டாக்டர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு..! | Dr.Manmohan Singh History In Tamil..!
நாம் அனைவருக்கும் இந்தியாவில் சாதனை படைத்த மனிதர்களில் யாரேனும் ஒருவரை நமக்கு மிகவும் பிடித்திருக்கும். அவர்களுது வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக இருக்கும். நாமும் அவர்களை போலவே வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும். அப்படி வாழ்க்கையில் சாதித்து மறைந்த நம் இந்தியாவின் பதினான்காவது பிரதமர் மன்மோகன் சிங்க் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
மன்மோகன் சிங்க் நம் நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்கள் சேவையை செய்தார். அவர் ஆட்சி செய்த காலத்தில் புதிய திட்டங்களையும் கொண்டு வந்தார் அவரது வாழ்க்கை பற்றியும் அவர் வாங்கிய விருதுகள் மற்றும் அவர் கொண்டு வந்த திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
கருடாழ்வார் பற்றிய சிறு தகவல்கள்..! | கருடாழ்வார் வரலாறு..!
டாக்டர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு:
பிறப்பு:
டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 அன்று பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.அவர் 1948 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது மெட்ரிகுலேஷன் தேர்வுகளை முடித்தார். அவரது புகழ்பெற்ற கல்விப் பயணம் அவரை பஞ்சாபிலிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், UKக்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் 1957 இல் பொருளாதாரத்தில் முதல் தரப் பட்டம் பெற்றார். டாக்டர் சிங் இதைப் பின்பற்றி D. Phil. 1962 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
டாக்டர். சிங்கின் கல்வித் தகுதிகள் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் மதிப்புமிக்க டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியராக பணியாற்றினார். 1971 இல், டாக்டர் சிங் இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக சேர்ந்தார். இதைத் தொடர்ந்து 1972ல் நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவர் நியமனம் செய்யப்பட்டார். டாக்டர். சிங் தனது வாழ்க்கையில் நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், ரிசர்வ் கவர்னர் உட்பட பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்தார். பாங்க் ஆஃப் இந்தியா, பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்.
இறப்பு:
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்க், உடல்நிலை குறைவால் டிசம்பர் 26,2024 வியாழக்கிழமை அன்று உயிர் இழந்தார்.
மன்மோகன் சிங்க் அறிமுகப்படுத்திய திட்டங்கள்:
- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்
- தகவல் அறியும் உரிமை சட்டம்
- அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம்:
தமிழ்நாட்டில் நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும். இது 2005 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங்க் தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டமாகும். இந்திய ககிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இன்று வரை இந்த திட்டம் மிகவும் முக்கியமான சிறப்பான திட்டமாக செயல்பட்டு வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம்:
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி இந்தியா குடிமகனும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் இருந்து தகவல் பெறலாம். அந்தந்த நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் தகவல்களை வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் அரசு தொடர்பான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம்:
123 ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த அமெரிக்கா இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்க் ஆகியோரால் கொண்டுவரப்பட்டது. இந்தியா தனது அணுசக்தி வசதிகளை ராணுவ திட்டங்களுக்கும் மக்களின் நலனுக்கான பயன்பாடுகள் என பிரித்து நிர்வகிக்க ஒப்புக்கொண்டது. இதில் மக்களின் நலுனுக்கான பயன்பாடுகளை ஐஏஇஏ அமைப்பின் பாதுகாப்பின் கீழ் இயக்கவும் இதற்கு பதிலாக அமெரிக்கா அணுசக்தி விஷயத்தில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டது.
டாக்டர் மன்மோகன் சிங்க் பெற்ற விருதுகள்:
- பத்ம விபூஷன் (1987)
- ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது (1995)
- சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது (2002)
- சிறப்புமிக்க செயல்திறன் விருதுக்கான ரைட் பரிசு (1995)
- ஆடம் ஸ்மித் பரிசு (1996)
- ஆர்டர் ஆஃப் கிங் அப்துல்அஜிஸ் (2010)
- ஆர்டர் ஆஃப் தி பவுலோனியா ஃப்ளவர்ஸ் (2014)
- (2011) உலகின் 19வது சக்திவாய்ந்த நபராக
- (2012) உலகின் 20 வது மிகவும் சக்திவாய்ந்த நபராக
- (2013) உலகின் 28 வது மிகவும் சக்திவாய்ந்த நபராக
கைகேயி வாழ்க்கை வரலாறு..! | Kaikeyi History In Tamil..!
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |