புனித பிரான்சிஸ் சவேரியார் வரலாறு | Holy Francis Xavier History In Tamil
இந்தியாவில் கோவா ஒரு சுற்றுலா இடமாக இருக்கிறது என்று நமக்கு தெரியும். கோவா சுற்றுலா தளத்தில் பிரான்சிஸ் சவேரியார் உடல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? பிரான்சிஸ் சவேரியார் என்பவர் யார்? அவரது உடல் எதற்காக கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
புனித பிரான்சிஸ் சவேரியார் வரலாறு பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவர் எவ்வளவு சாதனைகள் படைத்திருக்கிறார் என்றும் இந்தியாவில் அவர் ஆற்றிய சில நல்ல பணிகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். ஏன் அவரது உடல் 472 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? பிரான்சிஸ் சவேரியார் எதற்காக இந்தியா வந்தார் என்பதையும் எதற்காக ஊழியம் செய்ய விரும்பினார் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
இயேசு பிறந்த கதை | Yesu Pirantha Kathai
பிரான்சிஸ் சவேரியார் வரலாறு:
பிரான்சிஸ் சவேரியார் பிறந்த இடம்:
- பிரான்சிஸ் சவேரியார் 1506 ஆம் ஆண்டு ஸ்பெயின் தேசத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி புகழ்மிக்க அரண்மனையில் பிறந்தார். 9 ஆவது வயதிலே தந்தையை இழந்த இவர் தாயின் பாராமரிப்பிலேயே அரண்மனையில் படித்து வளர்ந்தார். 1525 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்காக பாரிஸ் சென்று 11 வருடங்கள் அங்கிருந்து தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
- 1530 முதல் 1534 வரை பேராசிரியர் ஆக பணியாற்றினார் அதன் பிறகு 1534 முதல் 1536 வரை இறையியல் பயின்று இறைவன் இயேசுவிற்கு தொண்டு செய்ய விரும்பினார். ஒருவன் உலகம் முழுவதும் ஆதாயமாகிக் கொண்டாலும் தன் ஆத்மாவை நஷ்டப்படுத்தினால் என்ன பிரயோஜனம் என்று அவரது நண்பர் இஞ்ஞாசியார் கேட்ட கேள்வி அவரை சிந்திக்க வைத்தது.
- அப்பொழுது தான் அவர் இயேசுவிற்காக ஊழியம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். கண்டம் விட்டு கண்டம் போய் முன்பின் அறியாத இடத்தில தங்கி ஒல்லியாம் செய்ய வேண்டும் என்ற மிஷனரி பாரத்தோடு இயேசு சபையில் இணைந்தார்.
பிரான்சிஸ் சவேரியார் இந்தியா வந்தார்:
- 1542 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி கோவா வந்தடைந்தார். அங்கு அவர் தனது ஊழியம் செய்யும் பணியைத் தொடங்கினார். அவர் மக்களுக்கு கிறிஸ்தவக் கோட்பாடுகளை எளிய முறையில் கற்பித்தார். அவரது அன்பும் கருணையும் மக்களை கவர்ந்தன.
- அவர் 4 மாதங்கள் கோவாவில் ஊழியம் செய்த பிறகு தமிழகம் வந்தார். தென்னிந்திய கடற்படை கிராமங்களில் அவர் மீனவ மக்களிடையே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அவர் தமிழ் மொழியைக் கற்று மக்களுடன் நெருங்கிப் பழகினார். அவர் பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. இதனால் அவர் ‘தமிழகத்தின் அப்போஸ்தலன்’ என்று அழைக்கப்பட்டார்.
பிரான்சிஸ் சவேரியார் மறைந்த இடம்:
- பிரான்சிஸ் சவேரியார் சுமார் 38,000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாக பயணம் செய்து தனது இறைப்பணியை செய்துள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது அவரை குறித்த ஆய்வு நூல்கள்.
- பல்வேறு கால சூழ்நிலைகளில் தனிமையாக பயணம் செய்ததால் அவரது உடல் பலவீனம் அடைந்தது. சீன தேசத்தில் சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கப்பட்டு 1552 ஆம் வருடம் டிசம்பர் 3 ஆம் தேதி மரணமடைந்தார்.
- அவரை அப்பொழுது கவனித்து கொண்டிருந்த ஜார்ஜ் அள்வேரஸ் என்பவர் சீனாவின் அந்த குறிப்பிட்ட தீவிலே அடக்கம் செய்கிறார்.
பிரான்சிஸ் சவேரியாரின் உடல் இந்தியாவில் வைக்கப்பட்டது ஏன்?
- இந்த நிலையில் அவர் இந்தியாவில் அதிகமாக ஊழியம் செய்ய விரும்பினார் அவரை இந்தியாவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவரது உடல் 1553 ஆம் ஆண்டு கோவாவிற்கு கொண்டுவரப்பட்டது.
- அன்று முதல் அவரது உடல் பாதுகாப்பாக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 472 ஆண்டுகள் அவரது உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு ஆய்வாளர்களும் அறிஞர்களும் இவரது உடலை பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தபோதும் இவரது உடல் நாச்சம் ஏதும் இல்லாமல் இருந்தபடியே இருக்கிறது என்று உறுதி செய்துள்ளனர்.
பிரான்சிஸ் சவேரியாரின் உடல் கண்காட்சி:
- இவரது உடல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. மேலும் பிரான்சிஸ் சவேரியார் பயன்படுத்திய பொருள்களும் காட்சிப்படுத்தப்படுகிறது.
- புனித பிரான்சிஸ் சவேரியாரின் புனித நினைவுச்சின்னங்களின் 18வது புனிதமான கண்காட்சி இந்தியாவின் கோவாவில் நடைபெறும். நவம்பர் 21, 2024 முதல் ஜனவரி 5, 2025 வரை காட்சியளிக்கப்படும்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |