கருடாழ்வார் பற்றிய சிறு தகவல்கள்..! | கருடாழ்வார் வரலாறு..!

Advertisement

கருடன் வரலாறு..! | Garudan Varalaru In Tamil..!

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கருட பகவான் யாரு என்பதையும் கருட பகவான் எப்படி விஷ்ணுவின் வாகனமாக மாறினார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இறைவன் உடைய அனைத்து வாகனங்களுக்கும் ஒவ்வொரு கதை உண்டு அந்த வகையில் கருடன் எப்படி வாகனமாக மாறினார் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

கருடனை வழிபடுவது நமக்கு மிகவும் நன்மையை பயக்கும் என்று கூறுவார்கள். கருடன் என்றால் யாருடைய மகன் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் யாருடைய மகன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

கருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்..!

கருடாழ்வார் வரலாறு:

சப்த ரிஷிகளில்  ஒருவரான கசியப்ப முனிவரின் மனைவிகள் தான் கத்ரு, வினதை. இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆனாலும் ஒருவருக்கொருவர் போட்டி பொறாமை கொண்டிருந்தனர். ஒருமுறை அவர்கள் இருவரும் கசியப்ப முனிவரிடம் தங்களுக்கு குழந்தைகள் வேண்டும் என வரம் கேட்டனர்.

முனிவரின் முதல் மனைவியான கத்ரு தனக்கு எல்லோரும் கண்டு பயன்படக்கூடிய வலிமை கொண்ட ஆயிரம் குழந்தைகள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். கசியப்பரும் வரத்தை வழங்கினார். இரண்டாவது மனைவியான வினதை தன் சகோதரியதை விட தனக்கு வலிமையும் ஆற்றலும் மிக்க இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று கேட்கிறாள். அதன்படியே கசியப்ப முனிவர் வரம் அளித்தார்.

சில காலம் கழித்து கத்ருவிற்கு எல்லோரும் கண்டு பயப்பட கூடிய ஆயிரம் நாகங்கள் குழந்தையாக பிறந்தன. வினதை கேட்டபடி தனக்கு இரண்டு முட்டைகள் தோன்றின. அதில் ஒரு முட்டையை வினதை அவசரப்பட்டு குடித்தால் அதில் இடுப்புக்கு கீழே வளர்ச்சி இல்லாத குழந்தை பிறந்தது. பிறகும் பொழுதே தன அவசரத்தால் தன்னை ஊனமாகிய தாயை கத்ருவிற்கு அடிமையாக வாழ்வாள் என்று சாபம் குடுத்தது. பிறகு அக்குழந்தை அருணன் என்று பெயரிட்டு சூரியனுக்கு தேரோட்டியாக மாறியது.

ஆயிரம் ஆண்டுகள் களைத்து இரண்டாவது முட்டையில் இருந்து மனித உடலுடன் கழுகு தலையுடன் ஒரு அபூர்வ குழந்தை பிறந்தது. கோடி சூரிய ப்ரகாசத்துடனும் எவராலும் வெல்ல முடியாத உடல் பலத்துடன் தோன்றிய அந்த குழந்தை தான் கருடன்.

ஒருமுறை வானத்தில் ஒரு குதிரை சென்றது அதனை பார்த்த கத்ருவிற்கும் வினதைக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதாவது அந்த குதிரை வெள்ளை நிறம் என்றால் வினதை, இல்லை அந்த குதிரை உடைய வாழ் கருப்பு என்றும் வேண்டும் என்றே கூறினார் கத்ரு. இருவரில் யாரு சொன்னது சரியோ அவர்கள் ஜெயிப்பார்கள் தோற்றவர்கழும் அவர்களின் குழந்தைகளும் ஜெயித்தவர்களுக்கு அடிமையாக வேண்டும் என்று கூறினார்கள்.

உண்மையில் அந்த குதிரை உடைய வாழ் வெள்ளை நிறம் கத்ரு பொய் சொல்கிறாள் என்று தெரிந்தும் தன பிள்ளைகளாகிய நாகங்களை அல்லது குறிப்பாக கருப்பு நிறத்தில் இருக்கும் நாகங்களை அந்த குதிரையின் வாழை சுற்றி கொள்ளுங்கள் என்று கூறினால். கத்ருவும் வினதையும் அந்த குதிரையை உற்று கவனித்த போது அந்த குதிரை வாழ் கருப்பு நிறத்தில் இருந்தது. பந்தயத்தில் தோற்றதால் வினதையும் தன் பிள்ளைகள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இருவரும் கத்ருவிற்கு அடிமையாகினர்.

அப்படியே சில காலம் கழிந்தது அடிமையாக வாழ்வதில் இருந்து விடுபட வழியை யோசித்தார் கருடன். தன் சகோதரர்களாகிய நாகங்களை அழைத்து என்ன செய்தால் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு நாகங்கள் மரணம் இல்லாமல் வாழ வேண்டும் என விரும்பிய கத்ருவும் நாகங்களும் தேவலோக அமிர்தத்தை எடுத்து வந்து எங்களுக்கு குடுத்தால் தான் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடியும் என்று சொன்னார்கள்.

அதனையேற்ற கருடன் தேவலோகம் சென்று இந்திரன் இடம் தேவலோக அமிர்தம் வேண்டும் என்று கேட்டார் அதை கொடுத்தால் தான் எங்களது அடிமைகாலம் முடியும் என்று கூறினார். இந்த அமிர்தத்தை நாகங்களிடம் குடுக்க போவதை அறிந்த இந்திரன். கருடன் நாகங்கள் எல்லாம் இந்த அமிர்தத்தை குடித்து மரணம் இல்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று இந்திரன் கேட்டு அமிர்தத்தை தர மறுத்தார். தன் பலத்தின் மேல் நம்பிக்கை கொண்ட கருடன் இந்திரனுடன் யுத்தமிட்டு வென்று அமிர்தத்தை எடுத்துக்கொண்டு வான்வெளியில் வந்துகொண்டிருந்தார்.

இதை பார்த்த விஷ்ணுபகவான் வான்வெளியில் வந்து கொண்டிருந்த கருடனை வழி மறுத்தார். விஷம் கொண்ட நாகங்களுக்கு இந்த அமிர்தத்தை கொடுத்தால் அவை மனித இனத்தையும் தேவர்களையும் அழித்து விடும் இது வேண்டாம் என்று கூறினார். ஆனால் கருடன் அடிமைத்தனம் நீங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விஷ்ணுவையும் என்னிடம் போர் புரிந்து ஜெயித்து அமிர்தத்தை இந்திரனிடம் கொடுங்கள் என்று சவால் விட்டார்.

விஷ்ணுவும் கருடனும் யுத்தம் செய்து கொண்டனர். யுத்தம் 21 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் விஷ்ணு கருடனிடம் தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்கு கொடுப்பது தர்மம் ஆகாது என்று உனக்கு ஏன் தெரியவில்லை. நாம் வீணாக போர் புரிவதில் இருவருக்கும் லாபம் கிடையாது. உனக்கு வேண்டிய வரங்களை கேள் தருகிறேன் என்றார் விஷ்ணு பகவான்.

ஆனால் கர்வம் தலைக்கு எரிய கருடனுக்கு நாங்கள் எல்லோரும் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கேட்க தெரியாமல். நீ யார் எனக்கு ஆறாம் தர வேண்டும் என்றால் என்னிடம் நீ வரம் கேள் தருகிறேன் என்றார். விஷ்ணு கருடனிடம் நீ எனக்கு வாகனமாக பணிபுரியும் பாக்கியத்தை வரமாக தா என்றார் விஷ்ணு. விஷ்ணு கேட்ட வாரத்தில் கருடன் உடைய கர்வம் உடைந்தது.

கருடன் விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து அவரை எதிர்த்து போரிட்டதற்காக மன்னிப்பு கேட்டார். மேலும் அமிர்தத்தை விஷ்ணுவிடம் குடுத்துவிட்டு விஷ்ணுவை வணங்கினார். விஷ்ணு கருடனிடம் அமிர்தம் அருந்தாமலேயே நீ மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாக நீ என்னுடன் இருப்பாய் என்று ஆசி கொடுத்தார். அதன்பிறகு வினதை அருணன் கருடன் ஆகியோர் கத்ருவின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டனர்.

கருட பகவான் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். விஷ்ணு பகவானின் வாகனம் கருடன் தான். விஷ்ணுவும் கருடனும் ஒன்று என்று கூறுவார்கள். கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர் என்று புராணங்கள் கூறுகிறது.

தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும். கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கருடன் வேறு பெயர்கள்..! | Garudan Veru Peyargal In Tamil..!

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement