Advertisement
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலம் | British History in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று வரலாறு பகுதியில் முக்கியமான பிரிட்டிஷ் ஆட்சி காலம் வரலாறு பற்றி பார்க்க போகிறோம். ஒரு காலத்தில் நம் நாட்டிலே பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமையாக இருந்து வந்தோம். அவர்களிடம் இருந்து நமக்கு விடுதலை வாங்குவதற்கு நிறைய மனிதர்கள் அரும்பாடுபட்டார்கள். நம் நாட்டிற்கு விடுதலை கிடைக்க நாம் இழந்தது அதிகம். பிரிட்டிஷ்காலத்தில் இந்திய வரலாறு பற்றிய இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
இந்திய வரலாறு |
எத்தனை ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தனர்:
- 200 ஆண்டுகளாக நம் நாடான இந்தியாவில் அந்நியர்களுக்கு அடிமையாக இருந்து வந்தோம். நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்து 73 ஆண்டுகளாக ஆகிவிட்டது.
- இந்த சுதந்திரத்தை நமக்கு கொடுக்க பாடுபட்டவர்கள் அதிகம்.
- நாம் இந்தியா 15-ஆம் நூற்றாண்டில் எல்லாம் வளங்களும் நிறைந்த நாடாக இருந்தத. இதன் காரணமாக பல நாட்டில் உள்ளவர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வருவதற்கு முயற்சி செய்தார்கள். போர்ச்சுகீஸ், டேனிஸ், பிரிட்டிஷ் போன்ற ஐரோப்பிய நாட்டவர்கள் இந்தியாவுக்கு கடல் வழி மார்க்கமாக வணிகம் செய்ய வந்தார்கள். அவர்களின் நோக்கம் பருத்தி, பட்டு, மற்றும் நறுமண பொருட்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களின் தேவை ஏலக்காய், மிளகு, பட்டை இவைகள் அவர்களின் தேவையாக இருந்தது. வந்தாரை வாழவைக்கு இந்தியா இவர்களையும் வரவழைத்தார்கள்.
- 1600-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபத்து ராணி கிழக்கு தீவுகள், இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவுடன் வர்த்தகம் செய்ய பெரிய வர்த்தக குழுவை கொண்டு ஒரு புதிய வர்த்தகத்தை உருவாக்க முடிவு செய்தார். பின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) என்று அழைக்கப்படும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியாக மாறியது. இதுவே ஆங்லேயர்கள் இந்தியாவை ஆளுவதற்கு காரணமாக இருந்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் நன்மைகள் தீமைகள்:
நன்மைகள்:
- நம் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்ய பிரிட்டிஸ்காரர்களின் பெரும் ஆயுதமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு கொத்தடியமையாக 200 ஆண்டுகள் இருந்தோம். ஆனாலும் இந்தியாவுக்கு பிரிட்டிஷ்காரர்கள் எராளமான நன்மைகள் செய்திருக்கிறார்கள் அதனை பின்பு பார்போம்.
- பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியா என்பது இல்லை. அதாவது பல சமஸ்தானங்களாக பிரிந்து அவர்களுக்கு என்ற சட்ட திட்டம் வைத்து வாழ்ந்து வந்தார்கள். கிட்டதிட்ட 584 சமஸ்தானங்கள் இருந்தது என்பது சொல்லபடுகிறது. அதுபோல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு அந்த நிலைமை மாறி வந்துவிட்டது. காரணம் தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை ஒன்றிணைக்க செய்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சிகாரர்கள். ஒட்டு மொத்த இந்தியாவை ஒரேமாதிரியான சட்டதிட்டங்களை கொண்டுவந்தார்கள். இதுவே பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக மாறும் என்பதை அவர்கள் அறியவில்லை. காரணம் பிரிந்துகிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்த பிரிட்டிஷ்காரர்கள். இந்தியர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.
- ஒரு அற்ப்புதமான விஷயமான ரயில்வே இதனை அறிமுகப்படித்தியது பிரிட்டிஷ் ஆட்சில்தான். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தது வணிகத்துக்காகதான், ரயில்வே நமக்கு கிடைத்தது அந்த வணிக்கத்தை மேம்படுத்தத்தான். அதிகபடியான பிரிட்டிஷ் ஆட்சி இருந்தாலும் நம்முடைய ஏற்றுமதி வணிகம் அவர்களுக்கு லாபத்தை தருவதில்லை. அதனால் ரயில் பாதையை ஏற்படுத்தி கூட்ஸ் மூலம் அவர்களின் வணிகத்தை மேம்படுத்தினார்கள்.
- கி.பி ஏப்ரல் 16 தேதி 1853-ஆம் ஆண்டு பாம்பே (மும்பை) முதல் தானே வரை முதல்முதலில் பயணிகள் ரயிலில் பயணம் செய்தார்கள். அதில் 400 பயனாளர்கள் பயணம் செய்ததாக சொல்லபடுகிறது. இன்றைய ரயில்வே போக்குவரத்தில் ரயில்வேவை அறிமுகபடுத்தியவர்கள் 18-வது இடத்தில்இருக்கிறார்கள். இந்தியா உலகில் மிகப்பெரிய இரயில் போக்குவரத்தில் 4-வது இடத்தில் உள்ளோம். இந்தமாதிரியான நன்மைகளை நமக்கு செய்துகொடுத்தார்கள்.
- சாதி என்கின்ற கொடுமையான சட்டத்தை ஒழித்ததும் பிரிட்டிஷ் ஆட்சியில்தான்.
முப்படை தளபதி பிபின் ராவத் வரலாறு |
ஆங்கிலேயர் ஆட்சியில் கல்வி வளர்ச்சி:
- பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியாவில் கல்வி என்பது இருந்தது என்றால் இருந்தது ஆனால் அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு எல்லாருக்கு கல்வி என்ற நிலைமை மாறியது அவர்களில் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தான். பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அது ஆங்கிலம் தான் ஏனென்றால் உலகளவில் எந்த போட்டிகளிலும் காப்பாற்றுவது ஆங்கிலம் (English) தான். இது மாதிரியான விஷயங்களை அவர்களுக்கு நன்மை என்ற செய்த விஷயம் நமக்கு கிடைத்த நன்மையாக மாறியது.
ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்:
தீமைகள்:
- வணிகத்திற்காக கடல் வழியில் வணிகம் செய்ய வந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் வணிகம் செய்யவந்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தி அவர்கள் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
- இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் மிகப்பெரிய பஞ்சம் நிலவும் ஆரம்பித்தது. பஞ்சத்தில் இந்திய மக்கள் இறக்க செய்தார்கள். அதனால் இந்தியாவில் மக்கள் தொகை குறைய தொடக்கியது.
- இதனை பயன்படுத்தி பிரிட்டிஷ்காரர்கள் நம்மை கொத்தடிமையாக ஆள ஆரம்பித்தார்கள் இதே நமக்கு விளைத்த பெரிய கெடுதலாக கூறப்படுகிறது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |
Advertisement