டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கட்டுரை | Dr Muthulakshmi Reddy History in Tamil

Dr Muthulakshmi Reddy History in Tamil

Dr Muthulakshmi Reddy History in Tamil

பெண்கள் நாட்டின் கண்கள் என்று போற்றப்படுகிறது.. குறிப்பாக இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள் ஏராளமானோர் உண்டு. அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் முதல் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். அதாவது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறப்பு, கல்வி, திருமணம், விருது, இறப்பு போன்ற அவர்களை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கட்டுரை

பிறப்பு:

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெற்றோர் கடும் சமூக எதிர்ப்புகளுக்கு இடையில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்.

கல்வி:

பெண் கல்விக்கு அதிக எதிர்ப்புகள் இருந்த அந்த கால கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வராக எழுதி மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே சலசலப்பை உருவாக்கியது. இந்த சலசலப்பு உருவாக்க என்ன காரணம் என்றால் அதுவரை மகாராஜா கல்லூரியில் ஒரு பெண் படித்ததில்லை. ஆகவே அவர் பிற ஆண் மாணவர்களின் படிப்பு கெட காரணமாக இருப்பார் என்றுஅந்த கல்லூரியின் முதல்வர் கருதினார். ஆனால் மகாராஜா பைரவத் தொண்டைமான் தலையிட்டு அவர் படிக்க அனுமதித்ததோடு, கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டதாம். அதன் பிறகு 1912-அம ஆண்டு அவர் மருத்துவர் ஆனார்.

திருமணம்:

திருமணத்தில் அதிக ஆர்வம் இல்லாதவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு, படிப்பிலும், சமூகப் பணியிலும் மட்டும் தான் அதிக விருப்பம் இருந்தது. இருந்தாலும் சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கருதி திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Annie Beasant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி – சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் – தந்தையைப் போல ஒரு மருத்துவர்.

சட்ட மேலவை துணை தலைவர்:

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1927 முதல் 1930 வரை சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார். இந்த மசோதாவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது.

வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு

சமூகப்பணி:

தேவதாசி முறையில் இருந்து விறுவிக்கப்பட்ட பெண்கள் தங்கி படிப்பதற்காக தமது வீட்டில் அவ்வை விடுதி என்ற பெயரில் 1930-யில் ஒரு விடுதி தொடங்கினார் முத்துலட்சுமி. 1936-யில் இந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாறுக்கு மாற்றப்பட்டது. முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுபட்ட பெண்களுக்கு மட்டும் இருந்த இந்த அவ்வை விடுதி அதன் பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது.

இவரது மருத்துவப்பணி:

புற்றுநோயால் இறந்த தமது சகோதரி மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை நேருக்கு நேர் பார்த்திருந்த டாக்டர் முத்துலட்சுமி, புற்றுநோய்க்கு என்று ஒரு மருத்துவமனை கட்ட உறுதி எடுத்தார். நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.

விருது:

இவருடைய மகத்தான பணிக்காக இவருக்கு, 1956-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

இறப்பு:

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968-ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று உயிரிழந்தார். அப்போது வானொலியில் பேசிய இந்திரா காந்தி, முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்று உயர்ந்த இடங்களைப் பிடித்திருக்க முடியாது என்று புகழாரம் சூட்டினாராம்.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

 

மேலும் இது போன்ற வரலாற்றை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Varalaru