பெருந்தலைவர் காமராஜர் வரலாறு | Kamarajar Life History in Tamil | Kamarajar in Valkai Varalaru
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய வரலாறு பகுதியில் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்க்கலாம். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி நாட்டிற்காக பல நன்மைகளை செய்தவர் காமராஜர் அவர்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகமாக பாடுபட்டவர் தென்னாட்டு காந்தி என்றழைக்கப்படும் காமராஜர். இப்படி இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவரை பற்றி ஒரு பக்கத்திலும் ஒரு பதிவிலும் சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு இவர் செய்த தொண்டுகள் அதிகம். எனவே, நாம் இந்த பதிவில் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும், பல சுவாரசியமான தகவல்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Kamarajar History in Tamil:
பிறப்பு:
- இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15-ம் தேதி 1903-ம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார் ஆவார். இவருடைய இயற்பெயர் காமாட்சி. சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அழைப்பார், பின்னர் இந்த பெயர் மருவி காமராஜர் என்றாயிற்று.
- இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த காமராஜரால் பள்ளி படிப்பை தொடங்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.
சிறை வாழ்க்கை:
- வேலை செய்து கொண்டிருக்கும் போது பல தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் வந்தது. அரசியலில் இருந்த ஆர்வத்தாலும், நாட்டுப்பற்றாலும் 1920-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார்.
- 1930-ம் ஆண்டு நடைபெற்ற (வேதாரண்யம்) உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட போது காமராஜர் அவர்கள் கல்கத்தாவில் உள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு வருடம் அலிப்பூர் சிறையில் தண்டனைக்கு உள்ளானார்.
- 1940-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு, 1942-ம் ஆண்டு நடந்த ஆகஸ்ட் புரட்சி போன்ற போராட்டங்களில் கலந்து கொண்ட போது சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலமைச்சர் காமராஜர்:
- kamarajar speech in tamil: காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்பவராவார். அவரது சொற்பொழிவையும் மேடைப்பேச்சையும் கேட்டு வளர்ந்தார். காமராஜரை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக சத்தியமூர்த்தி நியமித்தார்.
- ராஜாஜி அவர்கள் அரசியலில் இருந்த சிக்கல்கள் காரணமாக தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அப்போது சட்டசபையில் சுப்பிரமணியன் என்பவரை எதிர்த்து காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக 1953-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
கல்விப்பனி – காமராஜர் வாழ்க்கை வரலாறு:
- காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தையும், இலவச கல்வி, சீருடை திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். மூடி இருந்த 6000 பள்ளிகளையும், 17,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் திறந்து வைத்தார். இதனால் தான் இவரை எல்லோரும் அன்பாக கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்று அழைக்கின்றனர்.
தொழிற்சாலைகள்:
- காமராஜர் வாழ்க்கை வரலாறு தமிழ்: தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணு மின்நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலைகளை உருவாக்கினார்.
நீர்பாசன திட்டம்:
- விவசாயம், நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து பல்வேறு நீர்வள திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் கர்மவீரர் காமராஜர்.
தேசிய தலைவர்:
- இவர் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை பதவியல் இருந்த பெருமைக்குரியவர். இவர் நினைத்திருந்தால் இன்னும் பல முறை கூட முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்.
எளிமை குணம்:
- மூன்று முறை முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வசித்து, கதர் ஆடையை உடுத்திக்கொண்டு இருந்தார்.
மறைவு:
- எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் வாழ்ந்த தியாக செம்மல் கர்மவீரர் காமராஜர் அவர்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி 1975-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவருடைய உடல் இப்பூமியை விட்டு மறைந்தாலும் இவருடைய புகழ் இந்த உலகை விட்டு மறையாது.
நான் விரும்பும் தலைவர் காமராசர் கட்டுரை |
காமராஜர் பொன்மொழிகள் |
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |