கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சிறப்புகள்
கங்கைகொண்ட சோழபுரமானது முதலாம் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த ஊர் ஆனது சோழர்களின் முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராஜேந்திரன் சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கோவில்களில் அமைந்துள்ள சிறப்புகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
முதலாம் ராஜராஜ சோழனின் வரலாறு |
கங்கை கொண்ட சோழபுரம் பெயர் காரணம்:
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அதிகமான பெயர்கள் உள்ளன. அதில் பண்டைய காலத்து புலவர்கள் கங்காபுரி, கங்கை நகர் கங்காபுரம் என்ற பெயர்களில் இவ்வூரை அழைத்தனர். இராஜேந்திர சோழன் 1019இல் கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை இராஜேந்திர சோழன் வெற்றிக் கொண்டதால். இதன் காரணமாக சிவனுக்கு கங்கைகொண்ட “சோழீசுவரர் கோயில்” எனும் மாபெரும் கோவிலை அமைத்தார். கங்கை வரை பெற்ற வெற்றிகளின் காரணமாக கங்கை கொண்ட சோழப் பேரேரி என்றும் அழைக்கப்பட்டது. அதோடு இதற்கு “சோழகங்கம்” என்றும் அழைக்கப்பட்டது.
இராஜ இராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் மிக சிறந்த அரசனாக ஆட்சி புரிந்து உள்ளார். இவர் 1012 – 1044 ஆண்டில் கடல் கடந்து தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டினார், அதன் பிறகு இவர் தஞ்சையில் கட்டப்பட்ட கோவிலை போல அரியலூரில் கட்டினார்.
இந்த கோவிலை கட்டி முடித்த பிறகு இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு இவரிடம் போரில் தோற்று போன மன்னர்களை கங்கையிலிருந்து நீரை எடுத்து அதை தலையில் சுமந்து வர சொல்லி அபிஷேகம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் வந்தததுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வு:
கங்கை கொண்ட சோழபுரத்தின் அகழாய்வின் பொழுது சில அடி ஆழத்தில் செங்கற்களால் ஆன பதின்மூன்று சுவர்கள் இருந்தன. இதனை தவிர சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் கிடைத்தன. அதோடு அங்கு சீன மட்பாண்டமும் கிடைத்துள்ளது. தற்பொழுது அங்கு தோண்டப்பட்ட ஐந்து குழிகளில் மட்டுமே 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கிறது.
ராமேஸ்வரம் லெட்சுமண தீர்த்தம் உருவான வரலாறு
கங்கை கொண்ட சோழபுரம் சிற்பங்கள்:
இந்த கோவிலின் முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீஸ்வரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கோவில் முழுவதும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரஸ்வதி போன்ற கடவுள்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அதில் ஒரு சிற்பம் சிவன் ஒரு அடியாருக்கு மாலை அணிவது போல அமைந்திருக்கும். இந்த கோவிலில் ஒற்றை கால்களால் ஆன நவக்கிரகமும் உள்ளது. அதோடு மட்டுமில்லமால் சோழர் கலைகளுக்கு சான்றாக விளங்கும் வெண்கலச் சிலைகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றில் சில சிலைகள் சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலை என்றும் கருதப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் சிறப்புகள்:
கங்கைகொண்ட சோழபுரமானது மிகப்பெரிய லிங்கத்தை கொண்ட கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள லிங்கத்தின் 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவையும் கொண்டுள்ளது.
இந்த கோவிலில் இருக்கும் நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டவையாகும். அதோடு மட்டுமில்லாமல் இந்த சுண்ணாம்பு கல் நந்தியில் விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது போல அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கங்கை கொண்ட சோழபுரத்தின் சிறப்பு என்னவென்றால் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் குளிர்ச்சியை கொடுத்து, அதிகம் குளிர் இருக்கும் நேரத்தில் வெப்பத்தை கொடுக்கும் சிறப்புகளை கொண்டுள்ளது.
இதுபோன்று வரலாற்று தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | History in tamil |