன் காரணமாக  மக்களிடையே இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது. மாபெரும் காங்கிரஸ் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்கு காரணமாக இருந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத்சிங் 24 அகவையில் தூக்கில் இடப்பட்டார். இந்த நிகழ்வானது பல இளைஞர்களை இந்திய விடுதலைக்காக போராட வழிவகுத்தது சோலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவ காரணமாயிற்று.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

பகத்சிங் சபதம் பூண்டார்:

1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பார்க்காமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்கள். இந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு நாட்டு மக்கள்கள் கொதித்து போனார்கள். இந்த ஆணவ படுகொலை கண்ட பகத்சிங் மனதில் ஆணித்தனமாக பாதித்தது மட்டுமல்லாமல் இரத்தம் படிந்த மண்ணை எடுத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, இந்த ஆணவக்கொலை இனி நடக்கக்கூடாது எனவும் வெள்ளையர்களை விரட்டவும் பகத்சிங் சபதம் எடுத்தார்.

விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு:

பகத்சிங் பதின்மூன்று வயதிலேயே மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார் 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதால் பகத்சிங்க்கு பெரிதும் ஏமாற்றத்தை கொடுத்தது ‘அகிம்சை வழியில் சென்றால் நமக்கு சுகந்திரம் கிடைக்காது ஆயுதத்தை தாங்கினால் மட்டுமே நமக்கு விரைவில் சுகந்திரம் கிடைக்கும் என முடிவு செய்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

லாகூர் கொலை வழக்க:

1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைத்த பகத்சிங்கும், ராஜகுருவும் லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்கள் அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

பகத்சிங்க்கு தூக்குத்தண்டனை:

பகத் சிங் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில காந்தி கையொப்பம் இட்டார். (தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்) என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீடு பத்திரத்தில் (காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்து இட்டத்திற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துக்கள் மக்களால் பேசப்பட்டது.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement